under review

பாரி நிலையம்: Difference between revisions

From Tamil Wiki
(Being created)
(Para Added and Edited: Image Added; Link Created: Proof Checked.)
Line 1: Line 1:
பாரி நிலையம் (1946) தமிழ்நாட்டின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம், பாரதிதாசன், அண்ணாத்துரை, மு.வரதாராசன் தொடங்கி கவிஞர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரது நூல்களை வெளியிட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பாரி நிலைய வெளியீடுகள் சாகித்ய அகாதமி விருது உள்படப் பல விருதுகள் பெற்றன.   
[[File:Pari Nilaiyam.jpg|thumb|பாரி நிலையம், சென்னை, பிராட்வே]]
பாரி நிலையம் (1946) தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. .. செல்லப்பன் இதன் நிறுவனர். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழிலக்கியவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள் எனப் பலரது நூல்களைப் பாரி நிலையம் வெளியிட்டது. பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பாரி நிலைய நூல்கள் சாகித்ய அகாதமி விருது, தமிழக அரசு விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பரிசுகளைப் பெற்றன.   


{{Being created}}
== தோற்றம், வெளியீடு ==
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த [[க. அ. செல்லப்பன்]], சென்னையில், 1946-ல் பாரி நிலையத்தைத் தொடங்கினார். [[முல்லை முத்தையா]] தொடங்கிய முல்லை பதிப்பகத்தின் நூல்களை விற்பனை செய்யும் பொருட்டு, பாரி நிலையத்தைத் தோற்றுவித்தார். ’முல்லை’யோடு தொடர்புடையது என்பதால் ‘பாரி’ என்று தனது பதிப்பக நிறுவனத்திற்குப் பெயர் சூட்டினார். ‘விற்பனை உரிமை’ பெற்று பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்.
 
நாளடைவில் பாரி நிலையமும் நூல் வெளியீட்டில் இறங்கியது. முதல் நூல், ‘டில்லியை நோக்கி’, 1950-ல் வெளியானது. இது, நேதாஜியினுடைய சொற்பொழிவுகளின் தமிழ் மொழிபெயா்ப்பு. தொடா்ந்து, [[சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்|ராஜாஜி]]யின் ‘சக்கரவா்த்தி திருமகன்’ நூல் வெளியானது. பேராசிரியா், [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ.]]வின் [[கள்ளோ காவியமோ|கள்ளோ காவியமோ?]] தொடங்கி, அவருடைய அனைத்து நூல்களையும் பாரி நிலையம் விற்பனை உரிமை பெற்று வெளியிட்டது.
 
சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தையும் பேராசிரியர் [[எஸ். வையாபுரிப் பிள்ளை]]யைக் கொண்டு செப்பம் செய்வித்து இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரன்]], [[தேசிகவினாயகம் பிள்ளை|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]], [[கி. ஆ. பெ. விசுவநாதம்]], [[மீ.ப.சோமு|மீ. ப. சோமு]], [[வ.சுப. மாணிக்கம்|வ. சுப. மாணிக்கம்]] உள்ளிட்ட பல தமிழறிஞா்களது படைப்புகளையும், இலங்கை எழுத்தாளா்களின் படைப்புகளையும் பாரி நிலையம் வெளியிட்டது. [[பாரதிதாசன்]], [[அண்ணாத்துரை|அண்ணா]], நெடுஞ்செழியன், மதியழகன், ராதாமணாளன், ஆசைத்தம்பி, தில்லை வில்லாளன், [[மு.கருணாநிதி]], அன்பழகன், [[எஸ். எஸ். தென்னரசு|எஸ்.எஸ். தென்னரசு]] என திராவிட இயக்கம் சார்ந்த பலரது நூல்களை வெளியிட்டது.
 
க. அ. செல்லப்பன், [[கண. முத்தையா]]வுடன் இணைந்து ‘பாரி புத்தகப் பண்ணை’ என்னும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் [[அகிலன்]], [[ராஜம் கிருஷ்ணன்]] மற்றும் சில இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் வெளியாகின.
 
[[மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை|மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை]], மு. சண்முகம் பிள்ளை, பிற்காலத்தில் [[புலியூர்க் கேசிகன்|புலியூர்க்கேசிகன்]] ஆகியோர் பாரி நிலையத்தின் வெளியீடுகளுக்குப் பதிப்பாசிரியர்களாக இருந்து பிழைகள் இல்லாமல் நூல்கள் வெளிவர உதவினர். பாரி நிலையம் அக்காலத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடும் இடமாக இருந்தது. அண்னாவும், மு.வ.வும் முதன் முதலில் சந்தித்து உரையாடியது பாரி நிலையத்தில் தான்.
 
== பாரி நிலைய நூல்கள் ==
கீழ்க்காணும் நூல்களை பாரி நிலையம் வெளியிட்டது. சில நூல்களை உரிமை பெற்று விற்பனை செய்தது.
 
* டில்லியை நோக்கி…
* சக்கரவர்த்தித் திருமகன்
* கள்ளோ? காவியமோ?
* அழகின் சிரிப்பு
* பிசிராந்தையார்
* மருமக்கள்வழி மான்மியம்
* இசையமுது
* [[இளங்கோவடிகள்|இளங்கோ]]வும் சிலம்பும்
* [[திருவள்ளுவர்|வள்ளுவர்]] உள்ளம்
* மும்மணிகள்
* குடும்ப விளக்கு
* ஆராய்ச்சிக் கட்டுரைகள்-1
* இருபெருந்தலைவர்
* காற்றிலே மிதந்தவை
* கும்மந்தான் கான்சாகிபு
* சங்ககாலச் சான்றோர்கள்
* சிலம்புத் தேன்
* செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
* வீரத் தலைவர் பூலித்தேவர்
* வேலூர்ப் புரட்சி
* 1806
* உணர்வின் எல்லை
* இலக்கிய அணிகள்
* முருகன் காட்சி
* அறவோர் மு. வ.
* கவிச் சக்கரவர்த்தி [[ஒட்டக்கூத்தர்]]
* பாவைப் பாட்டு
* புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
* சங்க கால மகளிர்
* டாக்டர் மு.வ. வின் சிந்தனை வளம்
* [[திருப்பாவை]] விளக்கம்
* [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]]க் கட்டுரைகள்
* உருவும் திருவும்
* வாழையடி வாழை
* ஆறு செல்வங்கள்
* அறிவுக்கு உணவு
* அறிவுக் கதைகள்
* எது வியாபாரம்? எவர் வியாபாரி?
* எனது நண்பர்கள்
* எண்ணக் குவியல்
* ஐந்து செல்வங்கள்
* மணமக்களுக்கு
* மாணவர்களுக்கு
* [[நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்|நபிகள் நாயகம்]]
* நல்வாழ்வுக்கு வழி
* நான்மணிகள்
* தமிழ் மருந்துகள்
* தமிழ்ச் செல்வம்
* தமிழின் சிறப்பு
* திருக்குறளில் செயல்திறன்
* [[திருக்குறள்]] கட்டுரைகள்
* திருக்குறள் புதைபொருள்
* [[இராமலிங்க வள்ளலார்|வள்ளலா]]ரும் [[அருட்பா மருட்பா விவாதம்|அருட்பா]]வும்
* வள்ளுவர் உள்ளம்
* வள்ளுவரும் குறளும்
* வானொலியிலே
* அந்தமான் கைதி
* [[நீலகேசி]] உரை நூல்
* முதற் குலோத்துங்க சோழன்
* இலக்கியச் சிந்தனைகள்
* பாரி தமிழ் மணிமாலை இரண்டாம் புத்தகம்
* எனது பிரயாண நினைவுகள்
* மனப்போர்
* காவியப் பாவை
* [[முடியரசன்]] கவிதைகள் - இரண்டு தொகுப்புகள்
* தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற சிவத்தலங்கள்
* வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
* ஆதி அத்தி
* பொன்னியின் தியாகம்
* காதலும் கடமையும்
* மனக் குகை நாடகம்
* மின்னல் பூ
* இளந்துறவி
* பிள்ளை வரம்
* [[பெரியசாமித் தூரன்|தூரன்]] கவிதைகள்
* [[ஐங்குறுநூறு]]
* [[மருதத் திணை|மருதமும்]] [[நெய்தல் திணை|நெய்தலும்]]
* காட்டுவழிதனிலே
* மனமும் அதன் விளக்கமும்
* அண்ணா தன் வரலாறு
* தி மு க வரலாறு
* மாநில சுயாட்சி
* தம்பிக்கு கடிதங்கள் - 21 தொகுதிகள்
* பட்டுச்செல்வம்
* குறிஞ்சித் திட்டு
* மணிமேகலை வெண்பா
* கண்ணகி புரட்சிக் காப்பியம்
* கருவில் வளரும் குழந்தை
* குமரப் பருவம்
* நல்ல நல்ல பாட்டு
* பட்டிப் பறவைகள்
* தமிழகக் கலைகள்
* [[பதிற்றுப்பத்து]] தெளிவுரையுடன்
* [[சி.சுப்ரமணிய பாரதியார்|மகாகவி பாரதியார்]] - புதுமைக் கண்ணோட்டம்
* [[நற்றிணை]] (201-400 செய்யுட்கள்)
* [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு. வி. க.]] வாழ்வும் தொண்டும்
* [[ஔவையார் (சங்ககாலம்)|ஔவை]]யும் நக்கீரரும்
* மூன்றாம் நந்திவர்மன்
* பாரி தமிழ் வாசகம்
* பூஞ்செடிகள்
* பாரதிதாசன் திருக்குறள் உரை
* மலரும் மாலையும்
* சொற்களின் சரிதம்
* ஆராய்ச்சிக் கட்டுரைகள்
* முதல் ஐந்திசைப் பண்கள்
* போதி மாதவன்
* ஆசிய ஜோதி
* [[பாலைத் திணை|பாலை]]ச்செல்வி
* மருதநில மங்கை
* அறிவுரைக் கொத்து
* கடவுள் நிலை
* கடவுளுக்கு அருளுருவம் உண்டு
* சைவ சமயப் பாதுகாப்பு
* சீவகாருணியம்
* தமிழ்த்தாய்
* தனித்தமிழ் மாட்சி
* தமிழிற் பிறமொழிக் கலப்பு
* திருக்கோயில் வழிபாடு
* தமிழ்த்தூது கட்டுரைக் கொத்து
* தமிழ்க் காதல்
* காதல் ஜோதி
* மே தினம்
* அண்ணாவின் சொற்செல்வம்
* மாஜி கடவுள்கள்
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
* கைதி எண் 6342
* வள்ளுவரும் காந்தியும்
* [[காந்தி]] அண்ணல்
* தில்லைச் சிற்றம்பலவன் கோயில்
* எதிர்ப்பத அகராதி
* தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
* உலக மொழிகள்
* [[திருவெம்பாவை]]
* [[திருப்பாவை]]
* தமிழ் மொழி இலக்கிய வரலாறு
* குறிஞ்சித் திட்டு
* பாரதிதாசன் கவிதைகள்
* [[மறைந்துபோன தமிழ் நூல்கள்]]
* கன்னட நாட்டின் போர்வாள்
* ஹைதர் அலி
* அகத்திணைக் கொள்கைகள்
* வளரும் தமிழ்
* தமிழ் நூல் தொகுப்புக் கலை - முதல் தொகுதி
* யாப்பதிகாரம்
* எழுத்தின் கதை
* மொழியின் கதை
* திருவள்ளுவர் காலம்
* அம்பிகாபதி அமராவதி நாடகம்
* உமர்கய்யாம்
* சமய மறுமலர்ச்சி
* முதற் குறள் உவமை
* சங்ககாலச் சான்றோர்கள்
* தமிழ்ச்சுடர் மணிகள்
* இலக்கிய தீபம்
* மலரும் உள்ளம்
* வள்ளிநாயகியின் கோபம்
* பார்வதி பி. ஏ.
* மணல் வீடு
* வள்ளுவம் கற்பனைப் பொழிவுகள்
* [[குறுந்தொகை]] விருந்து
* குறுந்தொகைச் செல்வம்
* தங்கைக்கு
* பீஜித் தீவுகள்
* [[மறைமலையடிகள்|மறைமலையடிக]]ளார் கடிதங்கள்
* திருக்குறள் புதைபொருள்
* காமஞ்சரி செய்யுள் நாடகம்
* அனைத்துலக மனிதனை நோக்கி
* தமிழர் நாகரிகமும் பண்பாடும்
* கிழக்கு ஆப்பிரிக்கா
* சிந்தனை மலர்கள்
* சித்திரச் சிலம்பு
* தஞ்சாவூர் மாவட்டம்
* தரங்கிணி
* ஓவச் செய்தி
 
மற்றும் பல
 
== பாரி நிலையம் பதிப்பித்த எழுத்தாளர்கள் ==
 
* ராஜாஜி
* மு.வ.
* பாரதிதாசன்
* திரு.வி.க.
* [[வ.உ. சிதம்பரனார்|வ.உ. சிதம்பரம் பிள்ளை]]
* எஸ். வையாபுரிப் பிள்ளை
* [[கா.அப்பாத்துரை|கா. அப்பாத்துரை]]
* [[மு. அருணாசலம்]]
* [[மயிலை சீனி. வேங்கடசாமி]]
* அண்ணாத்துரை
* தெ.பொ.மீ.
* வ.சுப. மாணிக்கம்
* [[குன்றக்குடி அடிகளார்]]
* [[முடியரசன்]]
* [[நாரண துரைக்கண்ணன்|நாரண. துரைக்கண்ணன்]]
* [[சுவாமி விபுலானந்தர்|விபுலானந்த அடிகள்]]
* [[மீ.ப.சோமு|மீ.ப. சோமு]]
* [[சோமலெ]]
* [[அழ.வள்ளியப்பா]]
* [[க. கைலாசபதி|கைலாசபதி]]
* [[புலவர் குழந்தை]]
* [[அ.கி. பரந்தாமனார்|அ. கி. பரந்தாமனார்]]
* புலியூர்க்கேசிகன்
* நெடுஞ்செழியன்
* மதியழகன்
* ராதாமணாளன்
* ஆசைத்தம்பி
* தில்லை வில்லாளன்
* மு.கருணாநிதி
* அன்பழகன்
* எஸ்.எஸ். தென்னரசு
 
மற்றும் பலர்
 
== விருதுகள் ==
பாரி நிலைய வெளியீடுகள் [[சாகித்ய அகாதெமி|சாகித்ய அகாதமி விருது,]] தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றன.
 
பாரி நிலையத்தை க.அ. செல்லப்பனின் மறைவுக்குப் பின் அவரது மகன் அமர்ஜோதி நிர்வகித்து வருகிறார்.
 
== ஆவணம் ==
பாரி நிலைய வெளியீடுகளில் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
 
== மதிப்பீடு ==
பாரி நிலையம் சங்க இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 700-க்கும் மேற்பட்ட நூல்களின் விற்பனை உரிமையைப் பெற்று வெளியிட்டது. சென்னையில் நகரத்தார்கள் தொடங்கி நடத்திய முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றாக பாரி நிலையம் மதிப்பிடப்படுகிறது.
 
== உசாத்துணை ==
 
* [https://www.youtube.com/watch?v=gWUCWpebarQ பாரி நிலையம்: அமர்ஜோதி நேர்காணல்]
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jul/19/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3438469.html பாரி செல்லப்பனார்: தினமணி இதழ் கட்டுரை]
* [https://www.hindutamil.in/news/literature/555825-tamil-publication-pioneers-4.html இந்து தமிழ் திசை கட்டுரை]
* [https://www.tamildigitallibrary.in/book-list-view-publisher?act=%E0%AE%AA&id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9lMyy&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D பாரி நிலைய வெளியீடுகள்: தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-list-view-publisher?act=%E0%AE%AA&id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdjup6&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D பாரி நிலைய வெளியீடுகள்: தமிழ் இணைய மின்னூலகம்]
* நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002.
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:13, 9 February 2024

பாரி நிலையம், சென்னை, பிராட்வே

பாரி நிலையம் (1946) தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. க.அ. செல்லப்பன் இதன் நிறுவனர். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழிலக்கியவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள் எனப் பலரது நூல்களைப் பாரி நிலையம் வெளியிட்டது. பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பாரி நிலைய நூல்கள் சாகித்ய அகாதமி விருது, தமிழக அரசு விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பரிசுகளைப் பெற்றன.

தோற்றம், வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த க. அ. செல்லப்பன், சென்னையில், 1946-ல் பாரி நிலையத்தைத் தொடங்கினார். முல்லை முத்தையா தொடங்கிய முல்லை பதிப்பகத்தின் நூல்களை விற்பனை செய்யும் பொருட்டு, பாரி நிலையத்தைத் தோற்றுவித்தார். ’முல்லை’யோடு தொடர்புடையது என்பதால் ‘பாரி’ என்று தனது பதிப்பக நிறுவனத்திற்குப் பெயர் சூட்டினார். ‘விற்பனை உரிமை’ பெற்று பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்.

நாளடைவில் பாரி நிலையமும் நூல் வெளியீட்டில் இறங்கியது. முதல் நூல், ‘டில்லியை நோக்கி’, 1950-ல் வெளியானது. இது, நேதாஜியினுடைய சொற்பொழிவுகளின் தமிழ் மொழிபெயா்ப்பு. தொடா்ந்து, ராஜாஜியின் ‘சக்கரவா்த்தி திருமகன்’ நூல் வெளியானது. பேராசிரியா், டாக்டர் மு.வ.வின் கள்ளோ காவியமோ? தொடங்கி, அவருடைய அனைத்து நூல்களையும் பாரி நிலையம் விற்பனை உரிமை பெற்று வெளியிட்டது.

சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தையும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு செப்பம் செய்வித்து இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. தெ. பொ. மீனாட்சிசுந்தரன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கி. ஆ. பெ. விசுவநாதம், மீ. ப. சோமு, வ. சுப. மாணிக்கம் உள்ளிட்ட பல தமிழறிஞா்களது படைப்புகளையும், இலங்கை எழுத்தாளா்களின் படைப்புகளையும் பாரி நிலையம் வெளியிட்டது. பாரதிதாசன், அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், ராதாமணாளன், ஆசைத்தம்பி, தில்லை வில்லாளன், மு.கருணாநிதி, அன்பழகன், எஸ்.எஸ். தென்னரசு என திராவிட இயக்கம் சார்ந்த பலரது நூல்களை வெளியிட்டது.

க. அ. செல்லப்பன், கண. முத்தையாவுடன் இணைந்து ‘பாரி புத்தகப் பண்ணை’ என்னும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் அகிலன், ராஜம் கிருஷ்ணன் மற்றும் சில இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் வெளியாகின.

மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, மு. சண்முகம் பிள்ளை, பிற்காலத்தில் புலியூர்க்கேசிகன் ஆகியோர் பாரி நிலையத்தின் வெளியீடுகளுக்குப் பதிப்பாசிரியர்களாக இருந்து பிழைகள் இல்லாமல் நூல்கள் வெளிவர உதவினர். பாரி நிலையம் அக்காலத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடும் இடமாக இருந்தது. அண்னாவும், மு.வ.வும் முதன் முதலில் சந்தித்து உரையாடியது பாரி நிலையத்தில் தான்.

பாரி நிலைய நூல்கள்

கீழ்க்காணும் நூல்களை பாரி நிலையம் வெளியிட்டது. சில நூல்களை உரிமை பெற்று விற்பனை செய்தது.

  • டில்லியை நோக்கி…
  • சக்கரவர்த்தித் திருமகன்
  • கள்ளோ? காவியமோ?
  • அழகின் சிரிப்பு
  • பிசிராந்தையார்
  • மருமக்கள்வழி மான்மியம்
  • இசையமுது
  • இளங்கோவும் சிலம்பும்
  • வள்ளுவர் உள்ளம்
  • மும்மணிகள்
  • குடும்ப விளக்கு
  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்-1
  • இருபெருந்தலைவர்
  • காற்றிலே மிதந்தவை
  • கும்மந்தான் கான்சாகிபு
  • சங்ககாலச் சான்றோர்கள்
  • சிலம்புத் தேன்
  • செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
  • வீரத் தலைவர் பூலித்தேவர்
  • வேலூர்ப் புரட்சி
  • 1806
  • உணர்வின் எல்லை
  • இலக்கிய அணிகள்
  • முருகன் காட்சி
  • அறவோர் மு. வ.
  • கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
  • பாவைப் பாட்டு
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
  • சங்க கால மகளிர்
  • டாக்டர் மு.வ. வின் சிந்தனை வளம்
  • திருப்பாவை விளக்கம்
  • தொல்காப்பியக் கட்டுரைகள்
  • உருவும் திருவும்
  • வாழையடி வாழை
  • ஆறு செல்வங்கள்
  • அறிவுக்கு உணவு
  • அறிவுக் கதைகள்
  • எது வியாபாரம்? எவர் வியாபாரி?
  • எனது நண்பர்கள்
  • எண்ணக் குவியல்
  • ஐந்து செல்வங்கள்
  • மணமக்களுக்கு
  • மாணவர்களுக்கு
  • நபிகள் நாயகம்
  • நல்வாழ்வுக்கு வழி
  • நான்மணிகள்
  • தமிழ் மருந்துகள்
  • தமிழ்ச் செல்வம்
  • தமிழின் சிறப்பு
  • திருக்குறளில் செயல்திறன்
  • திருக்குறள் கட்டுரைகள்
  • திருக்குறள் புதைபொருள்
  • வள்ளலாரும் அருட்பாவும்
  • வள்ளுவர் உள்ளம்
  • வள்ளுவரும் குறளும்
  • வானொலியிலே
  • அந்தமான் கைதி
  • நீலகேசி உரை நூல்
  • முதற் குலோத்துங்க சோழன்
  • இலக்கியச் சிந்தனைகள்
  • பாரி தமிழ் மணிமாலை இரண்டாம் புத்தகம்
  • எனது பிரயாண நினைவுகள்
  • மனப்போர்
  • காவியப் பாவை
  • முடியரசன் கவிதைகள் - இரண்டு தொகுப்புகள்
  • தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற சிவத்தலங்கள்
  • வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
  • ஆதி அத்தி
  • பொன்னியின் தியாகம்
  • காதலும் கடமையும்
  • மனக் குகை நாடகம்
  • மின்னல் பூ
  • இளந்துறவி
  • பிள்ளை வரம்
  • தூரன் கவிதைகள்
  • ஐங்குறுநூறு
  • மருதமும் நெய்தலும்
  • காட்டுவழிதனிலே
  • மனமும் அதன் விளக்கமும்
  • அண்ணா தன் வரலாறு
  • தி மு க வரலாறு
  • மாநில சுயாட்சி
  • தம்பிக்கு கடிதங்கள் - 21 தொகுதிகள்
  • பட்டுச்செல்வம்
  • குறிஞ்சித் திட்டு
  • மணிமேகலை வெண்பா
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்
  • கருவில் வளரும் குழந்தை
  • குமரப் பருவம்
  • நல்ல நல்ல பாட்டு
  • பட்டிப் பறவைகள்
  • தமிழகக் கலைகள்
  • பதிற்றுப்பத்து தெளிவுரையுடன்
  • மகாகவி பாரதியார் - புதுமைக் கண்ணோட்டம்
  • நற்றிணை (201-400 செய்யுட்கள்)
  • திரு. வி. க. வாழ்வும் தொண்டும்
  • ஔவையும் நக்கீரரும்
  • மூன்றாம் நந்திவர்மன்
  • பாரி தமிழ் வாசகம்
  • பூஞ்செடிகள்
  • பாரதிதாசன் திருக்குறள் உரை
  • மலரும் மாலையும்
  • சொற்களின் சரிதம்
  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்
  • முதல் ஐந்திசைப் பண்கள்
  • போதி மாதவன்
  • ஆசிய ஜோதி
  • பாலைச்செல்வி
  • மருதநில மங்கை
  • அறிவுரைக் கொத்து
  • கடவுள் நிலை
  • கடவுளுக்கு அருளுருவம் உண்டு
  • சைவ சமயப் பாதுகாப்பு
  • சீவகாருணியம்
  • தமிழ்த்தாய்
  • தனித்தமிழ் மாட்சி
  • தமிழிற் பிறமொழிக் கலப்பு
  • திருக்கோயில் வழிபாடு
  • தமிழ்த்தூது கட்டுரைக் கொத்து
  • தமிழ்க் காதல்
  • காதல் ஜோதி
  • மே தினம்
  • அண்ணாவின் சொற்செல்வம்
  • மாஜி கடவுள்கள்
  • தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
  • கைதி எண் 6342
  • வள்ளுவரும் காந்தியும்
  • காந்தி அண்ணல்
  • தில்லைச் சிற்றம்பலவன் கோயில்
  • எதிர்ப்பத அகராதி
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • உலக மொழிகள்
  • திருவெம்பாவை
  • திருப்பாவை
  • தமிழ் மொழி இலக்கிய வரலாறு
  • குறிஞ்சித் திட்டு
  • பாரதிதாசன் கவிதைகள்
  • மறைந்துபோன தமிழ் நூல்கள்
  • கன்னட நாட்டின் போர்வாள்
  • ஹைதர் அலி
  • அகத்திணைக் கொள்கைகள்
  • வளரும் தமிழ்
  • தமிழ் நூல் தொகுப்புக் கலை - முதல் தொகுதி
  • யாப்பதிகாரம்
  • எழுத்தின் கதை
  • மொழியின் கதை
  • திருவள்ளுவர் காலம்
  • அம்பிகாபதி அமராவதி நாடகம்
  • உமர்கய்யாம்
  • சமய மறுமலர்ச்சி
  • முதற் குறள் உவமை
  • சங்ககாலச் சான்றோர்கள்
  • தமிழ்ச்சுடர் மணிகள்
  • இலக்கிய தீபம்
  • மலரும் உள்ளம்
  • வள்ளிநாயகியின் கோபம்
  • பார்வதி பி. ஏ.
  • மணல் வீடு
  • வள்ளுவம் கற்பனைப் பொழிவுகள்
  • குறுந்தொகை விருந்து
  • குறுந்தொகைச் செல்வம்
  • தங்கைக்கு
  • பீஜித் தீவுகள்
  • மறைமலையடிகளார் கடிதங்கள்
  • திருக்குறள் புதைபொருள்
  • காமஞ்சரி செய்யுள் நாடகம்
  • அனைத்துலக மனிதனை நோக்கி
  • தமிழர் நாகரிகமும் பண்பாடும்
  • கிழக்கு ஆப்பிரிக்கா
  • சிந்தனை மலர்கள்
  • சித்திரச் சிலம்பு
  • தஞ்சாவூர் மாவட்டம்
  • தரங்கிணி
  • ஓவச் செய்தி

மற்றும் பல

பாரி நிலையம் பதிப்பித்த எழுத்தாளர்கள்

மற்றும் பலர்

விருதுகள்

பாரி நிலைய வெளியீடுகள் சாகித்ய அகாதமி விருது, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றன.

பாரி நிலையத்தை க.அ. செல்லப்பனின் மறைவுக்குப் பின் அவரது மகன் அமர்ஜோதி நிர்வகித்து வருகிறார்.

ஆவணம்

பாரி நிலைய வெளியீடுகளில் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

பாரி நிலையம் சங்க இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 700-க்கும் மேற்பட்ட நூல்களின் விற்பனை உரிமையைப் பெற்று வெளியிட்டது. சென்னையில் நகரத்தார்கள் தொடங்கி நடத்திய முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றாக பாரி நிலையம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.