under review

தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

From Tamil Wiki

அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம், ஆண்டுதோறும், சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை வழங்குகிறது. 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பொன்னாடை மற்றும் தகுதிச் சான்றிதழ் கொண்டது.

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றோர் பட்டியல்

வ.எண். ஆண்டு விருதாளர் பெயர்
1 2016 நாகலட்சுமி சண்முகம்
2 2016 அ. ஜாகிர் உசேன்
3 2016 அல்லா பிச்சை (எ) முகம்மது ஃபரிஸ்டா
4 2016 உமா பாலு
5 2016 முனைவர் கா. செல்லப்பன்
6 2016 செல்வி வி. சைதன்யா
7 2016 சி. முருகேசன்
8 2016 கு. பாலசுப்பிரமணியன்
9 2016 ச. ஆறுமுகம் பிள்ளை
10 2016 முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன்
11 2017 நெல்லை சு.முத்து
12 2017 தி.வ.தெய்வசிகாமணி (தெசிணி)
13 2017 ஆ.செல்வராஜ் (எ) குறிஞ்சிவேலன்
14 2017 முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
15 2017 மறவன்புலவு க.சச்சிதானந்தன்
16 2017 வசந்தா சியாமளம்
17 2017 முனைவர் இரா.கு. ஆல்துரை
18 2017 பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன்
19 2017 ஆண்டாள் பிரியதர்ஷிணி
20 2017 முனைவர் தர்லோசன் சிங் பேடி
21 2018 யூமா வாசுகி
22 2018 இலட்சுமண இராமசாமி
23 2018 அரிமா மு.சீனிவாசன்
24 2018 க.குப்புசாமி
25 2018 மருத்துவர் சே.அக்பர் கவுசர்
26 2018 முனைவர் இராஜலட்சுமி சீனிவாசன்
27 2018 செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாஸ்
28 2018 முனைவர் பழனி அரங்கசாமி
29 2018 எஸ். சங்கரநாராயணன்
30 2018 செல்வி ச.நிலா
31 2019 சா.முகம்மது யூசுப் (அமரர்)
32 2019 க.ஜ.மஸ்தான் அலீ
33 2019 பேராசிரியர் சிவ.முருகேசன்
34 2019 முனைவர் ந. கடிகாசலம்
35 2019 மரபின் மைந்தன் முத்தையா
36 2019 வத்சலா
37 2019 மருத்துவர் முருகுதுரை
38 2019 மாலன் (எ) வே.நாராயணன்
39 2019 கிருஷாங்கினி (எ) பிருந்தா நாகராசன்
40 2019 அ.மதிவாணன்
41 2020 சோ.சேஷாச்சலம்
42 2020 முனைவர் இராம.குருநாதன்
43 2020 ப.குணசேகர்
44 2020 முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
45 2020 ஜோதிர்லதா கிரிஜா
46 2020 ஜெ.ராம்கி (எ) ராமகிருஷ்ணன்
47 2020 சுவாமி விமூர்த்தானந்தர்
48 2020 மீரா ரவிசங்கர்
49 2020 திலகவதி
50 2020 கிருஷ்ண பிரசாத்
51 2021 செ. சுகுமாரன்
52 2021 செ. இராஜேஸ்வரி
53 2021 முனைவர் மு. வளர்மதி
54 2021 முனைவர் இராக. விவேகானந்த கோபால்
55 2021 முனைவர் அ.சு. இளங்கோவன்
56 2021 முனைவர் வீ. சந்திரன்
57 2021 முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ்
58 2021 பேராசிரியர் தமிழ்ச்செல்வி
59 2021 ந. தாஸ் (அமரர்)
60 2021 முனைவர் மா. சம்பத்குமார்

உசாத்துணை


✅Finalised Page