under review

இந்தியா டுடே (தமிழ் இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
Line 14: Line 14:
இந்தியா டுடே தமிழ், ஆங்கில இந்தியா டுடே இதழில் வெளியான அரசியல், தேசநலன், பாதுகாப்பு, பொருளாதாரம், உள்நாட்டுப் பிரச்சனைகள் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தது. அவற்றுடன் தமிழ் வாசகர்களுக்கான பல பகுதிகளையும் வெளியிட்டது. தலையங்கம், கருத்துப் படங்கள், நேர்காணல்கள், விருந்தினர் பக்கம், புத்தக மதிப்புரை, சிறுகதை, கவிதை, நாடகம் போன்றவற்றை தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றன. இலங்கைப் பிரச்சனை, விடுதலைப்புலிகளின் தமிழ்நாட்டு ஊடுருவல்கள், அதன் விளைவுகள், பாபர் மசூதி இடிப்பு போன்ற செய்திகளைத் தாங்கி ஆழமான பல கட்டுரைகள் வெளியாகின.  புலனாய்வுச் செய்திகளை மிக விரிவான பின்னணியில் வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் இடமளித்தது.  

இந்தியா டுடே தமிழ் இதழில் பல்வேறு மாநில வாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, கலாசாரம், விழாக்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. தமிழ்நாட்டின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், இட ஒதுக்கீடு போன்ற துறைகளைப் பற்றிய காத்திரமான கட்டுரைகள் பல எழுத்தாளர்கள், விமர்சகர்களால் எழுதப்பட்டன. இளைஞர் சிறப்பிதழ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பிதழ்களையும் அவ்வப்போது இந்தியா டுடே வெளியிட்டது. இதழில் வெளியான கட்டுரைகள், நேர்காணல்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளை இந்தியா டுடே எதிர்கொண்டது. ‘குரல்கள்' என்ற தலைப்பில் பல்வேறு விவாதங்கள், கருத்துரைகள் இடம்பெற்றன. வாசகர் கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. வண்ண விளம்பரங்கள் அதிகம் வெளியாகின.
இந்தியா டுடே தமிழ் இதழில் பல்வேறு மாநில வாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, கலாசாரம், விழாக்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. தமிழ்நாட்டின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், இட ஒதுக்கீடு போன்ற துறைகளைப் பற்றிய காத்திரமான கட்டுரைகள் பல எழுத்தாளர்கள், விமர்சகர்களால் எழுதப்பட்டன. இளைஞர் சிறப்பிதழ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பிதழ்களையும் அவ்வப்போது இந்தியா டுடே வெளியிட்டது. இதழில் வெளியான கட்டுரைகள், நேர்காணல்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளை இந்தியா டுடே எதிர்கொண்டது. 'குரல்கள்' என்ற தலைப்பில் பல்வேறு விவாதங்கள், கருத்துரைகள் இடம்பெற்றன. வாசகர் கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. வண்ண விளம்பரங்கள் அதிகம் வெளியாகின.

== இலக்கிய ஆண்டு மலர்கள் ==
== இலக்கிய ஆண்டு மலர்கள் ==

Revision as of 17:29, 22 November 2025

இந்தியா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இந்தியா (பெயர் பட்டியல்)
இந்தியா டுடே - தமிழ் இதழ்

இந்தியா டுடே (1989-2015) தமிழில் வெளிவந்த செய்தி இதழ்களுள் ஒன்று. இந்தியா டுடேயின் ஆங்கிலப் பதிப்பு டிசம்பர் 01, 1975 முதல் வெளிவந்தது. 'லிவிங் மீடியா இந்தியா' நிறுவனம் (Living Media India Limited) இவ்விதழைத் தொடங்கி நடத்தியது. தமிழ்ப் பதிப்பு 1989 முதல் வெளியானது. இதழின் முதன்மை ஆசிரியர்: அருண்பூரி. முதுநிலை ஆசிரியராக பிரபுசாவ்லா செயல்பட்டார். ஆசிரியர்: வாஸந்தி. இந்தியா டுடே இதழ் வெளியிட்ட தமிழ் இலக்கிய ஆண்டு மலர்கள் சிறந்த வாசக வரவேற்பைப் பெற்றன. 2015-ல் இதழ் நிறுத்தப்பட்டது.

வெளியீடு

இந்தியா டுடேவின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 05, 1989-ல் தொடங்கப்பட்டது. இந்தியா டுடே குழும இதழின் ஆசிரியராக அருண்பூரி செயல்பட்டார். முதுநிலை ஆசிரியராக பிரபுசாவ்லா இயங்கினார். தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக வாஸந்தி செயல்பட்டார். அவருக்குப் பின் மாலன் ஆசிரியரானார். பிற்காலத்தில் சதாசிவம் தலைமையில் பானுமதி, எஸ். செந்தில்குமார், இரா. நரசிம்மன், கவின்மலர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் இதழைப் பொறுப்பேற்று நடத்தினர்.

இந்தியா டுடே தொடக்கத்தில் மாதமிருமுறை இதழாக வெளியானது. பின்னர் வார இதழாக வெளிவந்தது. இந்தியா டுடே ஆரம்பித்த சில மாதங்களிலேயே இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றது. தொடர்ந்து பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி தமிழின் முன்னணிச் செய்தி இதழ்களுள் ஒன்றானது. பின்னர் விற்பனை சரிந்து 2015-ல் நிறுத்தப்பட்டது.

இதழின் நோக்கம்

இதழின் நோக்கமாக, செப்டம்பர் 05, 1989 தேதியிட்ட முதல் இதழில், ஆசிரியர் அருண்பூரி, "பதிப்பு என்பது வெறும் மொழிபெயர்ப்புப் பதிப்பு அல்ல. எங்கள் ஆங்கில இதழிற்கு முதுகெலும்பாக விளங்கும் செய்தி அறிக்கைகளை இந்தப் பதிப்பில் பயன்படுத்திக் கொள்வோம். என்றாலும், தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றிய முழுமையான செய்திகள், உங்கள் விருப்பமான எழுத்தாளர்களின் சிறுகதைகள். சினிமா, தமிழ் இலக்கியம், கலை இவை பற்றிய கட்டுரைகள், விருந்தினர் பக்கம் போன்ற பல பகுதிகளைக் கொண்டு இது தனித்தன்மையானதாக விளங்கும்" என்று குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

இந்தியா டுடே தமிழ், ஆங்கில இந்தியா டுடே இதழில் வெளியான அரசியல், தேசநலன், பாதுகாப்பு, பொருளாதாரம், உள்நாட்டுப் பிரச்சனைகள் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தது. அவற்றுடன் தமிழ் வாசகர்களுக்கான பல பகுதிகளையும் வெளியிட்டது. தலையங்கம், கருத்துப் படங்கள், நேர்காணல்கள், விருந்தினர் பக்கம், புத்தக மதிப்புரை, சிறுகதை, கவிதை, நாடகம் போன்றவற்றை தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றன. இலங்கைப் பிரச்சனை, விடுதலைப்புலிகளின் தமிழ்நாட்டு ஊடுருவல்கள், அதன் விளைவுகள், பாபர் மசூதி இடிப்பு போன்ற செய்திகளைத் தாங்கி ஆழமான பல கட்டுரைகள் வெளியாகின. புலனாய்வுச் செய்திகளை மிக விரிவான பின்னணியில் வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் இடமளித்தது.

இந்தியா டுடே தமிழ் இதழில் பல்வேறு மாநில வாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, கலாசாரம், விழாக்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. தமிழ்நாட்டின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், இட ஒதுக்கீடு போன்ற துறைகளைப் பற்றிய காத்திரமான கட்டுரைகள் பல எழுத்தாளர்கள், விமர்சகர்களால் எழுதப்பட்டன. இளைஞர் சிறப்பிதழ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பிதழ்களையும் அவ்வப்போது இந்தியா டுடே வெளியிட்டது. இதழில் வெளியான கட்டுரைகள், நேர்காணல்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளை இந்தியா டுடே எதிர்கொண்டது. 'குரல்கள்' என்ற தலைப்பில் பல்வேறு விவாதங்கள், கருத்துரைகள் இடம்பெற்றன. வாசகர் கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. வண்ண விளம்பரங்கள் அதிகம் வெளியாகின.

இலக்கிய ஆண்டு மலர்கள்

1993 தொடங்கி இந்தியா டுடே வெளியிட்ட இலக்கிய ஆண்டு மலர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. அசோகமித்திரனின் மூவர், ராஜம் கிருஷ்ணனின் பேரணி, நேத்திர தரிசனம், வாஸந்தியின் கொலை, சுஜாதாவின் மஞ்சள் ரத்தம், ஜெயமோகனின் நாகம், ஆயிரம்கால் மண்டபம், விரிந்த கரங்கள், சோ. தர்மனின் வலைகள், திலகவதியின் தண்டனை போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாக அறியப்பட்டன. இந்திரா பார்த்தசாரதியின் தர்மம், தீர்வு முதலிய நாடகங்கள் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

சிறுகதை

மற்றும் பலர்

கவிதை

மற்றும் பலர்

கட்டுரை
  • வாஸந்தி
நாடகம்

மற்றும் பலர்

மொழிபெயர்ப்பு

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

இந்தியா டுடே தமிழ் இதழ் பிப்ரவரி 2015-ல் நிறுத்தப்பட்டது.

மதிப்பீடு

இந்தியா டுடே இந்தியாவின் முன்னணி செய்தி இதழாக அறியப்பட்டது. பக்கச்சார்பற்ற, கூர்மையான கருத்துக்களாலும், உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பாலும் அதிக வாசகர்களால் விரும்பப்பட்டது. அதன் தமிழ்ப்பதிப்பு பரவலாக வாசிக்கப்படும் இதழாக அமைந்தது. தனது இலக்கிய ஆண்டு மலர்கள் மூலம் வணிக நோக்கம் அல்லாத தரமான இலக்கியப் படைப்புகள் பலவற்றை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த செய்தி இதழாக இந்தியா டுடே மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2024, 18:13:19 IST