தங்கம்மாள் பாரதி
தங்கம்மாள் பாரதி (பிறப்பு: நவம்பர் 10, 1904) மகாகவி பாரதியின் மூத்த மகள். பாரதியின் நினைவுகளை ஆவணப்படுத்தியுள்ளார். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
மகாகவி பாரதியின் மூத்த மகள். இவர் நவம்பர் 10, 1904-ல் பாரதி - செல்லம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மகாகவியின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை இவர் ஆவணப்படுத்தியிருக்கிறார். 'பாரதி' பற்றி சுதேசமித்திரனில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். "பாரதி புதுவை நிகழ்ச்சிகள்" என்ற தலைப்பில் தொடர் ஒன்று எழுதினார். இது பின்னர் தொகுப்பட்டு, 'பாரதியும் கவிதையும்' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. 'வேள்வி' என்ற தலைப்பில் சிறு நாடகத் தொடர் ஒன்றையும் எழுதினார். மிகச்சில சிறுகதைகளையும் எழுதினார். 'கொசவாப் புடவையின் குமுறல்' எனும் சிறுகதை சுதேசமித்ரன் இதழில் 1946-ல் வந்தது. 'அமரன் கதை', 'எந்தையும் தாயும்', 'பிள்ளைப் பிராயத்திலே' போன்றவை இவரது நூல்களில் சில. இவருடைய படைப்புகள் தொகுக்கப்பட்டு, 'தங்கம்மாள் பாரதி படைப்புகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன.
நூல்கள்
கட்டுரைகள்
- கொசவாப் புடவையின் குமுறல் (சிறுகதை)
- பாரதி புதுவை நிகழ்ச்சிகள் (கட்டுரை)
- வேள்வி (நாடகத் தொடர்)
- அமரன் கதை
- எந்தையும் தாயும்
- பிள்ளைப் பிராயத்திலே
- தங்கம்மாள் பாரதி படைப்புகள் (தொகுப்பு)
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- பாரதியார் அரிய புகைப்படங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Apr-2023, 16:18:35 IST