பொன்னடியான்
பொன்னடியான் தமிழ்க் கவிஞர். பாரதிதாசனின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர். "முல்லைச்சரம்" என்னும் இதழின் ஆசிரியர். பாரதிதாசன் தொடங்கிய தமிழ்க் கவிஞர் மன்றத்தை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். திரைப்படப் பாடல்களும் இவர் எழுதியுள்ளார்.
இலக்கியவாழ்க்கை
பொன்னடியான் தன் 17 வயதில் குளித்தலையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாரதிதாசனைச் சந்தித்தார். 25-வது வயதில் கவிஞர் பாரதிதாசனின் உதவியாளராகச் சேர்ந்தார். குயில் இதழில் பணியாற்றினார். குயில் இதழில் அவர்கள் இருவர் மட்டுமே பணியாற்றினர். பாரதிதாசன் தமிழ்க் கவிஞர் மன்றம் என்னும் அமைப்பை தொடங்கியபோது அதில் செயலாளராக இருந்தார். 'பாண்டியன் பரிசு 'கதைப்பாடலை பாரதிதாசன் சினிமாவாக எடுக்க முயன்றபோது அதிலும் உதவியாளனாகப் பணியாற்றினார்.
கடற்கரைக் கவியரங்கம்
பொன்னடியான் 1971 முதல் கடற்கரைக் கவியரங்கம் என்னும் அமைப்பை நடத்திவருகிறார். கடற்கரையில் கவிஞர்கள் சந்தித்து கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு இது.
முல்லைச்சரம்
பொன்னடியான் முல்லைச்சரம் என்னும் இதழை 1966 முதல் தொடர்ந்து நடத்தி வருகிறார். 2016-ல் அவ்விதழின் பொன்விழா நடைபெற்றது.
நூல்கள்
- பனிமலர்
- பொன்னடியான் கவிதைகள்
- ஒரு கைதியின் பாடல்
- ஓர் இதயத்தின் ஏக்கம்
- பறக்கத் தெரியாத பட்டாம்பூச்சிகள்
- நினைவலைகளில் பாவேந்தர்
விருதுகள்
- புதுமைக் கவிஞர் விருது, 1989-ல் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல் வழங்கியது
- பாரதிதாசன் விருது, 1990-ல் தமிழக அரசு வழங்கியது
- கலைமாமணி விருது, 2003-ல் தமிழக அரசு வழங்கியது
- பாரதியார் விருது, 2015-ல் தமிழக அரசு வழங்கியது
உசாத்துணை
- Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - தீவிரத் தமிழ் என்பதில் உடன்பாடில்லை! - கவிஞர் பொன்னடியான்
- கடற்கரையில் ஒலிக்கும் தமிழ்க் கவிதை - Kungumam Tamil Weekly Magazine
- பொன்னடியான் பற்றி தினமணி
- பொன்னடியான் நூல்வெளியீடு
- கவிதை விக்கி - பொன்னடியான்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:31 IST