under review

108 சிவ தாண்டவ விளக்கம்-லலிதம்

From Tamil Wiki
லலிதம் (மென்நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - லலிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று லலிதம். தமிழில் இது 'மென்நடம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கையைக் கரிஹஸ்தமாக நீட்டி, இடது கையைத் தலைக்கு நேராக நீட்டி, பலமுறை தரையைத் தொட்டும் வளைத்தும் புறந்தெரியும்படியான பாதத்துடன் ஆடுவது லலிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page