under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கண்டசூசி

From Tamil Wiki
கண்டசூசி (கன்னளி)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கண்டசூசி. தமிழில் இது 'கன்னளி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி ஒன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

சூசி பாதமாக, பக்கத்தில் வளைய நின்று, ஒரு கையை மார்பில் வைத்து, மற்றொருகை கண்டத்தில் சுட்டும்படி வைத்துக் கொண்டு நின்று ஆடுவது கண்டசூசி.

உசாத்துணை


✅Finalised Page