under review

108 சிவ தாண்டவ விளக்கம்-விநிவிர்த்தம்

From Tamil Wiki
விநிவிர்த்தம் (இருப்புத் திருப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - விநிவிர்த்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று விநிவிர்த்தம். தமிழில் இது 'இருப்புத் திருப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தியிரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

சூசிஹஸ்தமாக, வலது காலை தொடைப்பக்கத்தில் வளைத்து, ஸ்வஸ்திகம் போல் வைத்து, மற்றொரு காலைத் திருப்பும் போது, தொடை திரும்பும்படி பக்கங்களில் ஹம்ஸபட்சம் அமையச் சுற்றி ஆடுவது விநிவிர்த்தம்.

உசாத்துணை


✅Finalised Page