under review

மாலை இலக்கியங்கள்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

’மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு தொடுத்து அமைவது மாலை. அது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் தொல்காப்பியத்தின் ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன.

மாலை இலக்கியப் பிரிவுகள்

தமிழில் 500-க்கும் மேற்பட்ட மாலை இலக்கிய நூல்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பொருள் பற்றிப் பல பாடல்கள் தொடர்ந்து அமைந்த போது, அவை மாலை என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டன. வெண்பாவும் விருத்தமும் அல்லது வெண்பாவும் கலித்துறையும் என இருவகையில் இருபது பாக்கள் மாறி மாறி வருவது இரட்டைமணி மாலை. வெண்பா, ஆசிரியம், கலித்துறை ஆகிய மூன்றும் முப்பது பாடல்களாக மாறிமாறி வருவது மும்மணி மாலை. வெண்பா, ஆசிரியம், கலித்துறை, விருத்தம் ஆகிய நான்கும் நாற்பது பாடல்களில் மாறிமாறி வருவது நான்மணி மாலை. இவ்வாறு பொருள், யாப்பு, அமைப்பு, எண்ணிக்கை போன்ற பலவற்றின் அடிப்படையில் மாலை இலக்கியங்கள் பல்வேறு பிரிவுகளில் அமைந்தன.

புறத்துறை மாலைகள்
பொருள் நிலை மாலைகள்
யாப்பு மாலை
  • வெண் புணர்ச்சி மாலை
  • வஞ்சி மாலை
பல்வகை யாப்பு மாலை
கதை மாலைகள்
  • அல்லியரசாணி மாலை
  • புலேந்திரன் களவு மாலை
  • பவளக்கொடி மாலை
பிற இலக்கிய மாலைகள்
  • சிலேடைமாலை
  • அந்தாதி மாலை
  • சித்திரக் கவி மாலை

சிற்றிலக்கிய மாலை வகைகள்

பிரபந்த தீபிகை, 96 சிற்றிலக்கியங்களில், 28 மாலை வகைகள் உள்ளதாய்க் குறிப்பிட்டுள்ளது. அவை,

உசாத்துணை


✅Finalised Page