பாரதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பாரதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சி.சுப்ரமணிய பாரதியார்: சி. சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர்
- அ. சுப்பிரமணிய பாரதியார்: அ. சுப்பிரமணிய பாரதியார் (வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார்) (1880-1955) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்
- ஐ. மாயாண்டி பாரதி: ஐ. மாயாண்டி பாரதி (ஐ. மா. பா) (நவம்பர் 7, 1917 - பிப்ரவரி 24, 2015) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர்
- கு. சின்னப்ப பாரதி: கு. சின்னப்ப பாரதி (சின்னப்பன்; கு. சி. பா. ) (மே 2, 1935-ஜூன் 13, 2022) கவிஞர்
- கோபாலகிருஷ்ண பாரதி: கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) தமிழிசையின் முன்னோடிகளில் ஒருவர். இசைப்பாடலாசிரியர், இசைநாடக ஆசிரியர்
- சிதம்பர பாரதியார்: சிதம்பர பாரதியார் (பொ. யு. 1810-1896) (மழவை சிதம்பர பாரதி) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர்
- சுத்தானந்த பாரதி: சுத்தானந்த பாரதி (யோகி சுத்தானந்த பாரதியார்) (மே 11, 1897 - மார்ச் 7, 1990) தமிழறிஞர், துறவி, விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர்
- தங்கம்மாள் பாரதி: தங்கம்மாள் பாரதி (பிறப்பு: நவம்பர் 10, 1904) மகாகவி பாரதியின் மூத்த மகள். பாரதியின் நினைவுகளை ஆவணப்படுத்தியுள்ளார்
- நவநீதகிருஷ்ண பாரதியார்: நவநீதகிருஷ்ண பாரதியார் (மார்ச் 1, 1889 - 1954) (க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதமணி க
- நாவலர் சோமசுந்தர பாரதியார்: நாவலர் சோமசுந்தர பாரதியார் (ஜுலை 27, 1879 - டிசம்பர் 14, 1959) தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர்
- பக்தவத்சல பாரதி: பக்தவத்சல பாரதி (பிறப்பு: ஜூன் 7, 1957), மானுடவியல் ஆய்வாளர், தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்தவர்
- பழநிபாரதி:பழநிபாரதி (பழ. பாரதி; பழனிபாரதி) (பிறப்பு: ஜூலை 14) கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர். இதழாளர்.
- பாரதி திருமகன்: பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்
- பாரதி பாஸ்கர்: பாரதி பாஸ்கர் (ஜூன் 22, 1969) தமிழ் மேடைப்பேச்சாளர். இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் பேருரைகள் நிகழ்த்துகிறார்
- பாரதிபாலன்: பாரதிபாலன் (சு. பாலசுப்பிரமணியன்; பிறப்பு-ஏப்ரல் 3, 1965) தமிழக எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியியலாளர்
- மகாகவி பாரதியார் விருது: மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று
- மலேசிய பாரதி தமிழ் மன்றம்: மலேசிய பாரதி தமிழ் மன்றம் மலேசியாவில் இயங்கும் ஓர் அமைப்பு. பல்வேறு துறைகளில் தங்களின் பங்களிப்பைச் செய்தவர்களை அடையாளம் கண்டு சிறப்பிப்பதோடு அவர்களின் வரலாற்றையும் ஆவணப்படுத்தும் நோக்கில் இவ்வமைப்பு இயங்குகிறது
- ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்: ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), தமிழ்க் கவிதைகளை வெளியிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாத இதழ்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.