under review

அல்லயன்ஸ் கம்பெனி

From Tamil Wiki
அல்லயன்ஸ் அடையாளச் சின்னம்

அல்லயன்ஸ் கம்பெனி (1901) (அல்லயன்ஸ்; அல்லயன்ஸ் பதிப்பகம்; அல்லயன்ஸ் நிறுவனம்) தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. இதனை வி. குப்புஸ்வாமி ஐயர் நிறுவினார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு, பொது அறிவு என்று பல பிரிவுகளில் பல்லாயிரக்கணக்கான நூல்களை அல்லயன்ஸ் வெளியிட்டது. அல்லயன்ஸ், தமிழ்நாட்டின் நூற்றாண்டு கடந்த முன்னோடிப் பதிப்பகம்.

அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்

தோற்றம்

அல்லயன்ஸ் கம்பெனி, 1901-ல், வி. குப்புஸ்வாமி ஐயரால் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்பே 1896-ல், ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்திய குப்புஸ்வாமி ஐயர், எழுதுபொருள்களுடன் சிறு சிறு நூல்களையும் வெளியிட்டு அனுபவம் பெற்றிருந்தார். அந்த அனுபவத்தில் அல்லயன்ஸ் கம்பெனியைத் தொடங்கினார். எழுத்தாளர்-பதிப்பாளர்-வாசகர் கூட்டமைப்பைக் குறிக்கும் வகையில் ‘அல்லயன்ஸ்’ என்று பெயரைச் சூட்டினார். ஸ்ரீ ரமண மகரிஷிகளின் ஆலோசனைப்படி அறிவே விளக்கு என்பதைத் தனது சின்னமாகக் கொண்டது அல்லயன்ஸ்.

அல்லயன்ஸ் வெளியிட்ட தொடக்க கால நூல்கள்

நூல் வெளியீட்டு வரலாறு

தேசபக்தி நூல்கள்

அல்லயன்ஸ் கம்பெனி, தொடக்க காலத்தில் தேச பக்தியைத் தூண்டும் வகையில் பல நூல்களை வெளியிட்டது. வி. குப்புஸ்வாமி ஐயரின் தேச சேவையால் கவரப்பட்ட ராஜாஜி தனது அனைத்து நூல்களையும் வெளியிடும் உரிமையை வி. குப்புஸ்வாமி ஐயருக்கு வழங்கினார்.

வி. குப்புஸ்வாமி ஐயர், 1937-ல் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் அனுமதி பெற்று அவரது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். ஆங்கிலேய அரசால் அவை தடை செய்யப்பட்டன. ஆனாலும் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் சேர அந்த இரண்டு நூல்களும் காரணமாக அமைந்தன. காங்கிரஸ் இயக்க வரலாறு, தேசியத் தலைவர்களின் வரலாறு, காங்கிரஸ் மாநாடுகளின் வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டு தேசபக்தி எழுச்சிக்கு அல்லயன்ஸ் நிறுவனம் உதவியது. பதிப்புலக வெற்றி காரணமாக, குப்புஸ்வாமி ஐயர், ‘அல்லயன்ஸ் குப்புஸ்வாமி ஐயர்’ என்று அழைக்கப்பட்டார்.

1932 -ஆம் ஆண்டு ப்ரெஞ்ச் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்டு (Romain Rolland) எழுதிய 'மகாத்மா காந்தி' என்ற நூலை அவரது அனுமதியுடன் தமிழில் அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் வெளியிட்டார். மேலும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், சென்னை உப்பு சத்தியாகிரகம் ஆகிய நிகழ்வுகளையும் நூல்களாக வெளியிட்டார்.

கதைக்கோவை - சிறுகதைத் தொகுப்பு
இலக்கியம்

அரசியல், சமூகம் சார்ந்து நூல்களை வெளியிட்டு வந்த அல்லயன்ஸ், இலக்கியத்தின் மீதும் கவனம் செலுத்தியது. விவேகபோதினி இதழில் வெளியான சில படைப்புகள் நூலாக்கம் பெற்றன. தொடர்ந்து ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில், ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ தொடங்கி ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை அல்லயன்ஸ் வெளியிட்டது. 1942-ல் 40 பிரபல எழுத்தாளர்களின் 40 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு கதைக்கோவை – 1 என்ற தலைப்பில் வெளிவந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கதைக் கோவை வரிசையில் நான்கு தொகுதிகள் வெளியானது. தொடர்ந்து பல இலக்கிய நூல்கள் வெளிவந்தன.

மொழிபெயர்ப்பு

அல்லயன்ஸ் பதிப்பகம், தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் வங்க மொழியிலிருந்து பங்கிம் சந்திரர், சரத்சந்திரர், தாகூர் போன்றோரது நூல்களையும், ஹிந்தியிலிருந்து பிரேம்சந்த் போன்றவர்களின் படைப்புகளையும், மராத்தியிலிருந்து வி.எஸ். காண்டேகர் போன்றோரது நூல்களையும் வெளியிட்டது. வங்கத்துச் சிறுகதைகள், இந்தியக் கதைத் திரட்டு, மலையாளச் சிறுகதைகள், தெலுங்குச் சிறுகதைகள், கன்னடச் சிறுகதைகள், ஹிந்தி - உருதுச் சிறுகதைகள் எனத் தனித்தனித் தொகுதிகளாகப் பல நூல்கள் வெளிவந்தன.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், தமிழில், முதன் முதலில் அல்லயன்ஸ் மூலம் வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் தொடர்ந்து இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை வெளியிட்டது.

விவேகபோதினி இதழ்-1909

இதழியல்

குப்புஸ்வாமி ஐயர் 1908 முதல் 1932 வரை விவேகபோதினி என்ற இதழை நடத்தினார். 25,000 சந்தாதாரர்களைக் கொண்ட அவ்விதழில்தான் தமிழின் முதல் சிறுகதையாக மதிப்பிடப்படும் வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ வெளியானது. தமிழில் வெளியான முதல் பெண் எழுத்தாளரின் சிறுகதையாக மதிப்பிடப்படும் அம்மணி அம்மாள் எழுதிய ‘சங்கல்பமும் சம்பவமும்’ சிறுகதையும் விவேகபோதினி இதழில் தான் வெளியானது. திலகர், மகாதேவ கோவிந்த ரானடே, ஜி. சுப்பிரமணிய ஐயர், மதன் மோகன் மாளவியா போன்ற தேச பக்தர்களின் வரலாறுகள் அவ்விதழில் தொடராக வெளிவந்தன.

விவேகபோதினி இதழ் மூலம் குப்புஸ்வாமி ஐயருக்கு சி. சுப்ரமண்ய பாரதியார், வ.வே.சு. ஐயர், சுத்தானந்த பாரதி, உ.வே.சாமிநாத ஐயர், பாபநாசம் சிவன், எம். ராதாகிருஷ்ண பிள்ளை, பி.ஸ்ரீ. ஆச்சார்யா. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலரது நட்பும் அறிமுகமும் கிடைத்தது. அவர்களுடைய படைப்புகள் பலவற்றை அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., எஸ்.வி. வி., கி.வா. ஜகந்நாதன், த.நா. சேனாபதி, கு.ப. ராஜகோபாலன், தி.ஜ. ரங்கநாதன் எனப் பலர் அல்லயன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினர்.

பதிப்பக நூற்றாண்டு

அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் 1949-ல், காலமானார். குப்புஸ்வாமி ஐயரின் புதல்வர்களான கே. வேங்கடராமன், வி.கே. பாலசுப்ரமணியன், கே.வி.எஸ்.மணி ஆகியோர் பிரசுரத்தையும் அச்சகத்தையும் தொடர்ந்து நடத்தினர். 1985 முதல் குப்புஸ்வாமி ஐயரின் பேரனும், கே.வி.எஸ்.மணியின் மகனுமான வி. ஸ்ரீநிவாஸன், அல்லயன்ஸ் பிரசுர நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பொறுப்பில் புதிய புதிய தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியாகின.

அக்டோபர் 18, 2002-ல், அல்லயன்ஸ் கம்பெனியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 125 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது அல்லயன்ஸ்.

நூல்கள் பட்டியல்

அல்லயன்ஸ் பதிப்பகம் பல்லாயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டது. அவற்றுள் சில…

தேசபக்தர்கள் வரலாறு
  • லோகமான்ய திலகர்
  • லாலா லஜபதி ராய்
  • மோதிலால் நேரு
  • சிந்தரஞ்சன தாஸ்
  • பண்டித மாளவ்யா
  • ராஜாஜி
  • தலைவர் ஜவஹர்
  • விட்டல்பாய் படேல்
  • அரங்கசாமி ஐயங்கார்
  • சாய்பகதுர் அனந்தசார்லு
  • அபுல்கலாம் ஆஸாத்
  • எல்லைக்காந்தி கபார்கான்
  • கவியரசி ஸரோஜனி தேவி
  • அருணா ஆஸப் ௮லி
  • டாக்டர் ராஜேந்திரபிரஸாத்
  • ஸர்தார் வல்லபபாய் படேல்
  • டாக்டர் அன்னிபெசன்ட்
  • ரமாபாய் சரஸ்வதி
இலக்கிய நூல்கள்
  • மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்
  • கதைக்கோவை (ஐந்து பாகங்கள்)
  • ராஜாஜி குட்டிக் கதைகள்
  • கன்யாகுமாரி
  • சந்தனக் காவடி
  • சக்ரவாகம்
  • கனகாம்பரம்
  • தோட்டியை மணந்த அரச குமாரி
  • பவழ மாலை
  • வெண்தாமரை அழகி
  • ஜடாதரன்
  • லக்ஷ்மிகடாக்ஷம்
  • குழலோசை
  • வாடாவிளக்கு
  • குழந்தையின் மனம்
  • பிள்ளை வரம்
  • சக்தி வேல்
  • மோகினி
  • போற வழியில்
  • பட்டாசுக் கட்டு
  • பட்டுப் புடைவை
  • அரசமரப் பிள்ளையார்

மற்றும் பல

மொழிபெயர்ப்பு நூல்கள்
  • காண்டேகர் கதைகள் 1 - 4
  • கண்ணீர்
  • கருகிய மொட்டு
  • கூட்டுக்கு வெளியே
  • க்ரெளஞ்சவதம்
  • மனோரஞ்சிதம்
  • விடுதலை
  • குறுக்குச் சுவர்
  • நீலகண்டன்
  • விளக்கும் விட்டிலும்
  • துருவா
  • மயூராக்ஷி
  • விஷ விருட்சம்
  • கிருஷ்ண காந்தன் உயில்
  • விநோதினி

மற்றும் பல

பொது நூல்கள்
  • இளைஞன் கனவு (நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் கட்டுரைகள்)
  • தாவரங்களின் இல்லறம்
  • சிசுபாலனம்
  • மகாத்மா காந்தியின் என் சரிதம்
  • மதுவிலக்கு விமோசனம் (நாடகம்)
  • கால வரிசையில் பாரதி படைப்புகள் (18 தொகுப்புகள்)
  • மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1 & 2
  • வால்மீகி ராமாயணம் - பாகம் 1 & 2
  • இந்து தர்மம்
  • எங்கே பிராமணன்?
  • ஹிந்து மஹா சமுத்திரம் - 1 - 6
  • வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?
  • அன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை (தர்மத்தின் ஸாரம்)
  • எது தர்மம்?
  • தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - 1 – 5
  • கண்டறியாதன கண்டேன்
  • கஞ்சியிலும் இன்பம்
  • கந்தர் கலிவெண்பா
  • கற்பக மலர்
  • கதை சொல்கிறார் கி.வா.ஜ
  • கதிர்காம யாத்திரை
  • கவி பாடலாம்
  • காவியமும் ஓவியமும்
  • கோபாலன் ஐ.சி.எஸ்.
  • புது மாட்டுப்பெண்
  • ராஜாமணி
  • சபாஷ் பார்வதி!
  • செளந்தரம்மாள்
  • உல்லாச வேளை
  • ராஜத்தின் மனோரதம்
  • ரங்கூன் பெரியப்பா
  • சீனுப் பயல்
  • ஸ்ரீமான் சுதர்ஸனம்
  • துப்பறியும் சாம்பு – 1&2
  • ஏன் இந்த அசட்டுத்தனம்!
  • ராஜியின் பிள்ளை
  • ஜெயந்திபுரத் திருவிழா
  • கேட்ட வரம்
  • லக்ஷ்மி
  • மணல் வீடு
  • நைந்த உள்ளம்
  • முத்துச் சிப்பி - 1 & 2
  • நல்லதோர் வீணை
  • ஒரே வழி
  • ஒரு தற்கொலை நடக்கப்போகிறது
  • பேய் பெண் பாதிரி
  • புரொபசர் மித்ரா
  • புரட்சித் துறவி - மேரி கோரெல்லி
  • ராசி
  • ராத்திரி வரும்
  • தாரகை
  • கோஸ்ட்
  • காதல் மேல் ஆணை
  • கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
  • லாரா
  • ஜெனிஃபர்
  • பெரிய எழுத்து ‘கொ’
  • நான் கிருஷ்ணதேவராயன்
  • தூரன் என்ற களஞ்சியம்
  • வை.மு. கோதை நாயகி கதைகள் - 1-15
  • திவான் லொடபடசிங் பகதூர்
  • இரு மன மோகினிகள்
  • கும்பகோணம் வக்கீல்
  • லக்ஷ்மிகாந்தம்
  • மேனகா
  • நங்கை நடவண்ணம்
  • பாலாமணி (அ) பக்தாத் திருடன்
  • மிஸ்டர் பூச்சாண்டி எம்மே!
  • ராஜேந்திர மோகனா
  • பாவாடைச் சாமியார்
  • பச்சைக் காளி
  • கல்யாண சுந்தரம் அல்லது அன்னிபெஸன்ட் சிலை மர்மம்
  • புஷ்பாங்கி அல்லது திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார்
  • ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி
  • இந்திராபாய் (அ) இந்திரஜாலக் கள்ளன்
  • தேவ சுந்தரி
  • ராஜாமணி
  • மூன்று வைரங்கள்
  • கு.ப.ரா. எழுத்துக்கள் 1-8
  • உடல் பொருள் ஆனந்தி
  • நானே நான்
  • பணம் பெண் பாசம்
  • மின்னல் மழை மோகி
  • கனவுப் பாலம்
  • ஆப்பிள் பசி
  • என்னுரை
  • வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
  • வேத வித்து
  • விசிறி வாழை
  • வத்ஸலையின் வாழ்க்கை
  • உலகம் சுற்றிய மூவர்
  • கேரக்டர்
  • கண்ணாமூச்சி
  • திரும்பி வந்த மனைவி
  • கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
  • ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
  • ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்
  • காதுல பூ
  • காட்டுல மழை
  • யாமிருக்க பயமேன்
  • ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
  • வால் பையன்
  • மோடி
  • அம்பேத்கார் & மோடி
ஆங்கில நூல்கள்
  • At a Dinner
  • Holiday Trip
  • More Soap Bubbles
  • Mosquitoes At Mambalam
  • Much Daughtered
  • Soap Bubbles
  • The Marriage
  • Thirty Years a Lawyer
  • Chaff and Grain
  • Galaxy Of Carnatic Musicians Vol - 1 450.00
  • 7 Galaxy Of Carnatic Musicians Vol - 2 390.00
  • Know Your Thyagaraja Vol - 1 to 4
  • Know Your Thyagaraja Vol - 2
  • Know Your Thyagaraja Vol - 3
  • Know Your Thyagaraja Vol - 4
  • Hilarious Hits
  • Laugh with S. V. K.
  • Mirth and Merriment
  • Smile A While
  • Tickling Bubbles
  • Valmiki Spell on Thyagaraja

மற்றும் பல

பங்களிப்பாளர்கள்

அல்லயன்ஸ் பதிப்பகத்திற்கு ராஜாஜி தொடங்கி பல எழுத்தாளர்கள் முக்கியப் பங்களித்தனர். அவர்களில் சிலர்…

மற்றும் பலர்

உசாத்துணை


✅Finalised Page