under review

திராவிட இயக்க இதழ்கள்

From Tamil Wiki
திராவிட இயக்க இதழ்கள்

திராவிட இயக்கக் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காக 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல இதழ்கள் தோன்றின. திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என பல கட்சிகள் தோன்றின. அவற்றின் கொள்கைகளை விளக்குவதற்குப் பல இதழ்களும் தோன்றின. அவை திராவிட இயக்க இதழ்கள் என்ற பொதுவான பெயரில் அழைக்கப்பட்டன.

திராவிட இயக்க இதழ்களின் மொழி

திராவிட இயக்க இதழ்கள் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் வெளிவந்தன.

திராவிட இயக்க முன்னோடி இதழ்கள்

திராவிட இயக்கம் தோன்றுவதற்கு, தமிழகத்தில் வலுப்பெறுவதற்கு முன்னரே, தமிழில், திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த முன்னோடி இதழ்கள் சில வெளிவந்தன. அவை:

  • திராவிட தீபிகை (1847)
  • சங்கமம் (1870)
  • வெற்றிக் கொடியோன் (1874)
  • திருவாங்கூர் அபிமானி (1874)
  • தியாகநாடு (1874)
  • சென்னை நியாய போதினி (1875) (சட்ட இதழ் )
  • திராவிட வர்த்தமானி (1882)
  • திராவிடப் பாண்டியன் (1885)
  • திராவிட ரஞ்சினி (1886)
  • திராவிட மஞ்சரி (1893)
  • பறையன் (1894)
  • திராவிடவாணி (1895)
  • திராவிட கோகிலம்
  • ஒரு பைசாத் தமிழன் (1907)
திராவிட இயக்க இதழ்கள் நூல்

திராவிட இயக்க இதழ்கள்

திராவிட இயக்க இதழ்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வெளிவந்தன. திராவிட இயக்கம் சார்ந்த கட்சிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்கள், கட்சி சார்ந்து செயல்பட்டவர்கள் திராவிட இயக்க இதழ்களின் ஆசிரியர்களாக, வெளியீட்டாளர்களாக இருந்தனர். திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் பலர் இதழாசிரியர்களாகச் செயல்பட்டனர்.

திராவிட இயக்க வளர்ச்சிக்கு இவ்விதழ்கள் முக்கியப் பங்காற்றின. திராவிட இயக்கத் தலைவர்களையும், அவர்கள் கொள்கைகளையும் மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகத் திராவிட இயக்க இதழ்கள் செயல்பட்டன.

திராவிட இயக்க இதழ்கள் பட்டியல்

எண் இதழ்கள் ஆசிரியர்
1 அங்குசம் இளவேனில்
2 அஞ்சுகம் இளமுருகு பொற்சொல்வி
3 அண்ணா டி.என். இராவணன் (பின்னர் பலர்)
4 அமிர்தம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
5 அமுதம் தமிழ்ப்பிரியன்
6 அரங்கேற்றம் ஆண்டாள்
7 அருவி சித்தார்த்தன் பொன்னிவளவன்
8 அலை ஓசை வேலூர் நாராயணன்
9 அழகு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
10 அறப்போர் இராம. அரங்கண்ணல்
11 அறிவு சாத்தான்குளம் அ.இராகவன்/மு.தமிழ்க்குடிமகன்
12 அறிவுக்கொடி சாமி சிதம்பரனார்
13 அறிவுப்பாதை குத்தூசி குருசாமி, டாக்டர் ஜி.என்.ஜோதிசங்கர்
14 அறிவு வழி கே. பஞ்சாட்சரம்
15 அறுவடை மா.கி. தசரதன்
16 அன்னை சத்தியவாணிமுத்து
17 ஆந்திரப் பிரகாசினி (தெலுங்கு) ஏ.சி. பார்த்தசாரதி நாயுடு
18 இலக்கியம் சுரதா /இலக்குவனார்
19 இலட்சியப்பாதை எல்.கணேசன்
20 இலட்சியவாதி நாஞ்சில் கி.மனோகரன்
21 இளந்தமிழன் நா.ரா. நாச்சியப்பன்
22 இளைய சூரியன் சொர்ணம்/மு.க.ஸ்டாலின்
23 இன ஒலி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
24 இனமணி திருவை அண்ணாமலை
25 இன முழக்கம் சி.பி. சிற்றரசு; கண்ணப்பா வள்ளியப்பா
26 இன முரசு ஆர்க்காடு வீராசாமி
27 இணைப்புக் கிளர்ச்சி கோரா
28 ஈட்டி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
29 ஈரோட்டுப் பாதை சண்முக வேலாயுதம்
30 ஈரோட்டு முழக்கம் கு. சேதுராமன்
31 உடுமலை பீரங்கி மி. வி. இராமசாமி
32 உண்மை ஈ.வெ. இராமசாமி; கோ.இமயவரம்பன்
33 உதயசூரியன் ஆலடி அருணா
34 உதயக்கதிர் சா. கணேசன்
35 உயிர் நாடி டாக்டர் எஸ்தர் பாண்டியன்
36 உரிமை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
37 உலகம் காஞ்சி அமிழ்தன்
38 உரிமை வேட்கை பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன்
39 உழைப்பாளி காட்டூர் கோபால்/க. சுப்பு
40 ஊர்வலம் சுரதா
41 எங்கள் நாடு டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி
42 எண்ணம் ஆலடி அருணா
43 எதிரொலி கில்ஜி
44 எதிரொளி சிங்கமுத்து
45 எரியீட்டி என்.வி. கலைமணி
46 எழிலோவியம் பண்ருட்டி பரமசிவம்
47 கட்டுப்பாடு மாசிலாமணி
48 கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன்
49 கதிர் ப.புகழேந்தி
50 கதிரவன் புலவர் பு. செல்வராசு
51 கலை பாலு பிரதர்ஸ்
52 கலைக்கோயில் கவிஞர் ரவி
53 கலையாரம் பி.எஸ். இளங்கோ
54 கலைப் பொன்னி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
55 கலைப்பூங்கா இராவணன்
56 கலை மன்றம் பால்வண்ணன்
57 கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
58 களஞ்சியம் எஸ். முத்து, இளஞ்செழியன்
59 கழகக்குரல் சி.சிட்டிபாபு, திருவை. அண்ணாமலை
60 கற்பனை (பம்பாய் ) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
61 கனவு உடுமலை சந்திரன்
62 கன்னி இரணியல் ரவி
63 காஞ்சி சி.என். அண்ணாத்துரை
64 காஞ்சி நாடு மலர்வண்ணன்/சி.என்.ஏ.பரிமளம்
65 காண்டீபம் எஸ்.எஸ். மாரிசாமி
66 காவியம் சுரதா
67 காவியப் பாவை கபிலவாணன்
68 கிளர்ச்சி தட்சிணாமூர்த்தி / இரா.சு.சிங்கப்பழம்
69 குடி அரசு ஈ.வெ.ராமசாமி
70 குத்தூசி எஸ். குருசாமி
71 குமரன் சொ.முருகப்பா
72 குயில் பாரதிதாசன் / வகாப் / கண்ணிமை
73 குரல் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
74 குறள் நெறி சி.இலக்குவனார்
75 குறள் மலர் திருக்குறள் வி.முனிசாமி
76 குறல் முரசு வே. ஆனைமுத்து
77 கூடலரசு கூடலரசு
78 கைகாட்டி மு.தமிழ்க்குடிமகன்
79 கொள்கைமுரசு ஆர்.மணிமாறன்
80 கோட்டை நிருபர் சீனிவாசன்
81 கோவைமுரசு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
82 சங்க இலக்கியம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
83 சங்கநாதம் ச.பழநிவேலன்
84 சங்கொலி மயிலை ப.சீனிவாசன்; சோலை இருசன்; வைகோ; க.திருநாவுக்கரசு
85 சண்டமாருதம் சொ.முருகப்பா
86 சபதம் வலம்புரிஜான்
87 சமத்துவம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
88 சமதர்மம் வி.பார்த்தசாரதி
89 சமநீதி ஈரோடு சின்னச்சாமி / எம்.ஜி.ஆர்./ சொர்ணம்
90 சமரசம் சுல்தான் பக்தாதி
91 சாரதி எஸ்.ஆர். திருவேங்கடம்
92 சாக்ரடீஸ் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
93 சிந்தனை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
94 சிந்தனையாளன் வே. ஆனைமுத்து
95 சீர்திருத்தம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
96 சுடரொளி புதுவைச் சிவம்
97 சுயமரியாதை மயிலை ப.சீனிவாசன்
98 சுயமரியாதைத் தூது ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
99 சுயமரியாதைத் தொண்டன் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
100 சுரதா சுரதா
101 சூறாவளி தட்சிணா / எஸ்.சுவாமிநாதன்
102 செங்கதிரோன் செ.கந்தப்பன்
103 செண்பகம் புலவர் அறிவுடைநம்பி
104 சோதனை கவியரசு காமராசன்
105 ஞாயிறு புதுவைச் சிவம் / ஏ.கே.வேலன்
106 தஞ்சை அமுதம் முத்துப்பேட்டை தருமலிங்கம்
107 தமிழகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
108 தமிழன் சி.பா. ஆதித்தனார், பி. சிதம்பரம், முரசொலி செல்வம்
109 தமிழரசு எம். மாசிலாமணி முதலியார், பாவலர் பாலசுந்தரம்
110 தமிழ் உலகம் டி.எம். பார்த்தசாரதி
111 தமிழ் ஊழியன் இளமுருகு பொற்சொல்வி
112 தமிழ்த் தென்றல் சதானந்தம்/வி.வி.இராமசாமி
113 தமிழ்ச் சுடர் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
114 தமிழ்ச் சூரன் ஏசுதாசன்
115 தமிழ்ச் செய்தி ஈ.வி.கே.சம்பத்
116 தமிழ்நாடு வரதராஜுலு நாயுடு
117 தமிழ் நிலம் கு.மு.அண்ணல்தங்கோ/பெருஞ்சித்திரனார்
118 தமிழ்ப்பணி வா.மு. சேதுராமன்
119 தமிழ்மணி பார்த்தசாரதி
120 தமிழ் மன்றம் சி.பி.சிற்றரசு
121 தமிழ் முரசு சண்முகம் / தினகரன்
122 தம்பி தில்லை வில்லாளன்
123 தளபதி கோ. இறைமுடிமணி
124 தனி அரசு ஏ.வி.பி. ஆசைத்தம்பி
125 தனி நாடு பி. துரைக்கண்ணு
126 தன்னாட்சி ஏ.கே.வில்வம்
127 தன்மானம் மு. இயலரசன்
128 தாயகம் டி.கே.சீனிவாசன், நல்லுலகம் சுந்தரம்
129 தாய்நாடு டி.கே.சீனிவாசன்
130 தாய்மண் அருமைநாதன்
131 தாரகை ஏ.கே.வில்வம்
132 திராவிடன் ஜே.எஸ். கண்ணப்பர், பக்தவத்சலம் பிள்ளை , என்.வி.நடராசன்
133 திராவிடஸ்தான் மதுரை கூடலரசன்
134 திராவிட அரசு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
135 திராவிட ஏடு திருவாரூர் கே.தங்கராசு
136 திராவிடன் குரல் மயிலை எம்.எஸ். மணி
137 திராவிடக் கூட்டரசு சி.இலக்குவனார்
138 திராவிட கேசரி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
139 திராவிட சினிமா ஏ.வி.பி. ஆசைத்தம்பி
140 திராவிட நாடு (தமிழ்) சி.என். அண்ணாதுரை
141 திராவிட நாடு (மலையாளம் ) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
142 திராவிட மணி டி.எம்.முத்து
143 திராவிட முரசு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
144 திராவிடன் வீரம் நகைமுகன் இராமச்சந்திரன்
145 திருவிடம் எஸ். ஸ்டாலின்; ஜி. கேசவன்; அரிகிருஷ்ணன்
146 திருவிளக்கு க. இராசாராம்
147 தீ செல்லப்பன்
148 தீச்சுடர் இராம. சுப்பையா; சி.பி.சிற்றரசு
149 தீண்டாதார் துயரம் கே.எஸ். மாரிமுத்து
150 தீப்பொறி சி.பி.சிற்றரசு; எம்.கே.டி. சுப்பிரமணியம்
151 தென்னகம் கே.ஏ. மதியழகன்; கே.ஏ.கிருஷ்ணசாமி
152 தென்னரசு எஸ். எஸ். தென்னரசு
153 தென் சேனை பாவலர் பாலசுந்தரம்
154 தென்புலம் தோப்பூர் திருவேங்கடம்
155 தென்னாடு எஸ்.ஆர்.சாமி; கே.ஏ. மதியழகன்; கே.ஏ.கிருஷ்ணசாமி
156 தென்றல் கவிஞர் கண்ணதாசன்
157 தென்றல் திரை கண்ணதாசன்; ஜி.நாகராஜன்; பி.பி. பத்மநாபன்
158 தென்னகத் தலைவன் தினகரன்
159 தொண்டு வி. இராமசாமி, திருச்சி வீராசாமி
160 தொழிலாளர் மித்திரன் காஞ்சி கலியாணசுந்தரம்
161 தேன்கூடு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
162 தோழன் ஏ.பி. சனார்த்தனம்
163 நமது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா
164 நம்நாடு அண்ணாதுரை; இரா.நெடுஞ்செழியன்; சி.பி.சிற்றரசு; இரா.செழியன்; காஞ்சி கலியாணசுந்தரம்
165 நம்நாடு பேசுகிறது க.திருநாவுக்கரசு, இராம. அரங்கண்ணல், எல். கணேசன்
166 நவமணி சுடர் தர்மதேவன் (கண்ணபிரான்)
167 நவயுகம் சி.என். அண்ணாதுரை
168 நக்கீரன் அ.செல்வராசன்; க.திருநாவுக்கரசு; க.சுப்பு
169 நகரத் தூதன் மணவை ரெ.திருமலைசாமி
170 நாடு சி.என்.ஏ. பரிமளம்
171 நாத்திகம் இராமசாமி
172 நிருபர் நிருபர் சீனிவாசன்
173 நிலவு பூ. கணேசன்
174 நீட்டோலை அடியார்
175 நீரோட்டம் அடியார்
176 நெல்லைத் தோழன் எம். எஸ்.சிவசாமி
177 நேர்மை இரா.இளவரி
178 பகுத்தறிவு ஈ. வெ.ரா., சலகை ப.கண்ணன், திருவாரூர் தங்கராசு
179 பரணி சேத்தூர் கூத்தரசன்
180 பிறப்புரிமை ஜார்ஜ் கோமகன்
181 பிரசண்ட மாருதம் இரத்தின சபாபதி
182 புரட்சிக்குயில் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
183 புரட்சி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
184 புரட்சித் தலைவி பாண்டுரங்கன்
185 புரட்சிப் புயல் சல்மான் பாரிசு, கோ. குப்புக்கண்ணன் , குபேரா ஜெயசங்கர்
186 புதுவாழ்வு க. அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத்
187 புதுவை முரசு பாரதிதாசன், சா. குருசாமி, இளஞ்செழியன் ம.
188 புது உலகம் சிங்காரவேலர்
189 புத்துலகம் டி.எஸ். இராமச்சந்திரன்
190 பூந்தோட்டம் வை. திருநாவுக்கரசு
191 பூம்புகார் மா.தங்கவேலர், கோ.ந. இராசன்
192 பூமாலை தில்லை வில்லாளன்
193 பெரியார் குரல் பெங்களூர் இரா.இராசகோபால்
194 பெரியார் நாடு கோவை இராமகிருஷ்ணன்
195 புரட்சி பெரியார் முழக்கம் விடுதலை க.இராசேந்திரன்
196 பொன்னி முருகு. சுப்பிரமணியம்; கா.அப்பாத்துரையார்
197 பொன்மனம் எஸ். திருநாவுக்கரசு
198 போராட்டம் திருவத்திபுரம் மா.நா.இராசமாணிக்கம்
199 போர்க்குரல் புலவர் இளஞ்செழியன்
200 போர்வாள் காஞ்சி மணிமொழியார்; மா.இளஞ்செழியன்; ஏ.கே.வில்வம்; அ. மறைமலையான்
201 மகிழ்ச்சி வி.வி. இராமசாமி, சதானந்தம்
202 மக்களரசு முத்துக்குமாரசாமி
203 மக்களாட்சி இரா. நெடுஞ்செழியன், இளமுருகு பொற்செல்வி
204 மலைச்சாரல் இரா. சோதிவாணன்
205 மறுமணம் மரகதம்மாள்
206 மறுமலர்ச்சி இராமசாமி
207 மறுமொழி வையை நம்பி
208 மன்றம் இரா. நெடுஞ்செழியன்
209 மன்ற முரசு முசிறிபுத்தன்
210 மறவன் மடல் மு. கருணாநிதி
211 சுயமரியாதைத் தொண்டன் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
212 மாலைமணி சி.என். அண்ணாதுரை; மு. கருணாநிதி; கே.ஜி. இராதாமணாளன்; பி.எஸ். இளங்கோ
213 மீண்டும் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
214 மீண்டும் கழகக் குரல் மு.நெடுமாறன்
215 முகில் புலவர் இளஞ்செழியன்
216 முத்தாரம் மு. கருணாநிதி
217 முப்பால் ஒளி கா.அப்பாத்துரையார்
218 முல்லை பாரதிதாசன், கண்ணதாசன், முல்லை முத்தையா
219 முல்லைச்சரம் பொன்னடியான்
220 முரசு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
221 முரசொலி மு. கருணாநிதி; மாறன்; செல்வம்
222 முருகு ந. அறிவழகன்
223 முன்னணி நாஞ்சில் கி.மனோகரன்
224 முன்னேற்றம் கோ. சாரங்கபாணி
225 முன்னேற்ற முரசு மி.வி. முத்துசாமி
226 மொழியாட்சி புலவர் அருணா
227 வணங்காமுடி தேவக்கோட்டை சொக்கலிங்கம்
228 வண்ணப்பூங்கா வாசன்
229 வம்பன் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
230 வழிகாட்டி க.அ. புன்னைமுத்து
231 வாழ்வு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
232 விந்தியம் நாஞ்சில் கி.மனோகரன்
233 விடிவெள்ளி ஈ.வி.கே.சம்பத்/ தெள்ளூர் மு.தருமராசன்
234 விடுதலை ஈ.வெ.இராமசாமி, மணியம்மை, கி.வீரமணி
235 விண்மீன் சுரதா
236 வெடிகுண்டு ஆறுமுகம் ஏ.எஸ்.ஆனந்தம்
237 வெள்ளி வீதி மு. கருணாநிதி
238 வெற்றி பேரிகை இரா. அகவழகன்
239 வெற்றி முரசு மாயவரம் சி.நடராசன்; மல்லியம் கன்னையன்
ஆங்கில இதழ்கள்
1 Dravidian federation S. llakkuvan
2 Dravidian Times The author's name is not known
3 Free thought Dr.G.N. Jothishankar
4 Home Land C.N. Annadurai
5 Home Rule C.N. Annadurai
6 Justice T.M. Nair, R. Ramasamy Mudaliar, T.A.V. Nathan
7 Justicite . The author's name is not known
8 Kalainger International Nathan
9 Liberator A. Krishnaswamy
10 Modern Rationalist The author's name is not known
11 New Justice A.S. Venu
12 Periyar Era V. Anaimuthu
13 Progressive S. Vedaratnam
14 Rationalist S. Ramanathan
15 Revolt S. Gurusamy
16 Rising son Murasoli Maran
17 Sunday Observer P. Balasubramaniam
18 Sunday Times E.V.K.Sampath, R.S. Panidan

உசாத்துணை

  • தமிழ் இணைய மின்னூலகம்
  • திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை, க. திருநாவுகரசு, நக்கீரன் வெளியீடு
  • திராவிட இயக்க இதழ்கள், பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன், புலவர் தமிழ்ப் பித்தன் எம்.ஏ. மணிவாசகர் பதிப்பகம்


✅Finalised Page