under review

பெருந்தலைவர் காமராஜர் விருது

From Tamil Wiki

பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்), தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.

பெருந்தலைவர் காமராஜர் விருது

மேனாள் முதல்வராக இருந்த கு. காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும், தமிழகத்தில் சிறந்த கல்விச் சேவைக்காகவும் உழைப்பவர்களுக்கு, 2006 முதல் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர் (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2006 ஏ.எஸ். பொன்னம்மாள்
2 2007 ஏ.ஆர். மாரிமுத்து
3 2008 கோபண்ணா
4 2009 ஆர். சொக்கர்
5 2010 ஜெயந்தி நடராஜன்
6 2011 கே. ராமமூர்த்தி
7 2012 சிங்கார வடிவேல்
8 2013 கி. அய்யாறு வாண்டையார்
9 2014 கருமுத்து தி. கண்ணன்
10 2015 மருத்துவர் இரா. வேங்கடசாமி
11 2016 தி. நீலகண்டன்
12 2017 முனைவர் தா.ரா. தினகரன்
13 2018 பழ. நெடுமாறன்
14 2019 முனைவர் மா.சு.மதிவாணன்
15 2020 முனைவர் ச.தேவராஜ்
16 2021 குமரி அனந்தன்
17 2022 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
18 2023 உ. பலராமன்

உசாத்துணை


✅Finalised Page