under review

வேங்கடலட்சுமி

From Tamil Wiki
பழனியாண்டி சிறுகதை (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

வேங்கடலட்சுமி (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். 'தங்கம்மாள்' நாவல் இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர். மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவரது நாவலுக்கு தி.ஜ. ரங்கநாதன் முன்னுரை வழங்கினார். நாவலை வெளியிட வி.குப்புசாமி ஐயர் உதவினார்.

இலக்கிய வாழ்க்கை

வேங்கடலட்சுமியின் 'பழனியாண்டி' என்னும் சிறுகதை 1944-ல் குமரிமலர் இதழில் வெளியானது. கல்கி, காவேரி, கலைமகள், மங்கை, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. கல்கி இதழில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார். இவரது குறிப்பிடத்தகுந்த நாவல்களுள் ஒன்று ’தங்கம்மாள்’. 'அந்தகன் குழலோசை', 'சங்கமித்திரை' ( நாடகம் ) போன்றவை இவரது பிற படைப்புகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, மோகினி முதலிய கதைகள்' என்ற தலைப்பில் அல்லயன்ஸ் பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளன.

இலக்கிய இடம்

வேங்கடலட்சுமி அவரது காலத்தின் குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியர்களுள் ஒருவர். தங்கம்மாள் நாவல் பற்றி அம்பை, "1944-ம் ஆண்டு 'தங்கம்மாள்' என்ற நாவல் வேங்கடலட்சுமியால் எழுதப் பெற்றது. இவர் பிறப்பால் மலையாளி ஆயினும் நல்ல தமிழில் இவர் நாவல் படைத்துள்ளார்" என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

நாவல்
  • தங்கம்மாள் (1944)
பிற
  • அந்தகன் குழலோசை
  • சங்கமித்திரை (நாடகம்)
  • பழனியாண்டி (சிறுகதை)
  • மோகினி முதலிய கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை


✅Finalised Page