under review

மணிமாலை

From Tamil Wiki

மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவர இயற்றப்படுவது மணிமாலை.

தொன்னூல் விளக்கம்[1], முத்துவீரியம்[2], பிரபந்த தீபம்[3], பிரபந்த தீபிகை[4] ஆகிய பாட்டியல் நூல்கள் மணிமாலையை ஓர் சிற்றிலக்கிய வகையாக் குறித்துள்ளன.

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. மணிமாலை வெண்பா வகைநா லைந்துடன்
    இணையாய்க் கலித்துறை இரட்டைப் பாடலே

    - தொன்நூல் விளக்கம் - 279

  2. எப்பொருண் மேலும் வெண்பா இருபதும்
    கலித்துறை நாற்பதும் கலந்து வருவது
    மணிமாலை யாகும் வழுத்துங் காலே

    - முத்துவீரியம் - 1056

  3. மணிமாலை தானே மன்னும் எப்பொருளினும்
    வெண்பா இருபான் கலித்துறை நாற்பான்
    விரவிப்பாட விதித்தனர் புலவர்

    - பிரபந்ததீபம் - 30

  4. சொல்லுமெப் பொருளின் மேலும்
    தூய வெண் பாவிரு பஃதுநாற் பதுகலித்
    துறை விரவின் மணிமாலையாம்.

    - பிரபந்த தீபிகை - 12



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2023, 16:41:38 IST