under review

தம்பி சீனிவாசன்

From Tamil Wiki
சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
தம்பி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தம்பி (பெயர் பட்டியல்)
தம்பி சீனிவாசன்

தம்பி சீனிவாசன் (ஜூலை 15, 1930 - ) தமிழில் எழுதிய சிறார் எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயற்பாட்டாளர், இதழியலாளர். நாடகம், கதைகள், பாடல்கள் என பல சிறார் இலக்கியங்கள் எழுதினார். குழந்தை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பி சீனிவாசன்

தம்பி சீனிவாசன் தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தில் குடியாத்தம் என்ற ஊரில் ஜூலை 15, 1930-ல் பிறந்தார். உடன்பிறந்த அக்காவின் பாசம் தன் பெயருடன் இணைந்தே இருக்க வேண்டும் என்பதால் தன் பெயருக்கு முன்னொட்டாக "தம்பி" என்பதைச் சேர்த்தார்.

தம்வி சீனிவாசன் மணமானவர். மகள் ராஜி.

அமைப்புச் செயல்பாடுகள்

  • சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகச் சென்னையில் பணியாற்றினார். புத்தகத்துறை பதிப்பாளராக இருந்தார்.
  • குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராகவும் பின்னர் துணைத்தலைவராகவும் இருந்தார்.

இதழியல்

தம்பி சீனிவாசன் குழந்தை எழுத்தாளார் சங்க மலரில் பங்களிப்பாற்றினார். சுதேசமித்திரன் வார இதழில் ஓர் ஆண்டு குழந்தைகள் தினச் சிறப்பிதழ் தயாரித்தார். 'பாரதி' என்ற இதழை சிறிது காலம் தொடங்கி நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பி சீனிவாசன் அழ வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர். சிறார் இலக்கியங்கள் எழுதினார். சிறார் இலக்கியங்களை மொழிபெயர்த்தார். இவரின் 'சிவப்பு ரோஜாப்பூ' என்ற பாடல் தொகுதியை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். குழந்தை இலக்கியம் குறித்த யுனெஸ்கோ கருத்தரங்கில் பங்கேற்றார்.

விருதுகள்

  • 'தங்கக் குழந்தைகள்' என்ற சிறார் நாடகத்துக்காக மத்திய அரசின் விருது பெற்றார்.

நூல் பட்டியல்

சிறார் இலக்கியம்
  • தங்கக் குழந்தைகள் (நாடகம்)
  • சிவப்பு ரோஜாப்பூ (பாடல் தொகுப்பு)
  • பத்திரிக்கையின் கதை
  • யானையில் பறந்தவன்
  • எட்டுத்திக்குக் கதைகள்
  • பயத்தை வென்ற ராமன்
  • உங்கள் உணவும் நீங்களும்
  • எவரெஸ்ட் எனது உச்சி யாத்திரை
  • தேடிப்பார்
  • யார் கெட்டிக்காரர்?
  • பெண் படிப்பறிவு பெற்று விட்டால்
மொழிபெயர்ப்பு
  • குட்டி யானை பட்டு (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • யார் கெட்டிக்காரர் (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • ஜானுவும் நதியும் (நேஷனல் புக் டிரஸ்ட்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2024, 18:52:53 IST