under review

பூம்புகார் பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 03:43, 10 September 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூம்புகார் பதிப்பகம் (1975) பிரசுர நிறுவனங்களுள் ஒன்று. ஈகிள் குழும நிறுவனர் எம்.ஜே. பிரதாப் சிங், சென்னையில், 1975-ல், பூம்புகார் பதிப்பகத்தைத் தோற்றுவித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது. அவற்றில் மூன்று நூல்கள் சாகித்ய அகாதமி விருது பெற்றன. அண்ணா, மு. கருணாநிதி தொடங்கி புலியூர்க் கேசிகன், கோவி. மணிசேகரன், ராஜேஷ்குமார், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரது நூல்களைப் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது.

தோற்றம்

பூம்புகார் பதிப்பகம், 1975-ல், ஈகிள் குழும நிறுவனர் எம்.ஜே. பிரதாப் சிங்கால், சென்னையில் தொடங்கப்பட்டது.

வெளியீடு

பூம்புகார் பதிப்பகம், இலக்கியம், சமயம், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் எனப் பல்வேறு வகை நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. மு. கருணாநிதி, க. அன்பழகன், தனிநாயக அடிகள், விஜயா சொக்கலிங்கம் போன்றோரின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும் வெளியிட்டது.

எழுத்தாளர்கள்

பூம்புகார் பதிப்பகம், கீழ்காணும் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது.

மற்றும் பலர்

நூல்கள்

பூம்புகார் பதிப்பகம், வரலாற்று நூல்கள், ஆன்மிக நூல்கள், மர்மக் கதை நூல்கள், சமூக மற்றும் கலாச்சார நூல்கள், புராணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், கல்வி சார் நூல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் 1400-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. அவற்றில் சில....

தமிழ் நூல்கள்
  • பாரதியார் கவிதைகள்
  • பாரதிதாசன் கவிதைகள்
  • திருக்குறள் கையடக்கப் பதிப்பு
  • சந்திரோதயம்
  • நீதிதேவன் மயக்கம்
  • சந்திரமோகன்
  • வேலைக்காரி
  • இரு பரம்பரைகள்
  • சொர்க்கவாசல்
  • செவ்வாழை
  • வண்டிக்காரன் மகன்
  • பிடிசாம்பல்
  • இரும்பு முள்வேலி
  • அண்ணாவின் கவிதைகள்
  • இரும்பாரம்
  • வெள்ளை மாளிகையில்
  • கலிங்கராணி
  • தசாவதாரம்
  • அப்போதே சொன்னேன்
  • பவழபஸ்பம்
  • மக்கள் தீர்ப்பு
  • கடைசிக்களவு
  • இலக்கியச் சோலை
  • குமாஸ்தாவின் பெண்
  • என் வாழ்வு
  • செங்கரும்பு
  • அறுவடை
  • பணத்தோட்டம்
  • ஆரிய மாயை
  • கம்பரசம்
  • குடியாட்சிக் கோமான்
  • ஓர் இரவு
  • கைதி எண் 6342
  • மாஜி கடவுள்
  • காதல் ஜோதி
  • ரங்கோன் ராதா
  • பார்வதி பி.ஏ.
  • பொன்னர்-சங்கர்
  • முத்துக்குளியல் - பாகம் 1&2
  • தொல்காப்பியப் பூங்கா
  • திருக்குறள் கலைஞர் உரை
  • சிந்தனையும் செயலும்
  • காலப் பேழையும் கவிதைச் சாவியும்
  • தலைமலைகண்ட தேவர்
  • பாரதிதாசன் பேசுகிறார்
  • கோயில் இரு கோணங்கள்
  • கேட்டலும் கிளத்தலும்
  • சிரிக்கும் சிந்தனைகள்
  • மானுடம் போற்று
  • தமிழச்சியின் கத்தி
  • குடும்ப விளக்கு
  • பாண்டியன் பரிசு
  • மணிமேகலை வெண்பா
  • குறிஞ்சித்திட்டு
  • கண்ணகி
  • புரட்சி காப்பியம்
  • எதிர்பாராத முத்தம்
  • காதலா? கடமையா?
  • தமிழர் வரலாறு
  • திரவிடத் தாய்
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
  • தமிழ் வரலாறு
  • தமிழர் மதம்
  • வடமொழி வரலாறு
  • முதற்றாய்மொழி (அ) தமிழாக்க விளக்கம்
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • செந்தமிழ்ச் சிறப்பு
  • பழந்தமிழாட்சி
  • வேர்ச்சொற் கட்டுரைகள்
  • சேர மன்னர் வரலாறு
  • புறநானூறு முதல் பாகம்
  • புறநானூறு இரண்டாம் பாகம்
  • பதிற்றுப்பத்து
  • தெய்வப்புலவர் திருவள்ளுவர்
  • தமிழ் நாவலர் சரிதை
  • சிலப்பதிகாரச் சுருக்கம் உரையுடன்
  • சூளாமணிச் சுருக்கம் உரையுடன்
  • நற்றிணை மூலமும் விளக்கவுரையும் - பாகம் 1
  • நற்றிணை மூலமும் விளக்கவுரையும் - பாகம் 2
  • சைவ இலக்கிய வரலாறு
  • ஐங்குறுநூறு - முதல் பாகம் (மூலமும் உரையும்)
  • ஐங்குறு நூறு - இரண்டாம் பாகம் (மூலமும் விளக்க உரையும்)
  • திருவாசக விரிவுரை
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை
  • தமிழர் மதம்
  • சைவ சித்தாந்த ஞானபோதம்
  • முற்கால பிற்காலத் தமிழ் புலவோ
  • பண்டைக் காலத்து தமிழரும் - ஆரியரும்
  • சாகுந்தலம் நாடக மொழிபெயர்ப்பு
  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
  • நாக நாட்டரசி
  • குமுதவல்லி
  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • சிறுவர்க்கான செந்தமிழ்
  • திருக்குறள் ஆராய்ச்சி
  • இளைஞர்க்கான இன்றமிழ்
  • அம்பிகாபதி அமராவதி
  • அறிவுரைக் கொத்து
  • யோகநித்திரை அல்லது அறிதுயில்
  • மரணத்தின் பின் மனிதர் நிலை
  • தொலைவில் உணர்தல்
  • பல்லவர் வரலாறு
  • தமிழக வரலாறு தமிழக ஆட்சி
  • தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
  • சைவ சமய வளர்ச்சி
  • கலித்தொகை (மூலமும் உரையும்)
  • சோழர் வரலாறு
  • தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்ககாலம்)
  • பெரியபுராண ஆராய்ச்சி
  • பத்துப்பாட்டு ஆராய்ச்சி
  • தமிழகம் ஊரும் பேரும்
  • தமிழ் விருந்து
  • கால்டுவெல் ஐயர் சரிதம்
  • தமிழ் இன்பம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • நுண் கலைகள்
  • பௌத்தமும் தமிழும்
  • சமணமும் தமிழும்
  • மகேந்திரவர்மன்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் சமயம்
  • இலக்கிய வரலாறு
  • மெய்கண்டாரும் சிவஞான போதமும்
  • பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்
  • சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
  • பெண்ணின் பெருமை
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • என் கடன் பணிசெய்து கிடப்பதே
  • திருமால் அருள்வேட்டல்
  • நாயன்மார் வரலாறு
  • பரம்பொருள் / வாழ்க்கை வழி
  • திரு.வி.க.வின் கவிதை நூல்கள்
  • முருகன் அருள்வேட்டல்
  • திரு.வி.க.வின் கட்டுரை நூல்கள்
  • திரு.வி.க.வின் திருக்குறள் பாயிரம் 1 மற்றும் 2
  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்
  • தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு
  • பெரிய புராணம் திரு. வி. க. உரை
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • முருகன் அல்லது அழகு
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  • புதிய தமிழகம் படைத்த வரலாறு
  • விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு
  • தொல்காப்பியத்திலிருந்து பாரதியார் வரை
  • வீரபாண்டியக் கட்டபொம்மன்
  • பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
  • விடுதலைப் போரில் தமிழகம் தொகுதி 1
  • விடுதலைப் போரில் தமிழகம் தொகுதி II
  • சுதந்திர போர்களம்
  • குறிஞ்சி மலர்
  • பிறந்த மண்
  • அநுக்கிரகா
  • மூலக்கனல்
  • மணிபல்லவம்
  • பாண்டிமாதேவி
  • ராணி மங்கம்மாள்
  • சமூதாய வீதி
  • சாயங்கால மேகங்கள்
  • கபாடபுரம்
  • ஆத்மாவின் ராகங்கள்
  • துளசிமாடம்
  • மகாபாரதம் (அறத்தின் குரல்)
  • குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
  • நாங்களும் வாழ்கிறோம்
  • வாழத்தான் பிறந்தோம்
  • அவசரக் கோலங்கள்
  • மரபுகள் முறிகின்ற நேரங்கள்
  • சாதி இரத்தத்தில் ஓடுகிறது
  • வசந்தம் வருமா?
  • இல்லாதவர்கள்
  • படி தாண்டிய பத்தினிகள்
  • இதயம் பலவிதம்
  • நாக நந்தினி
  • செம்பியன் செல்வி
  • பொன் வேய்ந்த பெருமான்
  • வேங்கை வனம்
  • பொற்காலப் பூம்பாவை
  • குடவாயில் கோட்டம்
  • தோகை மயில்
  • மயிலிறகு
  • தென்றல் காற்று
  • நாயக்க மாதேவிகள்
  • அக்கினி கோபம்
  • தூது நீ சொல்லிவாராய்
  • திருமேனித்திருநாள்
  • தொட்டதெல்லாம் பெண்
  • வாசல்வரை வந்தவள்
  • உறவுகள்
  • மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்
  • காதல் நேரம்
  • தனம்
  • கண்ணா உன்னை மறப்பேனா?
  • ஊமை மனிதர்கள்
  • ஆடும்வரை ஆட்டம்
  • இம்சைகள்
  • நேற்றுவரை நந்தவனம்
  • கண்ணே காத்திரு!
  • வெள்ளிக் கனவு
  • கற்பூரக் காற்று
  • நீயும் நானும் ஒரு வீடும்...
  • தரையில் நீந்தும் மீன்கள்
  • ஆசைக்கிளியே அழகியராணி
  • இந்த மனம் உனக்காக
  • நாயகன் நாளை வருவான்
  • கூட்டு புழுக்கள்
  • சாதாரண மனிதர்கள்
  • மழைக்கால மல்லிகை
  • ஆகாயத்தில் ஆரம்பம்
  • மதில்மேல் மனசு
  • மௌனத்தால் பேசாதே
  • ஒரு வானம் பல பறவைகள்
  • கனவுப் புதையல்
  • வில்லன் என்கிற கதாநாயகன்
  • புத்தி முனைக் குற்றம்
  • தொட்டால் தொடரும்
  • காதல் ஒத்திகை
  • நீ மட்டும் நிழலோடு
  • ஆரம்பத்தில் அப்படித்தான்
  • குற்றம் மேலும் குற்றம்
  • மழைவிடும் நேரம்
  • என்னைக் காணவில்லை
  • கண்டுபிடியுங்கள்!
  • வழியா இல்லை பூமியில்
  • பூ பூக்கும் ஓசை
  • ஜரிகை மேடை
  • என்றாள் அவள்
  • திண்ணை வைத்த வீடு
  • ஜாக்பாட் ராத்திரி
  • திட்டமிட்ட திருப்பம்
  • ஆதாம் ஏவாள்
  • பரத் ஒரு பந்தயம்
  • வென்று வா பரத்
  • பரத் இருக்க பயமேன்?
  • திரும்பிவா! தீர்ப்பைதா!
  • ரம்மி அண்ட் ஜோக்கர்
  • மில்லியன் டாலர் உண்மை
  • பரத், பரத் பறந்து வா
  • பரத் & பட்டாம்பூச்சி
  • பதில் தா பரத்
  • பரத் ராஜ்யம்
  • காதலர்கள் ஜாக்கிரதை
  • கடைசி அத்தியாயம்
  • சுட்டுவிடு சுசிலா
  • பதுங்கி வா பரத்!
  • ஊமத்தம் பூக்கள்
  • 19 வயது சொர்க்கம்
  • இனிமேல் சாருமதி
  • சத்தமில்லாத சமுத்திரம்
  • விலைக்கு ஒரு வானவில்
  • விளக்கம் ப்ளீஸ் விவேக்
  • அர்த்தமுள்ள அரட்டை
  • அமிர்தம் என்றால் விஷம்
  • இரண்டாவது சீதை
  • காகிதப்பூ தேன்
  • நீலநிற நிழல்கள்
  • காகித ரோஜாக்களும் திகில் ரோஜாக்களும்
  • நான் நானல்ல
  • மற்றவை நள்ளிரவு 1.05க்கு
  • கூடவே ஒரு நிழல்
  • உன்னை விட்டால் யாருமில்லை
  • இரவல் சொர்க்கம்
  • கருப்பு வானவில்
  • கண்ணெல்லாம் உன்னோடுதான்
  • நில்... கவனி... காதலி...
  • இரும்பு பட்டாம்பூச்சிகள்
  • நேசிப்பதைச் சொல்லிவிடு
  • சின்னச் சின்னக் கனவுகள்
  • துப்பாக்கி நாட்கள்
  • சிகப்பாய் சில மேகங்கள்
  • ஆண்கள் அரசாங்கம்
  • நீரில் மிதக்கும் நிலா
  • புத்தம் புது புதிரே
  • ஒளிவதற்கு ஓர் இடம்
  • மாணவர் தலைவர் அப்புசாமி
  • அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  • ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்
  • சீதாப்பாட்டியின் சபதம்
  • அப்புசாமி படம் எடுக்கிறார்
  • ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
  • டப்பாஜி பான்ஸ்லேயுடன் அப்புசாமி
  • அப்புசாமியும் ஹிப்னாடிசப் பூனையும்
  • அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்
  • அப்புசாமியின் கலர் டி.வி.
  • அப்புசாமியின் தாலிபாக்கியம்
  • ஆகாசவானியில் அப்புசாமி
  • அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்
  • ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?
  • அப்புசாமியும் அற்புதவிளக்கும்
  • பாக்கியம் ராமசாமி நகைச்சுவை கதைகள்
ஆங்கில நூல்கள்
  • BUDDING MOUSTACHE BLOOMING POETRY
  • KALAIGNER'S THAI
  • COMPLETE WORKS OF THANI NAYAGA ADIGALAAR VOL. I
  • COMPLETE WORKS OF THANI NAYAGA ADIGALAAR VOL II
  • RAIN DROPS (Poems)
  • LIGHT A CANDLE
  • DALITS AT THE CROSS-ROADS
  • MY DAYS AND TIMES
  • MY LETTERS: APPRECIATION AND MESSAGES
  • THE DRAVIDIAN MOVEMENT

விருது

பூம்புகார் பதிப்பக நூல்களில், மூன்று நூல்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றன. மேலும் பல நூல்கள் தமிழக அரசின் பரிசைப் பெற்றன. பல்வேறு இலக்கிய அமைப்புகளின் சிறப்பு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றன.

மதிப்பீடு

பூம்புகார் பதிப்பகம் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்டது. 1400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு வகைமைகளில் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. தமிழின் குறிப்பிடத்தகுந்த பதிப்பகங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2026, 14:29:23 IST