இந்தியா டுடே (இதழ்)

From Tamil Wiki
இந்தியா டுடே ஆங்கில் இதழ் முகப்பு (ஜன. 15, 2024)

இந்தியா டுடே (India Today) மும்பையிலிருந்து வெளிவரும் ஓர் இந்தியச் செய்தி இதழ். இந்த இதழ், அதிகமான வாசகர்களைக் கொண்டு இந்தியாவில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. 1975-ம் ஆண்டில் 5,000 பிரதிகளுடன் துவங்கி, டிசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டு நிறைவு இதழின் போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான பிரதிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது.

துவக்கம்

இந்தியா டுடே 1975-ம் ஆண்டு, 'லிவிங் மீடியா இந்தியா’ நிறுவனத்தால் (Living Media India Limited) உருவாக்கப்பட்டது. இந்த இதழ் முதன்மையாக ஆங்கில மொழியில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதே பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கு என பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியானது. இந்தியா டுடே துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து இதன் தலைமை ஆசிரியராக மூப்பத்தாண்டுகளாக பணிபுரிந்தவர் அருண் பூரி.

வளர்ச்சி

இந்தியா டுடே தனது வலைத்தளத்தை 1995-ல் தொடங்கியது. இது ஆன்லைன் இருப்பை நிறுவிய இந்தியாவின் ஆரம்பகால ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும்.

டிஜிட்டல் பரிமாற்றம்

2014-ம் ஆண்டில், இந்தியா டுடே டெய்லிஓ (DailyO) என்ற புதிய ஆன்லைன் கருத்து சார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. இது இளைஞர்களுக்காக, இளைஞர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு செய்தி மற்றும் கருத்து தளம். டெய்லிஓ அதன் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் சுருக்கமாகவும் செய்தியை அளிக்க வடிவமைக்கப்பட்டது.

வீழ்ச்சி

India Today (Feb 25, 2015)
இந்தியா டுடே கடைசி தமிழ் பதிப்பு (பிப். 25, 2015)

டிஜிட்டல் உலகில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் குறைவதற்கு ஆரம்ப அறிகுறியாக, 2015-ம் ஆண்டு இந்தியா டுடே இதழ் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது பத்திரிகையின் அச்சு பதிப்புகளை நிறுத்த முடிவு செய்தது. இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மட்டுமே இதழ் வெளியாகிறது.

ஆட்சி மாற்றம்

அக்டோபர் 2017-ல், அருண் பூரி இந்தியா டுடே குழுமத்தின் கட்டுப்பாட்டை தனது மகள் கல்லி பூரியிடம் ஒப்படைத்தார்.

இதர நிறுவனங்கள்

முந்தைய இந்தியா டுடே இதழ் முகப்பு (நவ. 11, 2013)

இந்தியா டுடே இதழின் மேலாண் நிறுவனமான இந்தியா டுடே குழுமத்தின் இதர நிறுவனங்கள்

  • வானொலி நிலையம் - இஷ்க் 104.8 FM
  • 4 தொலைக்காட்சி அலைவரிசைகள்
    • ஆஜ் தக்
    • ஆஜ் தக் HD
    • குட் நியூஸ் டுடே
    • இந்தியா டுடே (ஆங்கிலம்)
  • இந்தியா டுடே மீடியா கல்வி நிறுவனம்
  • தக்.இன் (Tak.in) - 18 இணைய சானல்களை உள்ளடக்கிய நிறுவனம்
  • டெய்லிஓ (DailyO) இணையதளம்
  • பதிப்பகங்கள்
    • கேர் டுடே (Care Today)
    • தாம்ஸன் பிரஸ் (Thomson Press)
    • மென்ஸ் ஹெல்த் (Men’s Health)
    • வுமன்ஸ் ஹெல்த் (Women’s Health)
    • மணி டுடே (Money Today)
    • ஆட்டோ பில்ட் (Auto Bild)
    • கூட் ஹவுஸ்கீப்பிங் (Good Housekeeping)
    • கேட்கெட்ஸ் அண்ட் கிஸ்மோஸ் (Gadgets and Gizmos)
    • பிஸ்னஸ் டுடே (Business Today)
    • ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்தியா (Reader's Digest India)
    • ஹர்பெர்ஸ் பஜார் (Harper's Bazaar)
    • ஆட்டோ டுடே (Auto Today)
    • காஸ்மோபொலிடன் இந்தியா (Cosmopolitan India)
    • ப்ரைட்ஸ் டுடே (Brides Today)

உசாத்துணை

Template:Bring created