under review

செம்மொழி செவ்வியல் நூல்கள் செம்பதிப்பு

From Tamil Wiki

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தொன்மைக் காலம் முதல் பொ.யு ஆறாம் நூற்றாண்டு வரையிலான நூல்களை செம்பதிப்புகளாகக் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக் காலம் முதல் பொ.யு ஆறாம் நூற்றாண்டு வரையிலான நூல்களைச் செம்பதிப்பாகக் கொண்டு வருதல் என்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதன்மைத் திட்டப் பணிகளில் ஒன்று.

அவ்வகையில் செவ்வியல் நூல்களை சுவடிகள், பழம்பதிப்புகள், உரைமேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு மரபுவழி மூலபாடச் செம்பதிப்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

நூல்களும் அறிஞர்களும்

செம்மொழி செவ்வியல் நூல்கள் செம்பதிப்புத் திட்டத்தை கீழ்க்காணும் அறிஞர்கள் முன்னெடுத்தனர்.

எண் வகைமை நூல்கள் பதிப்பாசிரியர்
1 இலக்கணம் தொல்காப்பியம் (எழுத்து,சொல்) பேராசிரியர் பொன். கோதண்டராமன்
தொல்காப்பியம் (பொருள்) பேராசிரியர் இராம. பெரியகருப்பன்
2 பத்துப்பாட்டு நற்றிணை பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
குறுந்தொகை பேராசிரியர் பெ. மாதையன்
ஐங்குறுநூறு பேராசிரியர் இரா. மோகன்
பதிற்றுப்பத்து பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன்
கலித்தொகை பேராசிரியர் கி. செம்பியன்
அகநானூறு பேராசிரியர் சுப. அண்ணாமலை
புறநானூறு பேராசிரியர் சோ.ந. கந்தசாமி
பரிபாடல் பேராசிரியர் வ. குருநாதன்
3 பதினெண் கீழ்க்கணக்கு திருக்குறள் பேராசிரியர் இரா. சாரங்கபாணி
நாலடியார் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
பழமொழி நானூறு பேராசிரியர் த. வசந்தாள்
நான்மணிக்கடிகை பேராசிரியர் வே.இரா. மாதவன்
சிறுபஞ்சமூலம் பேராசிரியர் வே.இரா. மாதவன்
ஏலாதி பேராசிரியர் வே.இரா. மாதவன்
திரிகடுகம் பேராசிரியர் வே.இரா. மாதவன்
முதுமொழிக்காஞ்சி பேராசிரியர் சு. அமிர்தலிங்கம்
ஆசாரக்கோவை பேராசிரியர் சு. அமிர்தலிங்கம்
திணைமாலை நூற்றைம்பது பேராசிரியர் அ. அறிவுநம்பி
திணைமொழி ஐம்பது பேராசிரியர் அ. அறிவுநம்பி
ஐந்திணை ஐம்பது பேராசிரியர் அ. அறிவுநம்பி
ஐந்திணை எழுபது பேராசிரியர் அ. அறிவுநம்பி
கைந்நிலை பேராசிரியர் அ. தாமோதரன்
கார் நாற்பது பேராசிரியர் கி. அன்பன்
களவழி நாற்பது பேராசிரியர் கி. அன்பன்
இன்னா நாற்பது பேராசிரியர் கி. அன்பன்
இனியவை நாற்பது பேராசிரியர் கி. அன்பன்
4 பிற நூல்கள் சிலப்பதிகாரம் புலவர் ஆ. பழநி
மணிமேகலை பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர்
முத்தொள்ளாயிரம் பேராசிரியர் ய. மணிகண்டன்
இறையனார் களவியல் உரை பேராசிரியர் அ. தாமோதரன்

இந்தத் திட்டத்தின் மூலமாக இறையனார் களவியலுரை, ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி) ஆகிய நூல்களுக்கான செம்பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பிற பதிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உசாத்துணை


✅Finalised Page