under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சதுரம்

From Tamil Wiki
சதுரம்

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சதுரம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று சதுரம். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி ஒன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது காலைக் குட்டிதமாக அமைத்து இடது கை அஞ்சிதமாயும், வலது கை சதுரமாக அமையக் கைகளை நீட்டி நின்று ஆடுவது 'சதுர தாண்டவம்' என அழைக்கப்படும்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:20:15 IST