under review

குறிஞ்சித் திணை

From Tamil Wiki

தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டது. மலையும் மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி. குறிஞ்சி நிலத்தின் கடவுள் 'சேயோன்’ என்னும் முருகன் . அகத்திணைகளில் ஒன்றான குறிஞ்சித்திணையின் உரிப்பொருள் கூடலும் கூடல் நிமித்தமும்.

குறிஞ்சி நிலத்தின் முதற்பொருள்

  • குறிஞ்சித் திணைக்கு உரிய நிலம் மலையும் மலைசார்ந்த நிலமும் ஆகும். 'சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது தொல்காப்பியம்.
  • குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுது - கூதிர்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம்.
  • சிறுபொழுது - யாமம் (விடியற்காலை)

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்கள்

தெய்வம் சேயோன்
தலைமக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, நாடன்
குடிமக்கள் குறவர், குறத்தியர், கானவர்
ஊர் சிறுகுடி
உணவு தினை, மலைநெல், மூங்கிலரிசி, கிழங்கு
தொழில் கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், தினைப்புனம் காத்தல், விதைத்தல், அருவி நீராடல்
நீர் நிலை அருவி, சுனை
மரங்கள் தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், வேங்கை, அசோகம்
மலர்கள் குறிஞ்சி, காந்தள், வேங்கை
விலங்குகள் புலி, யானை, கரடி, குரங்கு
பறவைகள் மயில், கிளி
பறை தொண்டகப் பறை், வெறியாட்டுப் பறை
பண் குறிஞ்சிப் பண்
யாழ் குறிஞ்சி யாழ்

குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள்

  • அக ஒழுக்கம்: கூடலும் கூடல் நிமித்தமும்
  • புற ஒழுக்கம்: வெட்சித் திணை (பகை நாட்டினரின் பசுக்களைக் கவர்தல்)

குறிஞ்சித் திணைப் பாடல்கள்

குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, குறிஞ்சிக்கலி, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page