சிதம்பர பாரதியார்
- பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
சிதம்பர பாரதியார் (பொ.யு. 1810-1896) (மழவை சிதம்பர பாரதி) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். சிவபெருமான் மீது இசைப்பாடல்கள் இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவகங்கை மாவட்டம், புவனேகவீரபாண்டியபுரம் எனும் மழவாபுரியில் சுப்பிரமணிய பாரதியாருக்கு 1893-ல் மகனாகப் பிறந்தார். வேறுபெயர் சின்னச்சாமி பாரதியார். அண்ணன் சுப்பராமர். தந்தையிடமும், பிற அறிஞர்களிடமும் இயல், இசை, நாடகம் கற்றார்.
இவர்மகன் ராமசாமி ஐயரும் புலவராக இருந்தார். பல்பொருட் சூளாமணி எனும் நிகண்டுவின் ஆசிரியர் ஈசுவர பாரதியார் சிதம்பர பாரதியாரின் மகன் எனப்படுகிறது.இறுதிக்காலங்களில் துறவறம் மேற்கொண்டு சிவதொண்டு செய்தார்.
தமிழிசை இயக்கம்
மழவை சிதம்பரபாரதியார் தமிழிசை இயக்கத்தில் பங்களிப்பாற்றியவர். கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதி, கவிகுஞ்சர பாரதி, இராமலிங்க வள்ளலார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நீலகண்ட சிவன் ஆகியோரின் வரிசையில் மழவை சிதம்பர பாரதியாரின் பெயரும் வைக்கப்படுகிறது.மழவை சிதம்பர பாரதி ருக்மிணி கல்யாணம், துருவ சரித்திரம், நாயன்மார் சரித்திரம் போன்ற கதைகளையும் பாடல் வடிவில் எழுதி இருக்கிறார். ஹரிகதை சொல்வதிலும் சிவ கதை சொல்வதிலும் ஈடுபட்டார். இவரது பாடல்களில் 'மா மயூர மீதிலேறி' பிரபலமானது.
பூமேல் வளரும் அன்னையே இன்றும் அடிக்கடிப் பாடப்படும் பாடல். ஆனந்தபைரவி ராகம்
பூ மேல் வளரும் அன்னையே!
ஒளி பொருந்தும் பொன்னே இரட்சிப்பாய் என்னையே
செங்கமலப் பூ மேல் வளரும் வளரும் அன்னையே...
காமேவும் மலரினில் தேமேவும் சுரைநகர்
காட்சியாய் வந்தருள் மீனாட்சி
மணம் பொருந்தும்
பூ மேல் வளரும் அன்னையே
மானே சொக்கேசர் பங்கில் தானே வளரும் கிருபை
வானே மாமுகன் மயிலின் முருகோனே தாயென்ன வளர்
மீனேர் விழியே உன்னை நானே மிக வணங்கினேனே சிதம்பரம் சொல்
தேனே பருகி நிதம் (பூ மேல் வளரும்)
வாணி புவி மகிழ் சர்வாணி மதுரமலர்
வேணி மங்கள வசன சுகபாணி நித்யகல்யாணி ஐந்தொழிலும்
த்ராணி பெரும் சுந்தர ராணி வேதாகம
புராணி அனுதினம்(பூ மேல் வளரும்)
தாயே த்ரிவித குணாமயே மலையரசன்
சேயே சந்தானம் எனக்கருள் செல்வியே அனைத்தும்
நீயே வஞ்சர் மனம் புகாயே தெரிந்திடாயே
நாயென் செய்பிழை பொறுப்பாயே அன்பர் இதயப்(பூ மேல் வளரும்)
இலக்கிய வாழ்க்கை
சிதம்பர பாரதியார் திரிபு, யமகம், சிலேடை பாடல்களை இயற்றினார். செல்வர்கள், பெரு நிலக்கிழார்கள் மீது செய்யுள்கள் பாடி நன்கொடை பெற்றார். இசைப்பாடல்கள் பல பாடினார். விருத்தப்பாக்கள் பலவும் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளைக் கொண்டு பாடல்கள் இயற்றினார்.
இலக்கிய இடம்
தமிழிசை இயக்கத்தின் இசைப்பாடலாசிரியர்களில் ஒருவராக சிதம்பர பாரதி கருதப்படுகிறார்.
நூல்கள்
- ஞானானந்த பேரின்பக் கீர்த்தனம்
- மதுரைக்கும்மி
- கோகரணக்கும்மி
- குன்றக்குடி குமரன் வண்ணம்
- பெரியபுராணக் கீர்த்தனை
- ருக்குமணி கல்யாணம்
- துருவ சரித்திரம்
- குசேல சரித்திரம்
- அம்பரீஷ மகாராச சரித்திரம்
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்
- https://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513444.htm
- http://mana-vasanai.blogspot.com/2015/01/18-1810-1896.html
- https://youtu.be/Khcph-NI_IU
- https://youtu.be/LgXd1JIV-Ro
- https://music.apple.com/us/artist/mazhavai-chidambara-bharathi/189268544
- https://www.jiosaavn.com/artist/mazhavai-chidambara-bharathi-songs/HvgOKC-06OQ_
- https://www.jiosaavn.com/artist/mazhavai-chidambara-bharathi/HvgOKC-06OQ_
- https://gaana.com/artist/mazhavai-chidambara-bharathi
- https://wynk.in/music/artist/mazhavai-chidambara-bharathi/mazhavai-chidambara-bharathi
- https://wynk.in/music/artist/mazhavai-chidambara-bharathi/wa_4yWQzHjcgg
- https://www.shazam.com/artist/mazhavai-chidambara-bharathi/189268544
- https://musicacademymadras.in/musicacademylibrary/library_catalog_details.php?id=664
- https://open.spotify.com/track/2wOJTSPHPredi4fox8a3rw?autoplay=true
- https://tidal.com/browse/artist/6750361
- https://play.anghami.com/artist/2600932
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:43 IST