under review

வருக்கக் கோவை

From Tamil Wiki
நெல்லை வருக்கக் கோவை

வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தமிழ் எழுத்துக்களை (உயிர் மற்றும் உயிர்மெய்) அகரவரிசையில் பாடல்களின் முதல் எழுத்தாக அமைத்து அகத்துறையில் பாடப்படுவது வருக்கக்கோவை. உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை

உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.

என்று வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் கூறுகிறது.

இதே முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.

வருக்கக் கோவை நூல்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page