under review

காலச்சுவடு (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected year suffix text;)
 
Line 15: Line 15:
* சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்கள் வெளிவருகின்றன.
* சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்கள் வெளிவருகின்றன.
* ஆளுமைகள்: காந்தி, அம்பேத்கர், பெரியார், பாரதியார், [[உ.வே.சாமிநாதையர்]]. முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான பதிவுகளும் விவாதங்களும் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.  
* ஆளுமைகள்: காந்தி, அம்பேத்கர், பெரியார், பாரதியார், [[உ.வே.சாமிநாதையர்]]. முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான பதிவுகளும் விவாதங்களும் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.  
* நேர்காணல்கள்: காலச்சுவடு இதழில் வெளிவந்த நேர்காணல்கள் பல்வேறு துறை சேர்ந்த ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. [[கே.சச்சிதானந்தன்]], [[ராமச்சந்திர குஹா]], [[டி.ஆர். நாகராஜ்]] நயன்ஜோத் லஹரி, சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம். கிருஷ்ணா, [[அசோகமித்திரன்]], [[அம்பை]], [[எஸ். ராமகிருஷ்ணன்]] , [[நித்ய சைதன்ய யதி]] எனப் பல முக்கியமான ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களைக் காலச்சுவடு பதிவுசெய்துள்ளது.
* நேர்காணல்கள்: காலச்சுவடு இதழில் வெளிவந்த நேர்காணல்கள் பல்வேறு துறை சேர்ந்த ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. [[கே.சச்சிதானந்தன்]], [[ராமச்சந்திர குஹா]], [[டி.ஆர்.நாகராஜ்]] நயன்ஜோத் லஹரி, சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம். கிருஷ்ணா, [[அசோகமித்திரன்]], [[அம்பை]], [[எஸ். ராமகிருஷ்ணன்]] , [[நித்ய சைதன்ய யதி]] எனப் பல முக்கியமான ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களைக் காலச்சுவடு பதிவுசெய்துள்ளது.


* சிறப்புப் பகுதிகள்: மரண தண்டனை குறித்த சிறப்புப் பகுதி, தமிழ் வழிக் கல்வி, தமிழ்க் காதல், குஜராத் வன்முறை, மதச்சார்பின்மை, நதிநீர் இணைப்பு, பதிப்புச் சூழல் ஆகிய சிறப்புப் பகுதிகள் வழியாக விவாதத்திற்கான களத்தை காலச்சுவடு ஏற்படுத்தியது.
* சிறப்புப் பகுதிகள்: மரண தண்டனை குறித்த சிறப்புப் பகுதி, தமிழ் வழிக் கல்வி, தமிழ்க் காதல், குஜராத் வன்முறை, மதச்சார்பின்மை, நதிநீர் இணைப்பு, பதிப்புச் சூழல் ஆகிய சிறப்புப் பகுதிகள் வழியாக விவாதத்திற்கான களத்தை காலச்சுவடு ஏற்படுத்தியது.

Latest revision as of 12:34, 23 October 2026

காலச்சுவடு (இதழ்)

காலச்சுவடு (இதழ்) (1988) இலக்கியம், அரசியல், பண்பாடு சார்ந்த அச்சுஇதழ். எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆரம்பித்த இதழ். காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக வெளிவந்து தற்போது மாத இதழாக வெளிவருகிறது. இதன் பதிப்பாளர்-ஆசிரியர் கண்ணன் சுந்தரம்.

வெளியீடு

முதல் காலகட்டம்

எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஜனவரி 1988-ல் காலச்சுவடு என்ற காலாண்டு இதழை ஆரம்பித்தார். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைசார்ந்த எழுத்துகளுக்கான களமாக சுந்தர ராமசாமி காலச்சுவடை முன்னிறுத்தினார். எட்டு இதழ்கள் வெளிவந்தது. 1992-ல் வெளியிடப்பட்ட ஆண்டுமலர் இறுதியாக வெளியான பின்னர் இதழ் நிறுத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது காலகட்டம்

சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் சுந்தரம் 1994-ல் வேறு வடிவத்துடனும் உள்ளடக்கத்துடனும் மீண்டும் காலச்சுவடு காலாண்டு இதழைத் தொடங்கினார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோர் தொடக்ககால ஆசிரியர்குழுவில் இடம் பெற்றிருந்தனர். 2002ல் உயிர்மை இதழை தொடங்குவது மனுஷ்யபுத்திரன் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

வெவ்வேறு காலங்களில் அரவிந்தன், களந்தை பீர்முகம்மது, தேவிபாரதி , நா. சுகுமாரன் ஆகியோர் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் பங்களிப்பாற்றியுள்ளனர். எம்.சிவசுப்ரமணியம் காலச்சுவடுடன் இணைந்து பணியாற்றினார்.

2000-ல் காலச்சுவடு இதழ் இருமாத இதழாக வெளிவரத் தொடங்கியது. 2004 முதல் மாத இதழாகியது. படைப்பிலக்கியம் மொழி, சமூக வரலாறு, அரசியல், விவசாயம், சுற்றுச்சூழல், திரை, பண்பாடு ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக உள்ளது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணியம், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், இந்திய-தமிழ் தேசியம், மதவாதம், மதச்சார்பின்மை, கல்வி போன்ற பேசுபொருள்களில் தனிக்கவனம் கொண்டது.

உள்ளடக்கம்

  • சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்கள் வெளிவருகின்றன.
  • ஆளுமைகள்: காந்தி, அம்பேத்கர், பெரியார், பாரதியார், உ.வே.சாமிநாதையர். முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான பதிவுகளும் விவாதங்களும் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
  • நேர்காணல்கள்: காலச்சுவடு இதழில் வெளிவந்த நேர்காணல்கள் பல்வேறு துறை சேர்ந்த ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. கே.சச்சிதானந்தன், ராமச்சந்திர குஹா, டி.ஆர்.நாகராஜ் நயன்ஜோத் லஹரி, சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம். கிருஷ்ணா, அசோகமித்திரன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் , நித்ய சைதன்ய யதி எனப் பல முக்கியமான ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களைக் காலச்சுவடு பதிவுசெய்துள்ளது.
  • சிறப்புப் பகுதிகள்: மரண தண்டனை குறித்த சிறப்புப் பகுதி, தமிழ் வழிக் கல்வி, தமிழ்க் காதல், குஜராத் வன்முறை, மதச்சார்பின்மை, நதிநீர் இணைப்பு, பதிப்புச் சூழல் ஆகிய சிறப்புப் பகுதிகள் வழியாக விவாதத்திற்கான களத்தை காலச்சுவடு ஏற்படுத்தியது.

பங்களிப்பாளர்கள்

காலச்சுவடு 300-வது இதழ் (2024)

ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பிரேம் - ரமேஷ், ஷங்கர்ராமசுப்பிரமணியன் போன்ற படைப்பாளிகளின் முக்கியமான சில படைப்புக்கள் காலச்சுவடில் வெளிவந்து பரவலான கவனம் பெற்றன. பெருமாள் முருகன் காலச்சுவடு வழியாக கவனம் பெற்ற படைப்பாளி.

காலச்சுவடு இதழ் அ.கா. பெருமாள் , ஆ. இரா. வேங்கடாசலபதி தொ. பரமசிவன் ஆ. சிவசுப்பிரமணியன் பழ. அதியமான் போன்றவர்களின் பண்பாட்டு ஆய்வுகளை தொடர்ச்சியாக வெளியிட்டது. தியடோர் பாஸ்கரன் சூழியல் சார்ந்த கட்டுரைகளை தொடர்ச்சியாக காலச்சுவடில் எழுதினார்.

ஜே.பி. சாணக்யா, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்த ராணி முதலான பல இளம் படைப்பாளிகள் தங்களைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் களமாகக் காலச்சுவடு செயல்பட்டது. .

காலச்சுவடு இதழ் தமிழில் தலித் அரசியலையும் ஆய்வையும் முன்னெடுத்த முக்கியமான இதழாகக் கருதப்படுகிறது. ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடில் தலித் வரலாறு சார்ந்த ஆய்வுகளை எழுதினார்.

பதிப்பகம்

காலச்சுவடு பதிப்பகம் 1995-ல் தொடங்கப்பட்டது. தமிழில் நவீன இலக்கிய முன்னோடிகளின் நூல்களை முதன்மையாக வெளியிடுகிறது. இளம்படைப்பாளிகளின் நூல்களும் வெளியிடப்படுகின்றன .

விருதுகள்
  • 2018-ல் ஆண்டு Publishing Next எனும் பதிப்பாளர் அமைப்பு வழங்கும் சிறந்த இந்தியப் பதிப்பகத்திற்கான விருது
  • 2018 ல்ம் சிறந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளுக்காக வழங்கப்படும் ரொமைன் ரோலண்ட் விருதும் வழங்கப்பட்டது.
  • 2019 சிறந்த புத்தகத் தயாரிப்புக்கான விருதை இந்திய பதிப்பாளர் கூட்டமைப்பு (FIP) வழங்கியது.

இலக்கிய இடம்

தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்து, தலித்துகள், விளிம்பு நிலை மக்களின் படைப்புக்கள், அம்மக்களின் வாழ்வியல்-பண்பாட்டுக் கூறுகள், அது சார்ந்த விமர்சனப் பார்வைகள், ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருவது காலச்சுவடு இதழின் தனித்தன்மை. புனைவிலக்கியத்திலும் முக்கியமான படைப்புகளை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:44:56 IST