under review

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

From Tamil Wiki

மேனாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் தமிழக அரசால் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் துறைகள் மற்றும் மாணவர்களின் நலன்கள் போன்றவற்றுக்காகப் பாடுபட்டுச் சிறந்த சாதனை புரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. 2015 -ம் ஆண்டு சுதந்திர தின விழா முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை கொண்டது.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது பெற்றவர்கள் - (2022 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2015 ந‌. வளர்மதி (இஸ்ரோ திட்ட இயக்குனர்)
2 2016 சண்முகம் (மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை அறிவியலாளர்)
3 2017 எஸ். பி. தியாகராஜன் (அறிவியலாளர்-சென்னை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்)
4 2018 தக்‌ஷா குழுவினர் (ஆளில்லா விமானம் குறித்த ஆய்வுகளுக்காக)
5 2021 முனைவர் மு. இலட்சுமணன்
6 2022 முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, பூச்சியியல் ஆராய்ச்சியாளர்

உசாத்துணை


✅Finalised Page