under review

குமுதம் தீராநதி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited: Link Created)
(Para Added and Edited: Link Created)
Line 1: Line 1:
[[File:Theeranadhi.jpg|thumb|தீராநதி]]
[[File:Theeranadhi.jpg|thumb|தீராநதி]]
[[File:Theeranathi Feb 2023.jpg|thumb|தீராநதி இதழ் பிப்ரவரி - 2023]]
குமுதம் தீராநதி (2002) குமுதம் குழுமம் வெளியிட்ட இலக்கியத்துக்கான மாத இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது.  
குமுதம் தீராநதி (2002) குமுதம் குழுமம் வெளியிட்ட இலக்கியத்துக்கான மாத இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது.  

Line 114: Line 115:
* [[அசோகமித்திரன்]]
* [[அசோகமித்திரன்]]
* ராஜரங்கன்
* ராஜரங்கன்
[[File:Theeranathi img.jpg|thumb|அருண்மொழிநங்கை நேர்காணல்]]

====== நேர்காணல்கள் ======
====== நேர்காணல்கள் ======
Line 120: Line 122:
தீராநதி இதழில் கீழ்க்காண்போர் உள்பட பலரது நேர்காணல்கள் வெளியாகின.
தீராநதி இதழில் கீழ்க்காண்போர் உள்பட பலரது நேர்காணல்கள் வெளியாகின.

அசோகமித்திரன்
* அசோகமித்திரன்
 
* அ. முத்துலிங்கம்
அ. முத்துலிங்கம்
* [[ஜெயகாந்தன்]]
 
* [[ஜெயமோகன்]]
[[ஜெயகாந்தன்]]
* [[சுஜாதா]]
 
* [[நாஞ்சில்நாடன் விருது|நாஞ்சில்நாடன்]]
[[ஜெயமோகன்]]
* [[வண்ணதாசன்|கல்யாண்ஜி]]
 
* [[எஸ். ராமகிருஷ்ணன்]]
[[சுஜாதா]]
* பாவண்ணன்
 
* [[ஐராவதம் மகாதேவன்]]
[[நாஞ்சில்நாடன் விருது|நாஞ்சில்நாடன்]]
* [[மணவை முஸ்தபா]]
 
* [[மு. கருணாநிதி]]
[[வண்ணதாசன்|கல்யாண்ஜி]]
* ஆண்டன் பாலசிங்கம்
 
* [[எம்.ஜி. சுரேஷ்]]
[[எஸ். ராமகிருஷ்ணன்]]
* சி.புஷ்பராஜா
 
* [[உமா வரதராஜன்]]
பாவண்ணன்
* [[வைரமுத்து (பாடலாசிரியர்)|வைரமுத்து]]
 
* [[தொ. பரமசிவன்]]
[[ஐராவதம் மகாதேவன்]]
* கே. ஏ. குணசேகரன்
 
* [[சேரன்]]
[[மணவை முஸ்தபா]]
* கீ. வீரமணி
 
* [[கமல்ஹாசன்]]
[[மு. கருணாநிதி]]
* பாரதிராஜா
 
* [[பா. செயப்பிரகாசம்]]
ஆண்டன் பாலசிங்கம்
* [[ரமேஷ் பிரேதன்|ரமேஷ்]] – பிரேம்
 
* எம்.டி.முத்துக்குமாரசாமி
[[எம்.ஜி. சுரேஷ்]]
* விக்ரமாதித்யன்
 
* மனுஷ்யபுத்திரன்
சி.புஷ்பராஜா
* [[சந்ரு]]
* யோ. திருவள்ளுவர்
* காளிதாஸ்
* ஆர். பி. பாஸ்கரன்
* மாலதி மைத்ரி
* கனிமொழி
* விஜயபாரதி
* [[ஷோபாசக்தி]]
* நடனக் கலைஞர் சந்திரலேகா
* இயக்குநர் பாலுமகேந்திரா
* [[பூமணி]]
* சிவகாமி
* [[அருண்மொழிநங்கை]]
* [[குட்டி ரேவதி]]

[[உமா வரதராஜன்]]
====== தொடர்கள் ======
 
[[வைரமுத்து (பாடலாசிரியர்)|வைரமுத்து]]
 
[[தொ. பரமசிவன்]]
 
கே. ஏ. குணசேகரன்
 
[[சேரன்]]
 
கீ. வீரமணி
 
[[கமல்ஹாசன்]]
 
பாரதிராஜா
 
[[பா. செயப்பிரகாசம்]]
 
[[ரமேஷ் பிரேதன்|ரமேஷ்]] – பிரேம்
 
எம்.டி.முத்துக்குமாரசாமி
 
விக்ரமாதித்யன்
 
மனுஷ்யபுத்திரன்
 
[[சந்ரு]]
 
யோ. திருவள்ளுவர்
 
காளிதாஸ்
 
ஆர். பி. பாஸ்கரன்
 
மாலதி மைத்ரி
 
கனிமொழி
 
விஜயபாரதி
 
[[ஷோபாசக்தி]]
 
நடனக் கலைஞர் சந்திரலேகா
 
இயக்குநர் பாலுமகேந்திரா
 
[[பூமணி]]
 
சிவகாமி
 
[[அருண்மொழிநங்கை]]
 
[[குட்டி ரேவதி]]
 
====== தீராநதி தொடர்கள் ======
தீராநதியில் வெளியான தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புத் தொடர்கள், தனிநபர் கட்டுரைகள் எனப் பல வகையில் அவை அமைந்தன.
தீராநதியில் வெளியான தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புத் தொடர்கள், தனிநபர் கட்டுரைகள் எனப் பல வகையில் அவை அமைந்தன.

Line 224: Line 185:
* நவீன கலையின் தமிழக உருவங்கள் – எல். முனுசாமி
* நவீன கலையின் தமிழக உருவங்கள் – எல். முனுசாமி

====== தீராநதி கட்டுரைகள் ======
====== கட்டுரைகள் ======
தீராநதி கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மொழி எனப் பல பொருண்மைகளில் தீராநதியில் கட்டுரைகள் வெளியாகின. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவையாய் அமைந்தன.  

Line 238: Line 199:
மற்றும் பலர்
மற்றும் பலர்

== மதிப்பீடு ==
சக படைப்பாளிகளை வசைபாடுவதும், அது குறித்து ரசனைக் குறைவான படைப்புகளை வெளியிடுவதுமான சூழல்கள் இருந்த சமயத்தில், அதற்கு ஓர் மாற்றாக, இடைநிலை இலக்கிய இதழாக தீராநதி வெளிவந்தது. தீராநதி இதழில் வெளியான நேர்காணல்களும், நூல் மதிப்புரைகளும் பரவலான வரவேற்பைப் பெற்றன. தீராநதி இதழ் இலக்கியத்துத்துக்கு நல்லதொரு பங்களிப்பைத் தந்தது.  கவிதை, சிறுகதை தொடங்கி இலக்கியத்தின் அனைத்தும் களங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட இலக்கிய இதழாக தீராநதி இதழ் மதிப்பிடப்படுகிறது.

== உசாத்துணை ==

* [https://kumudam.com/ குமுதம் தீராநதி இதழ்]
 
* தீராநதி - இலக்கிய இதழாய்வு, உ. சஞ்சய், காவ்யா பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2012
 
* [https://www.facebook.com/KumudamTheeranathi/?locale=ta_IN குமுதம் தீராநதி இதழ் ஃபேஸ்புக் பக்கம்]
 
* [https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_20.html ஜெயமோகன் தீராநதி நேர்காணல் – 1]
 
* [https://www.jeyamohan.in/19945/ ஜெயமோகன் தீராநதி நேர்காணல் - 2]
 
* [https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_11.html எஸ். ராமகிருஷ்ணன் தீராநதி நேர்காணல்]
 
* [https://pinnaveenathuvam.wordpress.com/2009/12/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF/ எம்.ஜி. சுரேஷ் தீராநதி நேர்காணல்]
 
* [https://azhiyasudargal.blogspot.com/2013/08/blog-post_20.html பாவண்ணன் நேர்காணல்]
{{Being created}}
* [https://azhiyasudargal.wordpress.com/2010/03/30/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/ வண்ணதாசன் தீராநதி நேர்காணல் (1)]
* [https://vannathasan.wordpress.com/2017/11/19/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/ வண்ணதாசன் தீராநதி நேர்காணல் (2)]
* [https://www.jeyamohan.in/32476/ தேவதேவன் தீராநதி நேர்காணல்]
* [https://thoguppukal.blogspot.com/2011/04/blog-post_4518.html?m=0 மனுஷ்யபுத்திரன் தீராநதி நேர்காணல்] <br />
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:53, 12 December 2024

தீராநதி
தீராநதி இதழ் பிப்ரவரி - 2023

குமுதம் தீராநதி (2002) குமுதம் குழுமம் வெளியிட்ட இலக்கியத்துக்கான மாத இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது.

வெளியீடு

குமுதம் தீராநதி ஜூன் 2002 முதல் வெளிவந்த இலக்கியத்துக்கான இடைநிலை மாத இதழ். குமுதம் குழுமம் இதனை வெளியிட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்த தீராநதி இதழ் இடைநின்று பின் மீண்டும் வெளிவந்தது.

தொடக்க காலத்தில் 64 பக்கங்களில் வெளிவந்த தீராநதியின் தனிப் பிரதி இதழ் விலை ரூபாய் 15/- ஆக இருந்தது. ஆண்டுச்சந்தா 180/- ஆக இருந்தது. பிற்காலத்தில் தனிப்பிரதி இதழ் 20/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

ஆசிரியர்கள்

குமுதம் தீராநதி இதழின் தொடக்க கால ஆசிரியராக ராவ் செயல்பட்டார். பொறுப்பாசிரியர்களாக மணாவும் இரா. மணிகண்டனும் இருந்தனர். செப்டம்பர் 2003 முதல் டாக்டர் இரா. மணிகண்டனே இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். மணாவும், இரா. மணிகண்டனும் பொறுப்பாசிரியர்களாக இருந்த காலகட்டத்தில் கலை, இலக்கியத்துடன் அரசியல் சார்ந்த செய்திகளும் விவாதங்களும் தீராநதியில் இடம் பெற்றன.

இரா. மணிகண்டன் ஆசிரியராக முழுப் பொறுப்பேற்ற பின் அரசியல் சார்ந்த விவாதங்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் இலக்கியத்திற்கான இதழாக வெளிவந்தது. தளவாய் சுந்தரம், கடற்கரய் ஆகியோர் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.

உள்ளடக்கம்

"இலக்கிய உலகில் யாருடைய வெளியையும் அபகரிக்கும் நோக்கமெல்லாம் எங்களுக்கில்லை. சிறு சிறு குழு வாதங்களுக்கு அப்பால் நம் குரலை கொண்டு போக வேண்டிய அவசியமிருக்கிறது" என்ற அறிவிப்புடன் தீராநதியின் முதல் இதழ் வெளியானது. இதழின் தொடக்க காலத்தில் சுந்தர ராமசாமி வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது தீராநதி.

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் இடம்பெற்றன. சாகித்ய அகாதெமி விருது குறித்த சர்ச்சை, பின் நவீனத்துவ நாவல்கள் குறித்த சர்ச்சை என பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தீராநதி இடமளித்தது. வாசகர்களின் கருத்துக்கு முக்கியத்துவமளித்து இரு பக்கங்களில் வாசகர் கடிதங்களை வெளியிட்டது

எதிர்முகம், காமிராக் கவிதை, அவல் போன்ற பகுதிகள் வரவேற்பைப் பெற்றன. பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளுடன் திரைப்பட விமர்சனங்களும் தீராநதி இதழில் வெளியாகின.

பங்களிப்புகள்

கவிதை

தீராநதி இதழில் கீழ்க்காண்போர் கவிதைகள் உள்பட பலரது கவிதைகள் வெளியாகின.

சிறுகதை

தீராநதி முன்னோடி எழுத்தாளர்களுடன் நவீனச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளையும், இளம் எழுத்தாளர்களது சிறுகதைகளையும் வெளியிட்டது. சில சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை அமைப்பால் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது.

தீராநதி இதழில் கீழ்க்காண்போரது சிறுகதைகள் உள்பட பலரது சிறுகதைகள் வெளியாகின

அருண்மொழிநங்கை நேர்காணல்
நேர்காணல்கள்

தீராநதி இதழில் வெளியான நேர்காணல்கள் குறிப்பித்தகுந்தவையாக அமைந்தன. கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஆய்வாளர்கள், ஓவியர்கள் என பலதரப்பினரின் நேர்காணல்களைத் தீராநதி வெளியிட்டது.

தீராநதி இதழில் கீழ்க்காண்போர் உள்பட பலரது நேர்காணல்கள் வெளியாகின.

தொடர்கள்

தீராநதியில் வெளியான தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புத் தொடர்கள், தனிநபர் கட்டுரைகள் எனப் பல வகையில் அவை அமைந்தன.

  • தீராநதி இதழில் கீழ்க்காணும் தொடர்கள் வெளியாகின.
  • சௌந்தர்ய – லா.ச.ராமாமிருதம்
  • வாழ்விலே ஒருமுறை – ஜெயமோகன்
  • காலம், கலை, கலைஞன் - சி. மோகன்
  • கனவின் பாதை - மணா
  • புலம்பல் பக்கம் – பாமரன்
  • கதை சொல்லிகளின் கதை - இரா. மணிகண்டன்
  • ஒரு ஐரோப்பியக் கலைப்பயணம் – இந்திரன்
  • புதிய ஈரானிய சினிமா – வெங்கடேஷ் சக்ரவர்த்தி
  • எதிர் வீடு – சிவசங்கரி
  • பெண்பால் அகதிகள் - மாலதி மைத்ரி
  • நினைவில் பதிந்த சுவடுகள் – வாஸந்தி
  • வானத்தின் கீழே – பிரபஞ்சன்
  • பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் – அ. மார்க்ஸ்
  • பெரு வெள்ளச் சிறு துளிகள் - லதா ராமகிருஷ்ணன்
  • நவீன கலையின் தமிழக உருவங்கள் – எல். முனுசாமி
கட்டுரைகள்

தீராநதி கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மொழி எனப் பல பொருண்மைகளில் தீராநதியில் கட்டுரைகள் வெளியாகின. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவையாய் அமைந்தன.

கட்டுரைப் பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

மதிப்பீடு

சக படைப்பாளிகளை வசைபாடுவதும், அது குறித்து ரசனைக் குறைவான படைப்புகளை வெளியிடுவதுமான சூழல்கள் இருந்த சமயத்தில், அதற்கு ஓர் மாற்றாக, இடைநிலை இலக்கிய இதழாக தீராநதி வெளிவந்தது. தீராநதி இதழில் வெளியான நேர்காணல்களும், நூல் மதிப்புரைகளும் பரவலான வரவேற்பைப் பெற்றன. தீராநதி இதழ் இலக்கியத்துத்துக்கு நல்லதொரு பங்களிப்பைத் தந்தது. கவிதை, சிறுகதை தொடங்கி இலக்கியத்தின் அனைத்தும் களங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட இலக்கிய இதழாக தீராநதி இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.