under review

அந்தாதி இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். முந்தைய பாடலின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி என்பனவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவதே அந்தாதி. அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர். அந்தாதிக்குரிய யாப்பு வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை.

அந்தாதி நூல்கள் பட்டியல்

தமிழில் பல்வேறு வகைமைகளில் அந்தாதி நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில…


எண் காலம் நூல்கள் ஆசிரியர்
1 பொ.யு. 5-ம் நூற்றாண்டு அற்புதத் திருவந்தாதி காரைக்காலம்மையார்
2 பொ.யு. 7-ம் நூற்றாண்டு முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி பேயாழ்வார்
3 பொ.யு. 8-ம் நூற்றாண்டு கைலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீரதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி பரணதேவ நாயனார்
நான்முகன் திருவந்தாதி திருமழிசையாழ்வார்
பெரிய திருவந்தாதி திருமழிசையாழ்வார்
பொன்வண்ணத்தந்தாதி சேரமான் பெருமாள் நாயனார்
4 பொ.யு. 8-9-ம் நூற்றாண்டு பெரிய திருவந்தாதி நம்மாழ்வார்
5 பொ.யு. 9-10-ம் நூற்றாண்டு திருச்சி அந்தாதி வேம்பையர்கோன் நாராயணன்
6 பொ.யு.10-ம் நூற்றாண்டு ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி
திருவேகம்பமுடையார் திருவந்தாதி பட்டினத்தடிகள்
7 பொ.யு. 12-ம் நூற்றாண்டு சடகோபர் அந்தாதி கம்பர்
சரஸ்வதி அந்தாதி கம்பர்
பந்தனந்தாதி ஒளவையார்
8 பொ.யு. 14-ம் நூற்றாண்டு பிள்ளை அந்தாதி நயினாராசாரியார்
9 பொ.யு. 15-ம் நூற்றாண்டு அழகர் அந்தாதி வில்லிபுத்தூரார்
கந்தர் அந்தாதி அருணகிரிநாதர்
10 பொ.யு. 16-ம் நூற்றாண்டு அருணகிரி அந்தாதி குகை நமசிவாயர்
அருணை அந்தாதி உண்ணாமுலை எல்லப்ப நயினார்
சித்தர் அந்தாதி சித்தர்
சௌந்தரி அந்தாதி பவழக்கொடி சுவாமிகள்
திருப்புகலூர் அந்தாதி நெற்குன்றவாணன்
திருவரங்கத்து அந்தாதி குருகைப்பெருமாள் கவிராயர்
11 பொ.யு. 16-17-ம் நூற்றாண்டு திருக்கருவை அந்தாதி வரதுங்கராம பாண்டியன்
12 பொ.யு. 17-ம் நூற்றாண்டு அழகர் அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
எதிராசர் அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருவரங்கத்து அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருவிடைமருதூர் அந்தாதி கடிகைமுத்துப் புலவர்
திருவேங்கடத்தந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
பழநி அந்தாதி பாலசுப்பிரமணியக் கவிராயர்
பழமலை அந்தாதி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
13 பொ.யு.17-18-ம் நூற்றாண்டு அன்னை அழுங்கல் அந்தாதி வீரமாமுனிவர்
14 பொ.யு. 18-ம் நூற்றாண்டு அபிராமி அந்தாதி அபிராமிபட்டர்
இலக்குமி அந்தாதி சிவானந்தமூர்த்தி
சீகாழி அந்தாதி சீர்காழி அருணாசலக் கவிராயர்
ஞான அந்தாதி வேதநாயக சாஸ்திரியார்
தணிகை அந்தாதி கந்தப்பையர்
திருவேகம்பர் அந்தாதி சிவஞான முனிவர்
மதீனத்தந்தாதி சர்க்கரைப்புலவர்
வடதிருமுல்லைவாயில் அந்தாதி சிவஞான முனிவர்
15 பொ.யு. 18-19-ம் நூற்றாண்டு அண்ணாமலை அந்தாதி கந்தப்ப ஞானதேசிகர்
எருசலை அந்தாதி ஆபிரகாம்
நல்லை அந்தாதி சேனாதிராய முதலியார்
நெல்லை வடிவுடை அம்மை அந்தாதி வே. அருணாசலம் பிள்ளை
16 பொ.யு. 19-ம் நூற்றாண்டு அப்பாக்கிய தேசிகர் அந்தாதி இராசகோபால் பிள்ளை
இலக்குமி அந்தாதி பொன்னையா முதலியார்
கடவுள் அந்தாதி சிந்துபூந்துறை இராமசாமிப் பிள்ளை
கருணை அந்தாதி கருணைதாசர்
கல்வளை அந்தாதி நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
கழுகாசல அந்தாதி வெ. அருணாசலத் தேவர்
குமரன் அந்தாதி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
குன்றக்குடி சண்முகநாதன் குன்றை அந்தாதி சொக்கலிங்க தேசிகர்
கோயில் அந்தாதி பாலகவி சீனிவாச ஐயங்கார்
கௌமாரத் திருவந்தாதி செந்தில் நாயக அடிகள்
சங்கரநயினார் கோயில் அந்தாதி அழகிய சொக்கநாதப் பிள்ளை
சங்களை அந்தாதி வை. இராமலிங்கம் பிள்ளை
சரசுவதி அந்தாதி வைரக்கண் வேலாயுதப் புலவர்
சித்திநகர் அந்தாதி இராசப்ப நாவலர்
சிவபூசை அந்தாதி அழகிய சொக்கநாத வரோதயன்
சிறுகுளம் விநாயகர் அந்தாதி கா. தாமோதரம்பிள்ளை
சிறைவிட அந்தாதி குருகையூர் வைணவப் புலவர்
சுப்பிரமணியர் செந்தில் அந்தாதி பாளையங்கோட்டை குற்றாலலிங்கம் பிள்ளை
ஞான அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
திரிகோணமலை அந்தாதி ௧. ஆறுமுகம்
திரு எவ்வளூர் அந்தாதி தி.வி. நாராயணசாமி பிள்ளை
திருக்கச்சி அந்தாதி காஞ்சி இராமாநுசம் பிள்ளை
திருக்கருவை அந்தாதி அண்ணாமலை ரெட்டியார்
திருச்செந்தில் அந்தாதி சின்னையன்
திருச்செந்தூர் அந்தாதி இராம சுப்பிரமணிய ஐயர்
திருச்செந்தூர் சுப்பிரமணியர் அந்தாதி சிந்துபூந்துறை இராமசாமிப் பிள்ளை
திருப்பதி அழகர் அந்தாதி தொழுவூர் வேலாயுத முதலியார்
திருப்பரங்குன்றத்து அந்தாதி மதுரை சபாபதி முதலியார்
திருமகளந்தாதி தண்டபாணி சுவாமிகள்
திருமுக்கூடல் அந்தாதி விஜயராகவப்பிள்ளை
திருவருள் அந்தாதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை
திருவாடனை அந்தாதி கல்போது பிச்சுவையர்
திருவையாற்று அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
தேவமாதா அந்தாதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை
நாகை அந்தாதி காயற்பட்டினம் செய்கு அப்துல்காதிறு நயினார்
நாதகிரி அந்தாதி பிச்சையா நாவலர்
நான்முகன் திருவந்தாதி சீனிவாச அரங்கநாதர்
நெல்லை அந்தாதி எஸ். எம். தையல்பாகம் பிள்ளை
பரமதேசிகர் அந்தாதி அனந்தநாத சுவாமிகள்
பரவாசுதேவர் திருவந்தாதி ஐயாசாமி முதலியார்
பிள்ளை அந்தாதி வெங்கட வீரராகவாச்சாரி
பெருமாள் அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
மகர அந்தாதி சரவணப் பெருமாள் கவிராயர்
மணவாள மாமுனிகள் திருவந்தாதி வேங்கடரங்க ராமாநுஜதாசர்
மதீனத்து அந்தாதி அப்துல்காதர்
மயிலாசலத்து அந்தாதி சின்னைய தேசிகர்
மயிலை அந்தாதி சுப்பிரமணியக் கவிராயர்
மருதடி அந்தாதி அப்பாப் பிள்ளை
மருதாசலக்கடவுள் அந்தாதி தி.வா. சுப்பிரமணியப் பிள்ளை
மறைசை அந்தாதி நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
மாயூரநாதர் அந்தாதி வே. முத்துசாமி ஐயர்
மாவை அந்தாதி மாவை.பூ. பொன்னம்பலம் பிள்ளை
முருகர் அந்தாதி திருப்பாதிரிப்புலியூர் சண்முக ஞானியார்
வில்வவனத்து அந்தாதி சுப்பு. இராமசாமி முதலியார்
வீரை அந்தாதி அண்ணாமலை ரெட்டியார்
வெல்லை அந்தாதி ஆணல் சதாசிவம் பிள்ளை
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோதை அந்தாதி அழகிய சொக்கநாதப் பிள்ளை
17 பொ.யு. 19-20-ம் நூற்றாண்டு அத்தகிரி அந்தாதி பள்ளிகொண்டான் பிள்ளை
அரங்கத்து அந்தாதி வே. சீனிவாச ஐயங்கார்
அருட்பிரகாசர் அற்புத அந்தாதி ச மு. கந்தசாமிப் பிள்ளை
அளகை உமையந்தாதி அ. சண்முகம் செட்டியார்
இணுவை அந்தாதி அம்பிகைபாகர்
இராமன் அந்தாதி இராமசாமி சோதிடர்
இலக்குமி அந்தாதி கருப்பையாப் பாவலர்
ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி மு.ரா. அருணாசலக் கவிராயர்
கதிர்காமத்து அந்தாதி முத்துக்குமார சுவாமிகள்
காஞ்சி அத்தகிரி அந்தாதி கு. கந்தசாமிப் பிள்ளை
கைலாசவிநாயகர் அந்தாதி அ. சண்முகம் செட்டியார்
கொற்றவாளீசுவரர் அந்தாதி வீரசுப்பையஞான தேசிகர்
சங்கர ராமேஸ்வரர் பேரில் புகழ்பெறந்தாதி கந்தசாமிப் பிள்ளை
சற்குரு அந்தாதி இராமானந்த அடிகள்
சிதம்பர தேசிகர் அந்தாதி ஆத்மானந்த அடிகள்
சுங்குரும்மை அந்தாதி முத்தையா இலக்கணம்
செங்குந்த வேலவர் திருக்கை வழக்கத்தாதி ஆறுமுகப் பாவலர்
சேடகிரி குமரேசர் அந்தாதி பள்ளிகொண்டான் பிள்ளை
திருநெல்லையம்மை அந்தாதி வீரசுப்பைய ஞானதேசிகர்
திருபகுதந்தாதி அப்துல்காதிர் புலவர்
திருமயிலைக் கற்பகவல்லி அந்தாதி பிச்சை இபுராகிம் புலவர்
திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி மனோன்மணி அம்மையார்
திருவானைக்கா அகிலாண்டநாயகி அந்தாதி மனோன்மணி அம்மையார்
திருவோத்தூர் இளமுலை அம்பிகை அந்தாதி வி.சாமிநாத பிள்ளை
பசுபதீச்சுரர் அந்தாதி முத்துக்குமாரசாமி குருக்கள்
புலியூர் அந்தாதி சிவானந்தையர்
பூவராகர் அந்தாதி சீனிவாச தாதாச்சாரியார்
மகா மாரியம்மன் அந்தாதி பூபாலப் பிள்ளை
மயிலத்தந்தாதி புதுவை பெரியசாமிப் பிள்ளை
மறைசை அந்தாதி சிவசம்புப் புலவர்
மாவை அந்தாதி சபாபதி நாவலர்
முருகன் அந்தாதி இராமசாமி சோதிடர்
18 பொ.யு. 20-ம் நூற்றாண்டு அம்மை பாதி அப்பன்பாதி அந்தாதி திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியன்
ஆவினன்குடி அந்தாதி வே. இராமநாதன் செட்டியார்
ஈங்கோய்மலை அந்தாதி திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியன்
சிங்கை நகரந்தாதி சதாசிவப் பண்டிதர்
செந்தில் குமரேசர் அந்தாதி மு. சுப்பராயபிள்ளை
திருவரசிலி அந்தாதி அ. சிதம்பரநாத முதலியார்
தெய்வசிகாமணி தேசிகர் ஞான அந்தாதி குமாரசுவாமி தேசிகர்
பழநி அந்தாதி சிவசூரியம் பிள்ளை
வண்ணை அந்தாதி சதாசிவப் பண்டிதர்
வேதநாயகர் அந்தாதி சரவண பவானந்தர்
வேதபுரி அந்தாதி துரைசாமி முதலியார்
வேளூர் முத்துக்குமாரசாமி அந்தாதி முத்துக்குமார தாசர்
ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி கண்ணதாசன்
காலம் தெரியாதவை சங்கரன் அந்தாதி சுப்பையா தேசிகர்
வல்லை அந்தாதி குறட்டி வரதையன்
ஆசிரியர் பெயரும் காலமும் தெரியாதவை கணபதி அந்தாதி
சுப்பிரமணிய அந்தாதி
தில்லை அந்தாதி
நறையூர் அந்தாதி
பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி
புல்லை அந்தாதி
மல்லிகார்ச்சுன அந்தாதி

உசாத்துணை

  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம்: பகுதி-3, ம.சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பல்கலைகழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு: 2004.


✅Finalised Page