under review

முல்லைச்சரம்

From Tamil Wiki
முல்லைச்சரம்

முல்லைச்சரம் (1966) தமிழ்க் கவிதைச் சிற்றிதழ். கவிஞர் பொன்னடியான் இதை நடத்தினார். இது மரபுக் கவிதைகளை வெளியிட்டது.

வெளியீடு

பாரதிதாசன் கவிதை மரபைச் சேர்ந்த பொன்னடியான் மரபுக்கவிதைக்காக நடத்திய இதழ். 45 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து வெளிவந்தது.

பொன்விழா
முல்லைச்சரம் பொன்விழா

அக்டோபர் 14, 2016 அன்று சென்னையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் முல்லைச்சரம் இதழின் பொன்விழா நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கிய இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, குமரி ஆனந்தன் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.

இலக்கியப் பங்களிப்பு

முல்லைச்சரம் சி.சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் புதியமரபுக் கவிதை இயக்கத்தை முன்னெடுத்த இதழ். சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும். அரசியல் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் மரபுசார்ந்த எளிய யாப்புமுறைகளில் முன்வைக்கும் கவிதைகள் இதில் வெளிவந்தன. அமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் பாரதிதாசன் நடத்திய குயில் இதழின் நீட்சியாகவே அமைந்தது. பாரதிதாசனுக்குப் பின் தமிழ்க் கவிதை உலகம் (குருவிக்கரம்பை சண்முகம்) போன்ற குறிப்பிடத்தக்க தொடர்களும் வெளியாயின

உசாத்துணை


✅Finalised Page