under review

உற்பவமாலை

From Tamil Wiki

To read the article in English: Urpavamalai. ‎


உற்பவமாலை (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவமாலை

பத்தான் வரினே,
குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே
- நவநீதப் பாட்டியல், பாடல் 50

அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து
உரிதின் புகறல் உற்பவ மாலை
                                  இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

மால் பிறப்பு பத்தினையும் கூறும் இலக்கிய வடிவம் உற்பவ மாலை. ஆசிரிய விருத்தத்தால் அமையப் பெறுவது இது . திருமங்கையாழ்வார் உற்பவமாலை பாடியதாகச் சிலர் கருதுகின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் திருமாலின் பிறப்புகள் ஒரே பதிகத்தில் பேசப்பட்டாலும் (எட்டாம் பத்து-எட்டாம் திருமொழி[1]), அவை தலைவனைக் காக்க வேண்டிப் பாடப்படவில்லை. திருமாலின் பெருமையை கூறுவதோடு நின்றுவிடுகின்றன.

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page