தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆட்சி மொழிச் செயல்பாடுகளுக்காகவும், 1971-ல், தமிழ் வளர்ச்சித் துறை தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் துறை சார்ந்த தனது பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை முன்னெடுத்து வருகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள்
தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாய பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ்வளர்ச்சி இயக்ககம் மூலம் மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இலக்கிய வளர்ச்சி
தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில், பல்வேறு திட்டங்கள், தமிழ் வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கீழ்காணும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
- தமிழ் வளர்ச்சி இயக்ககம்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- உலகத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- தமிழ் இணைய மின்னூலகம்
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
- அறிவியல் தமிழ் மன்றம்
- தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டில் சில விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதாளர்கள், விருதுத் தொகையுடன் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசின் விருதுகள்
- தமிழ்த்தாய் விருது
- திருவள்ளுவர் விருது
- கபிலர் விருது
- கம்பர் விருது
- இளங்கோவடிகள் விருது
- காரைக்கால் அம்மையார் விருது
- ஔவையார் விருது
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
- வீரமாமுனிவர் விருது
- உமறுப் புலவர் விருது
- உ.வே.சா விருது
- மறைமலையடிகளார் விருது
- அயோத்திதாசப்பண்டிதர் விருது
- சிங்காரவேலர் விருது
- தேவநேயப் பாவாணர் விருது
- பேரறிஞர் அண்ணா விருது
- பெருந்தலைவர் காமராஜர் விருது
- சிங்காரவேலர் விருது
- மகாகவி பாரதியார் விருது
- பாவேந்தர் பாரதிதாசன் விருது
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
- கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
- ஜி.யு.போப் விருது
- சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது
- இலக்கிய மாமணி விருது
- தமிழ்ச்செம்மல் விருது
- மொழி பெயர்ப்பாளர் விருது
- அம்மா இலக்கிய விருது
- சொல்லின் செல்வர் விருது
- இலக்கிய விருது
- இலக்கண விருது
- மொழியியல் விருது
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது
- கல்பனா சாவ்லா விருது
தமிழ்ப்பணிகள்
சிறந்த நூல்களுக்குப் பரிசு, நூல்கள் வெளியிட நிதியுதவி, திருக்குறள் முற்றோதல் பரிசு, மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிப் பரிசுகள், இளம் எழுத்தாளர்களுக்குக் கவிதை, கட்டுரைப் பயிற்சியும் பேச்சாளர்களுக்குப் பேச்சுப் பயிற்சியும் அளிக்கும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதியுதவி எனப் பல்வேறு பணிகளை, தமிழ் வளர்ச்சித்துறை செயல்படுத்தி வருகிறது.
உசாத்துணை
- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இணையதளம்
- தமிழக அரசின் விருதுகள் இணையதளம்
- தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Apr-2023, 19:16:48 IST