under review

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

From Tamil Wiki
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

திருவேகம்பமுடையார் (திருஏகம்பமுடையார்) திருவந்தாதி என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதி வகையில் அமைந்த சைவ நூல். நம்பியாண்டார் நம்பி தொகுத்த சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறுகிறது.

ஆசிரியர்

திருவேகம்பமுடையார் திருவந்தாதியை இயற்றியவர் இதனை இயற்றியவர் திருவொற்றியூரைச் சேர்ந்த பட்டணத்துப் பிள்ளையார், திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தடிகள்.

நூல் பற்றி

திருவேகம்பமுடையார் திருவந்தாதி கட்டளைக் கலித்துறை வடிவத்தில் அந்தாதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரைத் துதிக்கும் 100 பாடல்களைக் கொண்டது. 38 - 44 பாடல்களில் மாதொரு பாகராகிய அர்த்தநாரீச்சுரர் திருக்கோலத்தின் இயல்பு உரைக்கப்படுகிறது. சிவன் கோயில் கொண்டுள்ள 69 தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் இமயம், கொல்லி, பொதியம், விந்தம், மந்தரம், மகேந்திரம், கருங்குன்றம், வெண்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், நற்குன்றம், திருவிற் பெரும்பேறு, புலிவலம், வில்வலம், திருக்காரிகரை, திருப்போந்தை, முக்கோணம்ஆகியவை வைப்புத் தலங்கள் எனக் கொள்ளத்தக்கவை. 75- 85 பாடல்களில் காஞ்சியின் அழகும் வளமும் கூறப்படுகின்றன.

திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அகத்துறைப் பாடல்களும் இடம் பெறுகின்றன. அவை ஏகாம்பர நாதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அமைந்தவை. துதிப்பாடல்கள் அகத்துறையில் அமைந்துள்ளன. துதியும், அகத்துறையும் மாறிமாறிப் பத்துப் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் 'மெய்த்தொண்டர்’ என்று தொடங்கி 'மெய்த்தொண்டரே’ என மண்டலித்து முடிகிறது.

பாடல் நடை

கட்டளைக்கலித்துறை

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன் மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலு நற்றொண்டு வந்தில னுண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே யுன்னைப் போற்றுகின்ற
வித்தொண்டனென் பணி கொள்ளுதியோ கச்சியேகம்பனே

திருவந்தாதி

பெற்றுகந் தேனென்று மர்ச்சனை செய்யப் பெருகு நின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினிதாக்கச் சியேகம்பத்தின்
பற்றுகந் தேறுமுகந் தவனே படநாகக் கச்சின்
சுற்றுகந் தேர்விடைமேல் வருவாய் நின்றுணையடியே

உசாத்துணை


✅Finalised Page