under review

ஔவையார் விருது

From Tamil Wiki

ஔவையார் விருது, சாதனை மகளிர்களுக்காக, 2012 -ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று தமிழக அரசால் வழங்கப்படுகிறது

ஔவையார் விருது

சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று வழங்கப்படும் இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் தகுதியுரை கொண்டது.

ஔவையார் விருது பெற்றவர்கள் - (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2012 ஒய். ஜி. பார்த்தசாரதி
2 2013 டாக்டர் வி. சாந்தா
3 2014 டாக்டர் கே.மாதங்கி
4 2015 சாந்தி ரங்கநாதன்
5 2016 எம்.சாரதா மேனன்
6 2017 பத்மா வெங்கட்ராமன்
7 2018 சின்னப்பிள்ளை
8 2020 கண்ணகி
9 2021 சாந்தி துரைசாமி
10 2022 கிரிஜா குமார் பாபு
1211 2023 கமலம் சின்னசாமி

உசாத்துணை


✅Finalised Page