விகடன் தடம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
(Para Added and Edited)
Line 2: Line 2:
விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோடு வெளியானது. வாசக ஆதரவின்மை காரணமாக 2019-ல் நின்றது.
விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோடு வெளியானது. வாசக ஆதரவின்மை காரணமாக 2019-ல் நின்றது.


== வெளியீடு ==
இலக்கியத்தை முதன்மைப்படுத்தி வெளியான இதழ் விகடன் தடம். [[ஆனந்த விகடன்]] குழுமத்திலிருந்து ஜூன் 1, 2016 முதல் மாத இதழாக இவ்விதழ் வெளிவந்தது. முகப்பு அட்டையில் ‘‘மொழி செல்லும் வழி’ என்ற வாசகம் இடம் பெற்றது. இதழின் விலை ஐம்பது ரூபாய்.


== உள்ளடக்கம் ==
விகடன் தடம் இதழில் சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், நூல் விமர்சனம் போன்றவை வெளியாகின. தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் நேர்காணல்களை இதழ்தோறும் வெளியிட்டது. முதல் இதழிலேயே சிறுகதையின் வழி – தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு எனும் [[ஜெயமோகன்|ஜெயமோக]]னின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை வெளியானது. [[பிரபஞ்சன்]], [[லக்ஷ்மி மணிவண்ணன்]], அ. முத்துகிருஷ்ணன், [[சயந்தன்]], சுபகுணராஜன், சுகுணா திவாகர், பாலு சத்யா, யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது கட்டுரைகள் வெளியாகின.


{{Being created}}
இலக்கிய, அனுபவத் தொடர்களுக்கும் விகடன் தடம் முக்கியத்துவம் அளித்தது. [[அசோகமித்திரன்]] தொடங்கி [[க்ருஷாங்கினி]], [[வண்ணநிலவன்]], [[எம். ஏ. சுசீலா|எம்.ஏ. சுசீலா]], ஈரோடு [[தமிழன்பன்]] உள்ளிட்டோரின் ‘இன்னும் சில சொற்கள்” தொடர் சிறந்த வாசக வரவேற்பைப் பெற்றது. [[யுவன் சந்திரசேகர்]], [[ஸ்டாலின் ராஜாங்கம்]], [[ச.தமிழ்ச்செல்வன்|ச. தமிழ்ச்செல்வன்]], [[சு.தமிழ்ச்செல்வி|சு. தமிழ்ச்செல்வி]], [[லீனா மணிமேகலை]], [[லக்ஷ்மி சரவணகுமார்]],  ஷாஜி, சீனிவாசன் நடராஜன், [[ந. முருகேச பாண்டியன்]], [[அபிலாஷ் சந்திரன்|ஆர். அபிலாஷ்]], [[அ. வெண்ணிலா]] எனப் பலர் விகடன் தடம் இதழில் பங்களித்தனர்.
 
====== நேர்காணல்கள் ======
கீழ்க்காண்போரின் நேர்காணல்கள் விகடன் தடம் இதழில் இடம்பெற்றன.
 
* அசோகமித்திரன்
* [[பால் சக்காரியா]]
* [[அ. முத்துலிங்கம்|அ.முத்துலிங்கம்]]
* [[கி. ராஜநாராயணன்|கி.ராஜநாராயணன்]]
* [[இந்திரா பார்த்தசாரதி]]
* ஜெயமோகன்
* [[எஸ். ராமகிருஷ்ணன்|எஸ்.ராமகிருஷ்ணன்]]
* [[சாரு நிவேதிதா]]
* பிரபஞ்சன்
* தொ.பரமசிவன்
* அ. மார்க்ஸ்
* [[பெருமாள் முருகன்]]
* [[விக்ரமாதித்யன்]]
* [[வைரமுத்து]]
* [[சி.எம். முத்து]]
* [[ஆ. இரா. வேங்கடாசலபதி|ஆ.இரா. வேங்கடாசலபதி]]
* [[சு.வெங்கடேசன்]]
* [[இராசேந்திர சோழன்|இராசேந்திரசோழன்]]
* [[மனுஷ்ய புத்திரன்|மனுஷ்யபுத்திரன்]]
* [[இமையம்]]
* [[ஷோபாசக்தி|ஷோபா சக்தி]]
* சுகுமாரன்
* [[கண்மணி குணசேகரன்]]
* [[ஆ. சிவசுப்பிரமணியன்]]
* மு.ராமசாமி
* மருது
* டிராட்ஸ்கி மருது
* [[கலாப்ரியா]]
* [[குட்டி ரேவதி]]
* ஜி. நக்கீரன்
* [[ரமேஷ் பிரேதன்]]
 
மற்றும் பலர்
 
== நிறுத்தம் ==
விகடன் தடம் இதழ் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் 1, 2019 இதழுக்குப் பின் வெளிவராமல் நின்றுபோனது
 
== மதிப்பீடு ==
தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற இதழாக 'விகடன் தடம்' வெளிவந்தது. குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதிகளின் நேர்காணலை வெளியிட்டது. இலக்கியவாதிகள் பலரால் விரும்பப்பட்ட இதழாக இருந்தது. தமிழ் இதழுலகில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இதழாக விகடன் தடம் முத்திரை பதித்தது.
 
விகடன் தடம் இதழ் பற்றி ஜெயமோகன், “தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி, தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன் <ref>[https://www.jeyamohan.in/125507/ விகடன் தடம் - ஜெயமோகன் கட்டுரை]</ref>” என்று குறிப்பிட்டார்.
 
== உசாத்துணை ==
 
* [https://www.vikatan.com/thadam விகடன் தடம் இணையதளம்]
* [https://www.facebook.com/thadamvikatan/ விகடன் தடம் ஃபேஸ்புக் பக்கம்]
* [https://www.panuval.com/vikatan-thadam-10025486 விகடன் தடம் இதழ் தொகுப்பு: பனுவல். காம்]
* [https://sivananthamneela.wordpress.com/2019/10/19/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/ விகடன் தடம்: சிவானந்தம் நீலகண்டன் கட்டுரை]


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
== அடிக்குறிப்பு ==

Revision as of 12:14, 14 March 2024

விகடன் தடம்

விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோடு வெளியானது. வாசக ஆதரவின்மை காரணமாக 2019-ல் நின்றது.

வெளியீடு

இலக்கியத்தை முதன்மைப்படுத்தி வெளியான இதழ் விகடன் தடம். ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து ஜூன் 1, 2016 முதல் மாத இதழாக இவ்விதழ் வெளிவந்தது. முகப்பு அட்டையில் ‘‘மொழி செல்லும் வழி’ என்ற வாசகம் இடம் பெற்றது. இதழின் விலை ஐம்பது ரூபாய்.

உள்ளடக்கம்

விகடன் தடம் இதழில் சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், நூல் விமர்சனம் போன்றவை வெளியாகின. தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் நேர்காணல்களை இதழ்தோறும் வெளியிட்டது. முதல் இதழிலேயே சிறுகதையின் வழி – தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு எனும் ஜெயமோகனின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை வெளியானது. பிரபஞ்சன், லக்ஷ்மி மணிவண்ணன், அ. முத்துகிருஷ்ணன், சயந்தன், சுபகுணராஜன், சுகுணா திவாகர், பாலு சத்யா, யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது கட்டுரைகள் வெளியாகின.

இலக்கிய, அனுபவத் தொடர்களுக்கும் விகடன் தடம் முக்கியத்துவம் அளித்தது. அசோகமித்திரன் தொடங்கி க்ருஷாங்கினி, வண்ணநிலவன், எம்.ஏ. சுசீலா, ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோரின் ‘இன்னும் சில சொற்கள்” தொடர் சிறந்த வாசக வரவேற்பைப் பெற்றது. யுவன் சந்திரசேகர், ஸ்டாலின் ராஜாங்கம், ச. தமிழ்ச்செல்வன், சு. தமிழ்ச்செல்வி, லீனா மணிமேகலை, லக்ஷ்மி சரவணகுமார், ஷாஜி, சீனிவாசன் நடராஜன், ந. முருகேச பாண்டியன், ஆர். அபிலாஷ், அ. வெண்ணிலா எனப் பலர் விகடன் தடம் இதழில் பங்களித்தனர்.

நேர்காணல்கள்

கீழ்க்காண்போரின் நேர்காணல்கள் விகடன் தடம் இதழில் இடம்பெற்றன.

மற்றும் பலர்

நிறுத்தம்

விகடன் தடம் இதழ் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் 1, 2019 இதழுக்குப் பின் வெளிவராமல் நின்றுபோனது

மதிப்பீடு

தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற இதழாக 'விகடன் தடம்' வெளிவந்தது. குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதிகளின் நேர்காணலை வெளியிட்டது. இலக்கியவாதிகள் பலரால் விரும்பப்பட்ட இதழாக இருந்தது. தமிழ் இதழுலகில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இதழாக விகடன் தடம் முத்திரை பதித்தது.

விகடன் தடம் இதழ் பற்றி ஜெயமோகன், “தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி, தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன் [1]” என்று குறிப்பிட்டார்.

உசாத்துணை

அடிக்குறிப்பு