under review

குமாரசுவாமி தேசிகர்

From Tamil Wiki

குமாரசுவாமி தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரசுவாமி தேசிகர் திருச்செந்தூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீரவநல்லூரில் மாறியாடும் பெருமாள் சோதிஷரின் மகனாக பொ.யு. 19-ம் நூற்றாண்டில் பிறந்தார். வீரவநல்லூர் தென்பாண்டி நாட்டில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

குமாரசுவாமி தேசிகர் குமாசுவாமீயம் எனும் கணித நூலை எழுதினார். இதில் மூலகாண்டம், சாதககாண்டம், முகூர்த்தகாண்டம், சிந்தனாக்காண்டம் ஆகிய நான்கு காண்டங்கள் உள்ளன. இதில் ஐம்பத்தி நான்கு படலங்களும், நாலாயிரத்தி முந்நூற்றி பன்னிரெண்டு செய்யுள்களும் உள்ளன.

பாடல் நடை

  • குமாரசுவாமீயம்

போதிட மாகிய வேதிய
நாத புராதனன் மான்முதலோர்
ஈதிட மாய்வரு வாரெனில்
யாவும் விடாதியல் பாகநவில்
சோதிட மேதிட மகாநடாவு
குமார சுவாமியம் யான்
ஓதிட வேயென் தோரகம்
வாழ்பவ னானைச கோதரனே

நூல் பட்டியல்

  • குமாரசுவாமீயம்

உசாத்துணை



✅Finalised Page