under review

சதாசிவ பண்டிதர்

From Tamil Wiki
சதாசிவம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதாசிவம் (பெயர் பட்டியல்)
பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

சதாசிவ பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சதாசிவ பண்டிதர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணார் பண்ணேயில் நாச்சிமார் கோயிலடி என்னும் ஊரில் பிறந்தார். தந்தை நமச்சிவாயம் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சதாசிவ பண்டிதர் வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி ஆகிய நூல்களை எழுதினார். சித்திர கவிகள் பல பாடினார். இந்நூல்கள் 1887-ல் அச்சேறின.

நூல் பட்டியல்

  • வண்ணையந்தாதி
  • வண்ணை நகரூஞ்சல்
  • சிங்கை நகரந்தாதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Mar-2023, 06:15:14 IST