மகாகவி பாரதியார் விருது
From Tamil Wiki
- பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. மகாகவி பாரதி தொடர்பான சிறந்த படைப்புகள், ஆய்வுகள் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் விருது.
மகாகவி பாரதியார் விருது
மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், பாரதியாரின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும், பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைப்போருக்கும், பாரதி இயல் வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கும் 1997 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் கொண்டது.
மகாகவி பாரதியார் விருது பெற்றோர் (2022 வரை)
| எண் | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 1997 | கவிஞர் மதிவண்ணன் |
| 2 | 1998 | குமரி அனந்தன் |
| 3 | 1999 | வலம்புரி ஜான் |
| 4 | 2000 | கவிஞர் வாலி (கவிஞர்) |
| 5 | 2001 | பெ.சு. மணி |
| 6 | 2002 | கே.வி. கிருஷ்ணன் |
| 7 | 2003 | ரா.அ. பத்மநாபன் |
| 8 | 2004 | சீனி. விசுவநாதன் |
| 9 | 2006 | தமிழருவி மணியன் |
| 10 | 2007 | கவிஞர் சௌந்தரா கைலாசம் |
| 11 | 2008 | முனைவர் இரா.மணியன் |
| 12 | 2009 | டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் |
| 13 | 2010 | நா.மம்மது |
| 14 | 2011 | முனைவர் இரா. பிரேமா |
| 15 | 2012 | பாரதி காவலர் கே. இராமமூர்த்தி |
| 16 | 2013 | முனைவர் கு. ஞானசம்பந்தன் |
| 17 | 2014 | முனைவர் இளசை சுந்தரம் |
| 18 | 2015 | கவிஞர் பொன்னடியான் |
| 19 | 2016 | பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன் |
| 20 | 2017 | முனைவர் சு. பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன் |
| 21 | 2018 | மா.பாரதி சுகுமாரன் |
| 22 | 2019 | முனைவர் ப.சிவராஜி |
| 23 | 2020 | கவிஞர் பூவை செங்குட்டுவன் |
| 24 | 2021 | பாரதி கிருஷ்ணகுமார் |
| 25 | 2022 | டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி |
| 26 | 2023 | பழநிபாரதி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Aug-2023, 20:32:14 IST