நவீன இலக்கியம்
நவீன இலக்கியம் என தமிழில் விமர்சகர்களால் வரையறுக்கப்படும் எழுத்து பல இயல்புகள் கொண்டது. வாசகனை நோக்கி கருத்துக்களை முன்வைத்து பேசுவது, அவனுடைய வாழ்க்கையனுபவங்களை துலக்குவது, அவனுடைய அழகுணர்வால் தொடர்புறுத்திக் கொள்வது நவீன இலக்கியத்தின் இயல்பு. வாசகனை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அதன் மொழியோ அமைப்போ கருத்தோ உருவாவதில்லை. ஆசிரியன் தன்னை தன் புனைவின் வழியாக வாசகனின் முன் வைப்பதற்கே நவீன இலக்கியத்தில் முயல்கிறான். தன் கருத்துக்களை முன்வைக்கலாம். தன் வாழ்க்கையனுபவ அறிதல்களைக்கொண்டு வாசகனின் வாழ்க்கையை துலக்கிக்காட்டலாம். மொழி, அமைப்பு, உணர்வுகள் ஆகியவற்றால் வாசகனின் அழகுணர்வுடன் உரையாடலாம். இப்பிரிவினையை அறுதியாகச் செய்ய முடியாது. எனினும் தமிழிலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள இப்பிரிவினை இன்றியமையாதது
பார்க்க: நவீனத் தமிழிலக்கியம்
நாவல்கள்
- கமலாம்பாள் சரித்திரம் -பி.ஆர்.ராஜம் ஐயர்
- பத்மாவதி சரித்திரம்- அ. மாதவையா
- விஜயமார்த்தாண்டம்- அ. மாதவையா
- முத்துமீனாட்சி- அ. மாதவையா
- பிரதாப முதலியார் சரித்திரம்- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சுந்தரி விஜயம் - வ.ராமசாமி ஐயங்கார்
- சின்னச்சாம்பு - வ.ராமசாமி ஐயங்கார்
- கோதைத்தீவு - வ.ராமசாமி ஐயங்கார்
- சந்திரிகையின் கதை - சி. சுப்ரமணிய பாரதி
- தேசபக்தன் கந்தன் - கா.சி.வேங்கடரமணி
- தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்- மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்
- மண்ணாசை- சங்கர ராம்
- காரியதரிசி-சங்கர ராம்
- இன்ப உலகம்-சங்கர ராம்
- பாசம்-சங்கர ராம்
- பரிசலோட்டி-சங்கர ராம்
- பானா பரமசிவம்-சங்கர ராம்
- அருள் பண்ணை-சங்கர ராம்
- தீயும் வெடியும்-சங்கர ராம்
- அன்புநிலையம்- சுத்தானந்த பாரதியார்
- நாகம்மாள் - ஆர். சண்முகசுந்தரம்
- அறுவடை- ஆர். சண்முகசுந்தரம்
- சட்டி சுட்டது- ஆர். சண்முகசுந்தரம்
- மாயத்தாகம்- ஆர். சண்முகசுந்தரம்
- அழியாக்கோலம்- ஆர். சண்முகசுந்தரம்
- காணாசுனை- ஆர். சண்முகசுந்தரம்
- அதுவா இதுவா- ஆர். சண்முகசுந்தரம்
- ஆசையும் நேசமும்- ஆர். சண்முகசுந்தரம்
- பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியம்
- ஒருநாள்க - க.நா.சுப்ரமணியம்
- அசுரகணம் - க.நா.சுப்ரமணியம்
- வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சுப்ரமணியம்
- சர்மாவின் உயில் - க.நா.சுப்ரமணியம்
- வேரோட்டம்- கு.ப.ராஜகோபாலன்
- அமிர்தம் - தி.ஜானகிராமன்
- மோகமுள் - தி.ஜானகிராமன்
- அன்பே ஆரமுதே - தி.ஜானகிராமன்
- அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
- உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்
- செம்பருத்தி - தி.ஜானகிராமன்
- மலர்மஞ்சம் - தி.ஜானகிராமன்
- மரப்பசு - தி.ஜானகிராமன்
- நளபாகம் - தி.ஜானகிராமன்
- மண்ணில் தெரியுது வானம்- ந.சிதம்பரசுப்ரமணியன்
- பெண்குரல் - ராஜம் கிருஷ்ணன்
- அன்புக்கடல் - ராஜம் கிருஷ்ணன்
- மாயச்சுழல் - ராஜம் கிருஷ்ணன்
- பானுவின் காதலன் - ராஜம் கிருஷ்ணன்
- மலையருவி - ராஜம் கிருஷ்ணன்
- குறிஞ்சித்தேன் - ராஜம் கிருஷ்ணன்
- அமுதமாகி வருக - ராஜம் கிருஷ்ணன்
- நிழற்கோலம் - ராஜம் கிருஷ்ணன்
- வளைக்கரம் - ராஜம் கிருஷ்ணன்
- விடியும் முன் - ராஜம் கிருஷ்ணன்
- புயலின் மையம் - ராஜம் கிருஷ்ணன்
- வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
- ரோஜா இதழ்கள் - ராஜம் கிருஷ்ணன்
- முள்ளும் மலர்ந்தது - ராஜம் கிருஷ்ணன்
- பாதையில் படிந்த அடிகள் - ராஜம் கிருஷ்ணன்
- புகைநடுவில் -கிருத்திகா
- சத்யமேவ -கிருத்திகா
- வாசவேஸ்வரம் -கிருத்திகா
- புதிய கோணங்கி -கிருத்திகா
- தர்மக்ஷேத்ரே -கிருத்திகா
- பொன்கூண்டு -கிருத்திகா
- நேற்றிருந்தோம் -கிருத்திகா
- பஞ்சும் பசியும் -தொ.மு.சி.ரகுநாதன்
- பிரேமஹாரம் - பி.எஸ்.ராமையா
- நந்தா விளக்கு - பி.எஸ்.ராமையா
- செந்தாமரை - மு.வரதராசனார்
- கள்ளோ காவியமோ- மு.வரதராசனார்
- பாவை - மு.வரதராசனார்
- அந்த நாள் - மு.வரதராசனார்
- மலர்விழி - மு.வரதராசனார்
- அல்லி - மு.வரதராசனார்
- பெற்ற மனம் - மு.வரதராசனார்
- கரித்துண்டு - மு.வரதராசனார்
- கயமை - மு.வரதராசனார்
- நெஞ்சில் ஒரு முள் - மு.வரதராசனார்
- அகல் விளக்கு - மு.வரதராசனார்
- மண்குடிசை - மு.வரதராசனார்
- வாடாமலர் - மு.வரதராசனார்
- வாழ்க்கை அழைக்கிறது - ஜெயகாந்தன்
- யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன்
- உன்னைப்போல் ஒருவன் - ஜெயகாந்தன்
- பாரீஸுக்குப் போ - ஜெயகாந்தன்
- சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
- ஒரு மனித ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
- ஜய ஜய சங்கர - ஜெயகாந்தன்
- ஹர ஹர சங்கர - ஜெயகாந்தன்
- காற்று வெளியினிலே - ஜெயகாந்தன்
- கல்லும் மண்ணும் - க.ரத்னம்
- வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
- ஜீவனாம்சம் -சி.சு.செல்லப்பா
- சுதந்திரதாகம் சி.சு.செல்லப்பா
- புத்ர - லா.ச. ராமாமிர்தம்
- அபிதா லா.ச. ராமாமிர்தம்
- புத்தம்வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
- மாநீ - ஹெப்சிபா ஜேசுதாசன்
- டாக்டர் செல்லப்பா -ஹெப்சிபா ஜேசுதாசன்
- இருபது வருஷங்கள் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
- அரும்பு - எம்.வி. வெங்கட்ராம்
- வேள்வித்தீஎம்.வி. வெங்கட்ராம்
- அணையாச்சுடர்எம்.வி. வெங்கட்ராம்
- நித்ய கன்னிஎம்.வி. வெங்கட்ராம்
- காதுகள்எம்.வி. வெங்கட்ராம்
- ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
- ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி
- தலைமுறைகள் - நீல பத்மநாபன்
- பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
- உறவுகள் - நீல பத்மநாபன்
- மின் உலகம் - நீல பத்மநாபன்
- மலரும் சருகும் - டி.செல்வராஜ்
- தோல் - டி.செல்வராஜ்
- கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்
- போராட்டங்கள் ர.சு.நல்லபெருமாள்
- எண்ணங்கள் மாறலாம் ர.சு.நல்லபெருமாள்
- காலவெள்ளம் ர.சு.நல்லபெருமாள்
- தந்திரபூமி - இந்திரா பார்த்தசாரதி
- சுதந்திரபூமி- இந்திரா பார்த்தசாரதி
- குருதிப்புனல்- இந்திரா பார்த்தசாரதி
- கிருஷ்ணா கிருஷ்ணா- இந்திரா பார்த்தசாரதி
- சாயாவனம் - சா.கந்தசாமி
- அவன் ஆனது -சா.கந்தசாமி
- சூரிய வம்சம் சா.கந்தசாமி
- கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
- பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்திரன்
- ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்
- மானசரோவர் - அசோகமித்திரன்
- இன்று - அசோகமித்திரன்
- வேரும் விழுதும் - க.சுப்ரமணியம்
- தாகம் - கு.சின்னப்ப பாரதி
- கீறல்கள் - ஐசக் அருமைராசன்
- வலியவீடு - ஐசக் அருமைராசன்
- நினைவுப்பாதை - நகுலன்
- நிழல்கள் - நகுலன்
- நாய்கள் - நகுலன்
- வாக்குமூலம் - நகுலன்
- கரிசல் -பொன்னீலன்
- புதிய தரிசனங்கள் - பொன்னீலன்
- குடிசை - து.ராமமூர்த்தி
- ராஜி - எஸ். வையாபுரிப் பிள்ளை
- ரங்கோன் ராதா - சி.என். அண்ணாத்துரை
- கபோதிபுரக் காதல் - சி.என். அண்ணாத்துரை
- பார்வதி பி.ஏ - சி.என். அண்ணாத்துரை
- கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
- கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
- அந்தமான் நாயக்கர் - கி. ராஜநாராயணன்
- புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
- கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:41 IST