under review

வீரமாமுனிவர் விருது

From Tamil Wiki

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத. பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று வீரமாமுனிவர் விருது.

வீரமாமுனிவர் விருது

வீரமாமுனிவர் நெறியில் அவரது படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித் துறையில் சிறந்து விளங்கியும், தமிழ் அகராதிகளை வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த ஒருவருக்கு, ‘வீரமாமுனிவர்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருது, 2021 -ஆம் ஆண்டு முதல், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால் வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் ஒரு லட்சத்துடன், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.

வீரமாமுனிவர் விருது பெற்றவர்கள்

2021

கிரிகோரி ஜேம்ஸ், ஹாங்காங்

உசாத்துணை


✅Finalised Page