108 சிவ தாண்டவ விளக்கம்-நிதம்பம்
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - நிதம்பம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, நிதம்பம். தமிழில் இது 'நுசுப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி ஐந்தாவது கரணம்.
சிவனின் ஆடல்
மேல் நோக்கிய விரல்களையுடைய பதாக முத்திரையோடு கூடிய கைகளால் தலை வரை கொண்டு சென்று, பின்பு திரும்பியதாகக் கைகளை அமைத்து, சுற்றிலும் பார்க்கக் கூடியதாகப் பதாகக் கையை அமைத்து, பின்பு உடம்பை நோக்கியதாகக் கையைத் தொங்கவிட்டு, நிதம்ப நிருத்த ஹஸ்தத்துடன் ஆடுவது நிதம்பம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 02:23:32 IST