under review

மருதத் திணை

From Tamil Wiki

தமிழ்நாட்டு நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டவை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டன.மருதத் திணையின் தெய்வம் இந்திரன். மருதத் திணை மக்களின் முக்கியத் தொழில் உழவு. மருதத் திணையின் அக ஒழுக்கம் ஊடலும் ஊடல் நிமித்தமும்,

மருதத் திணையின் முதற்பொருள்

  • மருதத் திணையின் தெய்வம் இந்திரன். ’வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்கிறது தொல்காப்பியம். வேந்தன் என்பது இந்திரனைக் குறிக்கும்.
  • வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத் திணையாகும்.
  • மருதத் திணையின் பெரும்பொழுது – கார்காலம், கூதிர் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம், முன் பனிக் காலம், பின் பனிக் காலம்.
  • சிறுபொழுது – வைகறை

மருதத் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம் வேந்தன், இந்திரன்
மக்கள் ஊரன், மகிழ்நன், உழவர், உழத்தியர்
ஊர் பேரூர், மூதூர்
உணவு நெல், தேறல், மீன், கரும்பு
தொழில் உழவு, நெல்லரிதல், களை பறித்தல்
நீர் மனைக்கிணறு, பொய்கை, துறை
மரங்கள் காஞ்சி, மருதம்
மலர்கள் தாமரை, ஆம்பல், கொன்றை, செங்கழுநீர்
விலங்குகள் எருமை, நீர்நாய்
பறவைகள் நாரை, நீர்க்கோழி, குருகு, வாத்து, அன்றில்
பண் மருதப்பண்
யாழ் முழவு, மருத யாழ்
பறை மணமுழா, நெல்லரி, கிணை

மருதத் திணையின் உரிப்பொருள்

  • அக ஒழுக்கம்: ஊடலும் ஊடல் நிமித்தமும்
  • புறம்: உழிஞைத் திணை (பகைவரின் மதிலை வளைத்துப் போரிடுவது)

மருதத் திணைப் பாடல்கள்

ஐங்குறுநூறு, கலித்தொகை, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் மருதத் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page