under review

வீரவெட்சிமாலை

From Tamil Wiki

வீரவெட்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றி வீரனின் புகழை தசாங்கமாகப் பாடுவது வீரவெட்சிமாலை.

மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை கவருதற்கு
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின நிரை கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை தசாங்கம் பொருந்த
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும் வெட்சி மாலையாமே

                                        -இலக்கண விளக்கம் பொருளதிகாரம், 14

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


✅Finalised Page