108 சிவ தாண்டவங்கள்
நடனக்கலைக்கு நாயகனாகத் திகழும் சிவபெருமான் பல்வேறு வகையான நடனங்களை ஆடினார். அவற்றுள் அவர் ஆடிய 108 தாண்டவங்கள் சிறப்பானவையாக கருதப்படுகின்றன. அவை 108 சிவதாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.
108 சிவ தாண்டவங்கள்
சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் 108. அவை, அவரால் மாலை வேளைகளில் ஆடப்பட்டன என்றும், அவை கரம், சிரம், பதம், நிலை முதலிய ஆறு உறுப்புகளையுடையவை என்றும் பரத சாஸ்திரம் கூறுகிறது.
108 தாண்டவங்களையும் சிவபெருமான் தண்டு முனிவர் எனும் நந்திதேவருக்குக் கற்பித்தார். நந்தி தேவர், பரத முனிக்குக் கற்பித்தார். பரத முனிவர் மூலம் நாட்டிய சாஸ்திரம் உலகில் பரவியது.
சிவ தாண்டவங்களின் சிறப்பு
சிவபெருமான் நடனமாடுவதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்றும், அவரது ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே எனவும் திருமுறைகள் கூறுகின்றன. அதன்படி உயிர்களின் மாயை உணர்வானது நீங்கி, இறைவனை நோக்கி அவர்களது மனங்களைச் செலுத்தவே சிவபெருமான் ஆடல் நிகழ்த்துவதாக மறைகள் குறிப்பிடுகின்றன. உயிர்களுக்கு அருள் செய்யும் சிவபெருமானின் பல்வேறு வகை நடனங்களே சிவ தாண்டவத்தின் சிறப்பாகும்.
108 சிவ தாண்டவங்கள் பட்டியல்
உசாத்துணை
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- சிவதாண்டவம், இரா. இராமகிருட்டிணன், இராமையா பதிப்பகம்: அமேசான் தளம்
- பரதசேனாபதீயம்: தமிழ் இணைய மின்னூலகம்
- கூத்த நூல்: ஆர்கைவ்தளம்
- 108 சிவ தாண்டவங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Nov-2023, 07:51:57 IST