under review

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100

From Tamil Wiki
Revision as of 15:26, 11 May 2024 by Logamadevi (talk | contribs)
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூல்

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 (2010), தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி வெளியிட்ட நூல். தமிழ் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் உழைத்த தமிழறிஞர்கள் நூறு பேரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியது. இதன் ஆசிரியர் என். ஸ்ரீநிவாஸன்.

பதிப்பு, வெளியீடு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட நூல். இதனை எழுதியவர் என். ஸ்ரீநிவாஸன். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கிளை நிறுவனமான தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி இந்த நூலை, 2010-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலின் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் பிறந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 'விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்', 'உடலியல் கலைக்களஞ்சியம்', 'உலக மகா கொடுங்கோலர்கள் 100,' 'உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100', 'உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100', 'அரண்மனை ரகசியங்கள் 100', 'விந்தை உயிரினங்கள் 100', 'வியப்பூட்டும் உண்மைகள் 100', நம்ப முடியாத உண்மைகள் 100 போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

நூல் அமைப்பு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில், கீழ்க்காணும் நூறு தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றது.

உள்ளடக்கம்

தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில் இடம் பெற்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் பற்றிய குறிப்புகள் இதே ஆசிரியர் எழுதிய வேறொரு நூலில் இடம்பெற்றதால் இந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ் வளர்த்த சான்றோர்களின் பிறப்பு, கல்வி, பிற வாழ்க்கைக் குறிப்புகள், சாதனைகள், அவர்களது தமிழுக்கான முயற்சிகள் போன்றவை இந்நூலில் சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்டன.

மதிப்பீடு

தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழ் வளர்த்த சான்றோர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூலாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page