under review

வருக்கமாலை

From Tamil Wiki

வருக்கமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தமிழ் மொழியில் முதலில் வரும் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்ற எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் கொண்டு அவற்றில் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது வருக்கமாலை[1]. இந்த முறையில் பாடப்படும் அகப்பொருள் பாடல்கள் வருக்கக் கோவை எனப்படும்.

எடுத்துக்காட்டு

வருக்கமாலைக்கு எடுத்துக்காட்டாக நன்கு அறிமுகமான மூன்று நூல்கள்:

  • ஆத்தி சூடி - அறம்செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். ... (இருசீர் வருக்கம்)
  • கொன்றை வேந்தன் - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஈயார் தேட்டை தீயா கொள்வர். ... (நாற்சீர் வருக்கம்)
  • பாரதியார் புதிய ஆத்தி சூடி - அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய். ... (இருசீர் வருக்கம்)

அடிக்குறிப்புகள்

  1. வருக்கத் தினைச்சொலல் வருக்க மாலை

    இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 826

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page