under review

சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு

From Tamil Wiki
சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு
சுதேசமித்திரன் வார இதழ் - 1941

சுதேசமித்திரன், மார்ச் 1882 முதல் வெளிவந்த வார இதழ். 1899-ல், நாளிதழானது என்றாலும் வாரப் பதிப்பும் தொடர்ந்து வெளிவந்தது. ஜி. சுப்பிரமணிய ஐயர் இதன் ஆசிரியர். சிறுகதை, நாவல் தொடர், கட்டுரை, பாடல்கள், துணுக்குகள், உலகச் செய்திகள், சுதேச வர்த்தமானங்கள், இசை விமர்சனங்கள், நூல் மதிப்புரை எனப் பலவற்றிற்கு இடமளித்தது. இப்பகுதிகளின் சிலவற்றைத் தொகுத்து 'சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்றவற்றிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட சிலவற்றை, கலைஞன் பதிப்பகம், 'சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. வல்லிக்கண்ணன், ப. முத்துகுமாரசாமி இருவரும் இணைந்து இதனைத் தொகுத்துள்ளனர். இதன் முதல் பதிப்பு 2004-ல் வெளியானது. 1930-களின் படைப்புகள் தொடங்கி 1964 வரையிலான படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

முதல் பாகம்
கவிதைகள்
மன்னிப்பாய் பா. வளர்மதி
புதுமைப் பெண் கூறுகிறாள்... விஜய பாரதி
நிலைத்திருந்தென்? செந்தாமரை
பேரின்பம் தூரமில்லை சாலிவாகனன்
இதய தாகம் மு. உலகநாதன்
இரண்டிலொன்று ச. து. சுப்ரஹ்மண்ய யோகி
பாரதி உலக மகாகவி! பாரதிமோகன்
கனாக் கண்டேன் தோழா இன்பவண்ணன்
பொங்கல் வளை தமிழ் ஒளி
பகுத்தறிவு கடுக்கை கவி அ. ஆ. சாமி
வாழிய தருமம் பெ. தூரன்
கோடி இன்பம் குமாரி சந்திரா
காண்பது எப்போது? சாலை இளந்திரையன்
எங்கும் நிறைந்த பராசக்தி மணி
கரும்பினிக்கும் பொங்கல்! என். எஸ். சிதம்பரம்
பொங்கல் வாழி கோவி. மணிசேகரன்
உயிர்த்தவம்! தமிழழகன்
சிரிப்பின்பம் கலா பாரதி
மண்ணின் மனம் திருவள்ளூர் தாயு
கார்த்திகை ஜாலம் தென்றல்
எழுந்தருளீரோ? இன்பவண்ணன்
புத்தாண்டு வாழ்த்து பாலபாரதி ச.து.சு. யோகி
கவிதையாம் கவிதை! சிட்டி
கட்டுரைகள்
ஸான்தோம் யுத்தம் ஸ்ரீமான் என். கே. அய்யர்
லோடிகான் (ஓர் பட்டாணிய வீரன்) ஸ்ரீமான் என். கே. அய்யர்
தென்னிந்தியப் பிரமுகர்கள் ஸ்ரீமான் கஸ்தூரிரங்க அய்யங்கார்
தென்னிந்தியப் பிரமுகர்கள் களமூர் வீரவல்லி ரங்கநாத சாஸ்திரி
தென்னிந்தியப் பிரமுகர்கள் ஸர் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், கே.ஸி.ஐ.இ.
சுதேசமித்திரன் சரித்திரம் ஸ்ரீமான் டி. எஸ். விஸ்வநாத அய்யர்
குதிரைக் கொம்பு (ஒரு விநோதக் கதை) ஸ்ரீமான் ஸி. சுப்ரமண்ய பாரதி
நாடகமேடை நினைவுகள் ராவ்பகதூர் சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.
பரிவட்டத் தியானம் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர்
இலங்கையில் இந்தியர்கள் ஸ்ரீமான் வ.ராமசாமி அய்யங்கார்
என் மக்கள்! தாய் நாட்டுக்கர்ப்பணம் ஸ்ரீமான் க. சண்முகசுந்தர நாயனார்
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீமான் ஆர். ராமானுஜாசாரி, எம்.ஏ.
எனக்குக் கிடைத்த மோதிரம் செய்திக் கட்டுரை ஆசிரியர் குழு
புத்திர வாஞ்சை செய்திக் கட்டுரை ஆசிரியர் குழு
முஸோலினியின் கதையும் கட்டுக் கதையும் ஸ்ரீமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
அன்றாட சுதந்திரம் சுகி
தீபாவளித் தொல்லை! சிட்டி
வேதகாலத்தில் காதல் வாழ்க்கை சௌரி
கம்பனின் இராமன் சர்வ சமய சமரச மூர்த்தி ஜி.எதிராஜுலு நாயுடு
பாரதியும் பத்திரிகைக் கலையும் ரா.நா.
சுதந்திர வித்து மகரம்
பாதார விந்தத்தில் சூட்டினான்! க. வெ. பா.
காதல் பிறந்தது! ப.ந. தியாகராஜன்
இன்றைய தமிழ்க் கவிதை திருலோக சீத்தாராம்
மதுரங்கிளியாள் அருள் செல்வநாயகம்
பாரதி நினைவுகள் ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி
படித்திருக்கிறீர்களா? க.நா. சுப்ரமண்யம்
அழுங்கள். நன்றாக அழுங்கள்! டி.கே. கோவிந்தன்
நாகரீகத் தொண்டு டாக்டர் மு. வரதராசனார்
பிறந்த விதமும் வளர்ந்த கதையும் என். பி. ஹரிஹரன்
கவிஞர் திருநாள் எட்டயபுரம் தி. சுவாமிநாதன்
சங்க காலக் காதல் பொ. திருகூடசுந்தரம்
கும்பகருண தத்துவம் க. சோமசுந்தரம்
தமிழர் வாழ்வு மா.ரா. இளங்கோவன்
பகல் தூக்கம் கி. கஸ்தூரிரங்கன்
டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் சக்திதாசன் சுப்பிரமணியன்
தமிழில் கொற்றவை வித்துவான் சொ. சிங்காரவேலன்
கால் நூற்றாண்டுக்கு முன்... எஸ். சாரங்கரத்தினம்
வாழ்க வஞ்சினம்! சோ. பாகீரதி
நாலும் பெற்றான் பாரதி சுகி சுப்பிரமணியம்
பத்தினிக் கடவுள் டாக்டர் அ. சிதம்பரநாதன் எம்.ஏ., எம்.எல்.சி.,
பழமையின் மெருகு ஆ. ரா. இந்திரா
சொல் சொல்லும் கதை பி. ஸ்ரீ.
கார்க் கதை எம். ஜி. ராமச்சந்திரன்
சிறுகதைகள்
கிளியஞ்சோலை நாணல்
சங்கரய்யர் பரிசுபெற்ற இயக்கம் பி.ஆர்.ஆர். ஐயங்கார்
சம்பளம் உயர்த்திக்கொள்ளும் வழி எஸ்.ஆர்.வெங்கட்ராமன்
நான் பிரயாணம்போன வைபவம் ஸ்ரீமான் மு. சந்தானம்
அம்புஜம் யாருக்கு? ஸ்ரீமான்என்.ஸி.ஜி.ஸ்ரீநிவாஸவரதாச்சாரியார்
சுகப்பிரும்மத்தின் சிஷ்யர்கள் ஏ.எஸ்.பஞ்சாபகேசய்யர், ஐ.சி.எஸ்.
ஓட்டல் விருந்து ஒ.பி
எம். சுண்டர் வ.ரா.
கிடைத்தது மாற்று! விந்தியா
விளங்காத வாழ்வு டாக்டர் மு.வரதராசனார்
அவதாரம் ப.கணேசன்
மாறாத காதல் ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி
குற்றவாளி கே.வி.கே
சோதிடம் பலித்தது லால்குடி கிருஷ்ணமூர்த்தி
லக்ஷ்மி ரோட் எல்.வி.எஸ்.மணியன்
பாசம் தில்லைவாசி
பிறந்தகத்துச்சீர் கமலபதி
இரு துருவங்கள்! கோவி.சுப்ரமணியம்
பெற்றால் தான் பிள்ளையா? எல்.ஜி.எஸ்.
கனவும் நனவும் ப. ராதாகிருஷ்ணன்
தாயில்லாக் குழந்தை ஹரி சரண்
பிரமை வை.சுப்ரமண்யம்
மறுவாழ்வு எஸ்.டி.ஸ்ரீநிவாசன்
விரோதம் கஜமுகன்
சோதனையின் விளைவு கமலா சேஷாத்ரி
முதற் பரிசு சொக்கநாதன்
பிச்சையின் பிறப்பிடம் ஸ்ரீமதி பத்மா நாராயணன்
உம் என்றாள்! என்.ஆர். வரதராசன்
கல்யாணமும் கடிகாரமும் ஜெயராம்
அவனும் அவளும் நெடுமாறன்
பனியரசன் பத்தினி வித்வான் வி.துரைசாமி
ரக்ஷா பந்தன் சுலோசனா
யார் அவர்? கோமல் சுவாமிநாதன்
இருந்தும் இறந்தவள் முருகதாசன்
கஞ்சாமி எஸ். வைத்தியநாதன்
அரும்பும் மலரும் கு.வேங்கடரமணி
அவன் செய்தது சரியா? ஸ்ரீரங்கம் நரசிம்மன்
ரயிலில் நடந்தது தியாகி
திருட்டு முழி! ஜியாவுடீன்
வழியிலே வந்தவள் பெயர் குறிப்பிடப்படவில்லை
சர்மாவின் சந்ததி ந. ஸ்ரீ.
பிணைப்பு எஸ்.டி.எஸ்
கையெழுத்து வல்லிக்கண்ணன்
மீண்ட அழகு ஏ.டி.வி.
பசி தீர்த்த பாவை கி. ரா. கோபாலன்
பள்ளம் டி. எஸ். கோதண்டராமன்
பேதமை நா.பார்த்தசாரதி
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா லலிதா பாரதி
ஓய்வு நாள கு. கோதண்டராமன்
நிழல் ராஜம் கிருஷ்ணன்
ஒருநாள் திருடர்கள் எம். வி. வெங்கட்ராம்
நேசமும் தாரமும் எஸ். பி. ஹர்ஷன்
சரசுவின் தம்பி பராங்குசம்
தோல்வி சௌமி
தியாகியின் சிலை பூவண்ணன்
நல்ல காலம் பி. எஸ். சண்முக சுந்தரம்
பிரதாப முதலியார் கரிச்சான் குஞ்சு
ஜட்காக்காரன் மகன் ஆர். பி. மல்லாரி
அவன் மறதி தூன்
இரண்டாம் பாகம்
சிறுகதைகள்
வேலை கிடைத்தது! தம்பி ஸ்ரீநிவாசன்
கதையும் கன்னியும் சரோஜா ராமமூர்த்தி
அழகு மயக்கம் சி. சு .செல்லப்பா
எல்லாம் உனக்காக! டி. எம். வாசுதேவன்
பிராயச்சித்தம் ராஜலட்சுமி சுந்தரம்
சாவித்திரி சதி கே.ரகுபதி
செய்யாத குற்றம் வி. எஸ். சரவணபவன்
காதலித்தவள் பில்லூர் சுந்தரராமன்
கௌரவம் சௌந்திரம் ராஜகோபால்
மன்னிப்பு கே. ஆர். மீனாட்சி
வீரமரணம் கேயார்
காதல் பரீட்சை லலிதா ஜகந்நாதன்
பண்பு அளித்த தண்டனை ஜமீலா
நினைவு நிழல் பீஷ்மன்
மறுமலர்ச்சி எல்லார்வி
செல்வாக்கு முரளி
வாழ்வுமலர்ந்த வேளையிலே ஏ.டி. ரங்கமணி
வசந்தி, என் அன்பே! பகவன்
இரட்டையர் அருள் செல்வநாயகம்
அருள் புரிந்தவள் ஜி.கே. பொன்னம்மாள்
வறண்ட செழுமை மஹி
சலனம் வேம்பன்
பரிசப் பணம் எஸ்.டி. பட்டம்மாள்
சாகாதே சரளா! தி. அண்ணாமலை
இறுதிப்பாட்டு ஆர். சூடாமணி
அவன் உள்ளம் வேதா ஸ்ரீநிவாசன்
டாக்டர் யமுனா தேவி எம்.பி.பி.எஸ் பத்மாஸனி தேசிகன்
கடவுளின் கருணை ஆர். நடராஜன்
தியாகத்தின் ஒளி விளக்கு சுதர்சனம்
ஆகாயத்தில் அத்புதம் ஸ்ரீ. ய. மஹாலிங்கசாஸ்திரி
கண் திறந்தது! வெ. கந்தசாமி
சிற்பி தந்த செங்கரும்பு கு. சீனிவாசன்
மன மாற்றம் நீலா ராமமூர்த்தி
துணைப் பறவை எஸ். விஜயராகவன்
பிரிவுத்துயர் எஸ் லட்சுமி சுப்பிரமணியம்
சின்ன மருதின் செல்வன் எம். எஸ். எஸ்.
கனவு பலிக்குமா? ஆர். வைத்தியநாதசுவாமி
கல் விளைத்த காதல் யூவார். கணேசன்
தாயும் மகனும் எஸ். ரங்கநாயகி
பதின்மூன்றாம் நம்பர் பஸ் குயிலி
பொம்மை ரயில் க. பஞ்சாபகேசன்
வேதாளம் ந. பிச்சமூர்த்தி
சர்ப்பதோஷம் மாயூரம் ராஜாமணி
கண் திறந்தது ஸ்ரீவத்சன்
மனிதகுணமும் மிருக குணமும் ஜயலட்சுமி
பிரமைக்கு ஒரு மருந்து வடுவூர் நாராயணன்
அப்பொழுதே அலர்ந்த செந்தாமரை என்.ஜி. விசுவநாதன்
மலரும் மங்கையும் எம்.பி. சுப்பிரமணியம்
அருணாவின் காதலன் எஸ். பவானி
ஒரே ஒரு விஷயம்! வி.எஸ். சுதர்சனம்
குரல் காட்டியது தி.நா. சுப்பிரமணியன்
அழைப்பிதழ் திருவேணி மாதவன்
ஆராய்ச்சியே இது மெய்யடா செந்தூர் பாண்டியன்
குலத்தின் விளக்கு ரா.கி. ரங்கராஜன்
ஏமாற்றம் என்.எஸ். சத்தியமூர்த்தி
வருந்தவில்லை வாழ்த்தினேன் தேவாரம். மா. இராசாராம்
இப்படியும் ஒருவர் பஞ்சாட்சரம்
மறதியும் மறலியும் ஸ்ரீப்ரியா
அவள் யாரோ? நான் யாரோ? திருமூலர்
பாடாத குயில் தாமரைக்கண்ணன்
நோயாளி புதுமைச் சித்தன்
மன்னிப்பீர்களா என்னை! குமாரதேவன்
பரிசு கிடைத்தது நீடாமங்கலம் வேதாந்தம்
போற்றி வாழ்வேன் மணிமொழி
பலி சம்பந்தம்
தந்தி பிலஹரி
தீர்க்க ரேகைகள் நரசய்யா
மனக்கதவு சித்ரா
மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்
குமரி ரோஷன் கனத்தோல் பிரான்ஸ் (மொழி பெயர்ப்பு: பி.கோ.)
எங்கெங்கோ சென்றலைந்தான்! (மொழி பெயர்ப்பு: சாந்தா ரங்காச்சாரி)
அவள் செய்த ஜாலம் தெலுங்கு மூலம் : ஸ்ரீ தென்னேட்டி ஸூரி (தமிழில்: சீதா தேவி)
களவு மளையாளக் கதை வி.கே.என். (தமிழில்: செளரி)
சிரிப்பிலே நெருப்பு அசுவத்தாமா
வெற்றி யாருக்கு? அச்வத்தாமா
மலரின் மணம் அச்வத்தாமா
ஈனோக் ஆர்டன் அசுவத்தாமா
நிகலதா பிரெஞ்சு நாடோடிக் கதை
ஆதரவு உடியா அமிதாபட்ட நாயகா (தமிழில்: சௌரி)
மனைவிளக்கு அசுவத்தாமா
படகும் பாவையும் அசுவத்தாமா
லதீபா அசுவத்தாமா
ஜடாயு வங்காளிக் கதை தாராசங்கர் வந்த்யோபாத்யாய (தமிழில்: சௌரி)
வில்லியம் ஆர்வி ரா. பாலகிருஷ்ணன்
சிட்டுக்குருவி உருது மூலம்: குவாஜா அகமது அப்பாஸ் (தமிழில்:ஆர். சண்முகசுந்தரம்)
நாடகம்
மானனிகை பி.ஆர். சுந்தரராஜன்
எல்லாம் நன்மைக்கே! கோமதி ஸ்வாமிநாதன்
கவலைக்கு மருந்து ரா. ஆறுமுகம்

உசாத்துணை

  • சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு, பாகம்-1 மற்றும் 2, வல்லிக்கண்ணன், ப. முத்துக்குமாரசாமி, கலைஞன் பதிப்பக வெளியீடு


✅Finalised Page