under review

விகடன் தடம்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited)
(Link Created and Proof Checked)
Line 11: Line 11:


====== நேர்காணல்கள் ======
====== நேர்காணல்கள் ======
கீழ்க்காண்போரின் நேர்காணல்கள் விகடன் தடம் இதழில் இடம்பெற்றன.
கீழ்க்காண்போரின் நேர்காணல்கள் விகடன் தடம் இதழில் வெளியாகின.


* அசோகமித்திரன்
* அசோகமித்திரன்
Line 65: Line 65:


== அடிக்குறிப்பு ==
== அடிக்குறிப்பு ==
<references />{{Ready for review}}

Revision as of 12:16, 14 March 2024

விகடன் தடம்

விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோடு வெளியானது. வாசக ஆதரவின்மை காரணமாக 2019-ல் நின்றது.

வெளியீடு

இலக்கியத்தை முதன்மைப்படுத்தி வெளியான இதழ் விகடன் தடம். ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து ஜூன் 1, 2016 முதல் மாத இதழாக இவ்விதழ் வெளிவந்தது. முகப்பு அட்டையில் ‘‘மொழி செல்லும் வழி’ என்ற வாசகம் இடம் பெற்றது. இதழின் விலை ஐம்பது ரூபாய்.

உள்ளடக்கம்

விகடன் தடம் இதழில் சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், நூல் விமர்சனம் போன்றவை வெளியாகின. தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் நேர்காணல்களை இதழ்தோறும் வெளியிட்டது. முதல் இதழிலேயே சிறுகதையின் வழி – தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு எனும் ஜெயமோகனின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை வெளியானது. பிரபஞ்சன், லக்ஷ்மி மணிவண்ணன், அ. முத்துகிருஷ்ணன், சயந்தன், சுபகுணராஜன், சுகுணா திவாகர், பாலு சத்யா, யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது கட்டுரைகள் வெளியாகின.

இலக்கிய, அனுபவத் தொடர்களுக்கும் விகடன் தடம் முக்கியத்துவம் அளித்தது. அசோகமித்திரன் தொடங்கி க்ருஷாங்கினி, வண்ணநிலவன், எம்.ஏ. சுசீலா, ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோரின் ‘இன்னும் சில சொற்கள்” தொடர் சிறந்த வாசக வரவேற்பைப் பெற்றது. யுவன் சந்திரசேகர், ஸ்டாலின் ராஜாங்கம், ச. தமிழ்ச்செல்வன், சு. தமிழ்ச்செல்வி, லீனா மணிமேகலை, லக்ஷ்மி சரவணகுமார், ஷாஜி, சீனிவாசன் நடராஜன், ந. முருகேச பாண்டியன், ஆர். அபிலாஷ், அ. வெண்ணிலா எனப் பலர் விகடன் தடம் இதழில் பங்களித்தனர்.

நேர்காணல்கள்

கீழ்க்காண்போரின் நேர்காணல்கள் விகடன் தடம் இதழில் வெளியாகின.

மற்றும் பலர்

நிறுத்தம்

விகடன் தடம் இதழ் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் 1, 2019 இதழுக்குப் பின் வெளிவராமல் நின்றுபோனது

மதிப்பீடு

தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற இதழாக 'விகடன் தடம்' வெளிவந்தது. குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதிகளின் நேர்காணலை வெளியிட்டது. இலக்கியவாதிகள் பலரால் விரும்பப்பட்ட இதழாக இருந்தது. தமிழ் இதழுலகில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இதழாக விகடன் தடம் முத்திரை பதித்தது.

விகடன் தடம் இதழ் பற்றி ஜெயமோகன், “தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி, தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன் [1]” என்று குறிப்பிட்டார்.

உசாத்துணை

அடிக்குறிப்பு

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.