Disambiguation

சீனிவாசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சீனிவாசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. சீனிவாசன்: அ. சீனிவாசன் (அய்யப்ப நாயுடு சீனிவாசன்; பாரதி சீனிவாசன்: ஆகஸ்ட் 6, 1925 - ஜுலை 24, 2006) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர்
  • அம்பிகா ஸ்ரீநிவாசன்: அம்பிகா ஸ்ரீநிவாசன் மலேசியாவின் குறிப்பிடத்தக்க வழக்கறிஞர். மனித உரிமை சார்ந்த வழக்குகளை இவர் ஏற்று நடத்தியுள்ளார்
  • அரங்க. சீனிவாசன்: அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: செப்டம்பர் 29,1920- ஜூலை 31,1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர்
  • ஆனந்த் ஸ்ரீனிவாசன்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் (பிறப்பு: பிப்ரவரி 1, 1965) தமிழில் எழுதிவரும் மொழிபெயர்ப்பாளர், பிழைதிருத்துநர்
  • இரட்டைமலை சீனிவாசன்: இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) அரசியல், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர், செயற்பாட்டாளர், இதழியலாளர்
  • என். ஸ்ரீநிவாஸன்: என். ஸ்ரீநிவாஸன் (பிறப்பு: ஜூலை 04, 1938) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய பல்வேறு நூல்களை எழுதினார்
  • கே. சீனிவாசலு: கே. சீனிவாசலு (அடையார் சீனிவாசலு) (ஜனவரி 6, 1923 - ஆகஸ்ட் 3, 1994) இந்தியாவின் தமிழ்நாட்டில் செயல்பட்ட நவீன ஓவியக் கலைஞர். மெட்ராஸ் நவீன காண்பியல் கலைச்சூழலில் தென்னிந்திய நாட்டுப்புறம், இந்திய மரபு சார்ந்த அழகியலை படைப்புக்களாக ஆக்கியவர்.
  • சதீஷ்குமார் சீனிவாசன்: சதீஷ்குமார் சீனிவாசன் (பிறப்பு:பிப்ரவரி 21, 1997) தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்
  • சி. சீநிவாசன்: சி. சீநிவாசன் (ஸி. ஸ்ரீநிவாஸன்) (20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர்
  • ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்: ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் (டிசம்பர் 12, 1911 - மார்ச் 3, 2011) (ஜெயலக்ஷ்மி ஶ்ரீனிவாசன்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்
  • டி.கே. சீனிவாசன்: டி. கே. சீனிவாசன் (தி. கோ. சீனிவாசன்; திருச்சிராப்பள்ளி கோதண்டபாணி சீனிவாசன்; தத்துவமேதை டி
  • தம்பி சீனிவாசன்: தம்பி சீனிவாசன் (ஜூலை 15, 1930 - ) தமிழில் எழுதிய சிறார் எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயற்பாட்டாளர், இதழியலாளர்
  • ம.பெ.ஸ்ரீனிவாசன்: ம. பெ. ஸ்ரீனிவாசன் (ம. பெ. சீனிவாசன், ம. பெ. சீ. பிறப்பு:ஆகஸ்ட் 16,1943) வைணவ அறிஞர்
  • மு. முத்து சீனிவாசன்: மு. முத்து சீனிவாசன் (சொல்லருவி முத்து சீனிவாசன்) (பிறப்பு: ஜனவரி 6, 1944) எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர்
  • முக்தா சீனிவாசன்: முக்தா சீனிவாசன் (வீ. சீனிவாசன்; வெங்கடாச்சாரி சீனிவாசன்; முக்தா வீ. சீனிவாசன்; அக்டோபர் 31, 1929-மே 29, 2018) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்; இயக்குநர்; எழுத்தாளர்; திரைக்கதை வசன ஆசிரியர்
  • ரா. சீனிவாசன்: ரா. சீனிவாசன் (ராமானுஜலு சீனிவாசன்: 1923-2001) தமிழ்ப் பேராசிரியர். ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
  • ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன்: ஸி. ஆர். ஸ்ரீநிவாஸன் (ஸி. ரகுநாத ஐயங்கார் ஸ்ரீநிவாஸன்) (நவம்பர் 28, 1889 - ஜனவரி 29, 1962) எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர்
  • ஸ்டாலின் சீனிவாசன்: ஸ்டாலின் சீனிவாசன் (கு. சீனிவாசன், மணிக்கொடி சீனிவாசன்) (மே 30, 1899 - ஜூன் 2, 1975) இதழியலாளர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பாரதியியல் அறிஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.