under review

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகள் பட்டியல்

From Tamil Wiki
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்-சிலம்பு நா. செல்வராசு (காலச்சுவடு வெளியீடு)

தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளதாக இலக்கிய வரலாற்று நூல்கள் கூறுகின்றன. என்றாலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 96-ஐ விட அதிகம் என்ற கருத்து, தற்கால ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்ச் சிற்றிலக்கிய எண்ணிக்கை

பாட்டியல் நூல்கள் சுட்டும் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை பன்னிரு பாட்டியல் - 65 வெண்பாப் பாட்டியல் - 54 சிதம்பரப் பாட்டியல் - 62 நவநீதப் பாட்டியல் - 63 இலக்கண விளக்கம் - 77 பிரபந்த தீபிகை - 80 தொன்னூல் விளக்கம் - 89 சதுரகராதி - 96

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகள்

96 சிற்றிலக்கிய வகைகளை சதுரகராதி சுட்டியிருப்பினும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை அதை விட அதிகம் என்ற கருத்துக்கள் தற்கால ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகின்றன. புலவர் இரா. இளங்குமரனார் எழுதிய 'இலக்கிய வகை அகராதி’, 360 சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிடுகின்றது.

த. அழகரசு 'தமிழிலக்கியக் கொள்கை தொகுதி 8'-ல், 411 சிற்றிலக்கிய வகைமைகளைக் குறித்துள்ளதாகவும், இஸ்லாம் வழங்கிய சிற்றிலக்கிய வகைமையான ஐந்து புதுவகைகளையும் சேர்த்தால் மொத்தம் 417 வகைச் சிற்றிலக்கிய வகைமைகள் உள்ளதாகவும், சிலம்பு நா. செல்வராசு, தனது ’இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' நூலில் (காலச்சுவடு வெளியீடு) குறிப்பிட்டுள்ளார்

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகள் பட்டியல்

’இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' நூலில் இடம் பெற்றிருக்கும் சிற்றிலக்கிய வகைகளின் பட்டியல்

எண் சிற்றிலக்கிய வகைகள்
1 அக்கரமாலை
2 அகப்பொருட் கோவை
3 அகலக்கவி
4 அகவல்
5 அங்கதச் செய்யுள்
6 அங்கமாலை
7 அடிமுடி உறுப்புகள்
8 அட்டகம்
9 அட்டமங்களம்
10 அண்டகோசம்
11 அந்தாதி (முடி முதல்)
12 அந்தாதித் தொகை (முடிமுதல் தொகை)
13 அநுராகமாலை
14 அம்மானை
15 அமர்க்கள வஞ்சி
16 அரசன் விருத்தம்
17 அரிபிறப்பு
18 அலங்கார சட்கம்
19 அலங்கார பஞ்சகம்
20 அலங்காரம்
21 அலைசல்
22 அவயமாலை
23 ஆடாமணி
24 ஆண் கூடல்
25 ஆற்றுப்படை
26 ஆறெழுத்தலங்காரம்
27 ஆனந்தக் களிப்பு
28 ஆனைத் தொழில்
29 ஆனை விருத்தம்
30 இங்கித மாலை
31 இணைமணி மாலை
32 இயன்மொழி வாழ்த்து
33 இரங்கல்
34 இரட்டைச் சொல்
35 யமக மாலை
36 இரட்டை மணிமாலை
37 இராசாங்க மாலை
38 இருசொல் அலங்காரம்
39 இருபா இருபஃது
40 இல்லற வெள்ளை
41 இலகரி
42 இலட்சுமி விலாசம்
43 இலாலி
44 இலீலை
45 இதழ்குவி பா
46 இதழகல் அந்தாதி
47 இன்ப மடல்
48 இன்னிசைத் தொகை
49 உத்தியாபனம்
50 உந்தீபறத்தல்
51 உயிர் வருக்க மாலை
52 உலா
53 உலா மடல்
54 உலாவணி
55 உழத்திப் பாட்டு
56 உழிஞை மாலை
57 உற்பவ மாலை
58 ஊசல்
59 ஊடல் மாலை
60 ஊர் நேரிசை
61 ஊர் வெண்பா
62 ஊரின்னிசை
63 எச்சரிக்கை
64 எட்டெட்டந்தாதி
65 எண்கூற்றிருக்கை
66 எண்சீர் எண்பது
67 எண்செய்யுள்
68 எண்ணெழுத்து மாலை
69 எழுகூற்றிருக்கை
70 எழுபா எழுபஃது
71 ஏகபாத நூற்றந்தாதி
72 ஏகாதசமாலை
73 ஏசல்
74 ஏற்றப் பாட்டு
75 ஐந்திணைச் செய்யுள்
76 ஐம்படை விருத்தம்
77 ஒருதிணை மாலை
78 ஒருதுறைக் கோவை
79 ஒருபா கூற்றிருக்கை
80 ஒருபா ஒருபஃது
81 ஒருபோகு
82 ஒருவருக்கப் பா
83 ஒலியந்தாதி
84 ஒன்பது கூற்றிருக்கை
85 ஓரெழுத்தந்தாதி
86 கட்டளைக் கலிப்பா
87 கட்டியம்
88 கடாநிலை
89 கடிகை வெண்பா
90 கடைநிலை
91 கண்ணி
92 கண்படை நிலை
93 கணக்கு
94 கதை
95 கதை மொழிமாற்று
96 கப்பல் பாட்டு
97 கலம்பகம்
98 கலம்பக மாலை
99 கலித்தொகை
100 கலியந்தாதி
101 கலியாணசுந்தரம்
102 கலிவெண்பா
103 கவசம்
104 கழிநெடில்
105 களவழி
106 களவுக் கண்ணி
107 கற்பனை விலாசம்
108 கன்னி மயக்கம்
109 கனகாபிடேகம்
110 காஞ்சி மாலை
111 காதல்
112 காப்பு மாலை
113 காமரச மாலை
114 கார் எட்டு
115 காவடிச்சிந்து
116 கான வேட்டம்
117 கீர்த்தனம்
118 கீழ்க்கணக்கு
119 குடை விருத்தம்
120 குதிரை விருத்தம்
121 கும்மி
122 குலோதய மாலை
123 குவிபா ஒருபஃது
124 குழமகன்
125 குளுவ நாடகம்
126 குறத்தியர் பாட்டு
127 குறம்
128 குறள்
129 குறியறி சிந்து
130 குறுந்தொகை
131 கடல் மாலை
132 கடற் சதுக்கம்
133 கேசாதிபாதம்
134 கைக்கிளை
135 கைக்கிளை மாலை
136 கையறுநிலை
137 கொம்பில்லா வெண்பா
138 அந்தாதி
139 கோபப் பிரசாதம்
140 கோமூத்திரி
141 கோவிலொழுகு
142 கோவை
143 கோவைச் சதகம்
144 சக்கர மாற்று
145 சகத்திராங்கி
146 சட்கம்
147 சடானனம்
148 சண்டை சத்தகம்
149 சதப்பதிகம்
150 சதகம்
151 சதுரங்க பந்தம்
152 சந்நிதி முறை
153 சமசங்கனாமம்
154 சமுத்தி
155 சாதகம்
156 சாரப் பிரபந்தம்
157 சாரம்
158 சாழல்
159 சித்திரக்கவி
160 சித்திரபாய செயம்
161 சிந்து
162 சிந்து மோகினி
163 சிலேடா சாகரம்
164 சிலேடை வெண்பா
165 சின்னப்பூ
166 சின்னமாலை
167 சீட்டுக்கவி
168 சுயவரம்
169 செங்கோல் விருத்தம்
170 செந்தமிழ் மாலை
171 செருக்கள வஞ்சி
172 செருக்களவழி
173 செவியறிவுறூஉ
174 சேத்திரத் திருவெண்பா
175 சோடச மாலை பதினாறு
176 பாமாலை
177 சோபனம்
178 ஞானம்
179 தங்கச் சிந்து
180 தசப்பிராதுற்பவம்
181 தசமணி மாலை
182 தசாங்கத்தியல்
183 தசாங்கம்
184 தடாக சிங்காரம்
185 தண்டக மாலை
186 தமிழ்சொரி
187 சிந்தாமணித் தொகை
188 தரும விசேடம்
189 தள சிங்காரம்
190 தனிவெண்பா
191 தாண்டகம்
192 தாரகை மாலை
193 தாலாட்டு
194 தாழிசை மாலை
195 தானை மாலை
196 திக்குவிசயம்
197 திரட்டு
198 திரிபந்தாதி
199 திருச்சின்னம்
200 திருப்பல்லாண்டு
201 திருப்பள்ளியெழுச்சி
202 திருப்பெயர் பொறி
203 திருமறம்
204 திருமுக்கால்
205 திருவாயிரம்
206 திருவியமகம்
207 தும்பை மாலை
208 துயிலெடை நிலை
209 துனி விசித்திரம்
210 தூது
211 தெம்மாங்கு
212 தெய்வக் கையுறை
213 தேவ பாணி
214 தேவாங்க வரையுள்
215 தொகைநிலைச் செய்யுள்
216 தொகை வெண்பா
217 தொடர்நிலைச் செய்யுள்
218 தொள்ளாயிரம்
219 தோணோக்கம்
220 நகர் விருத்தம்
221 நட்சத்திர மாலை
222 நடுவொலியலந்தாதி
223 நதி விசேடம்
224 நயனப்பத்து
225 நவகம்
226 நவகாரிகை மாலை
227 நவரசம்
228 நவரச மஞ்சரி
229 நவமணி
230 நவமணி மாலை
231 நாட்டு விருத்தம்
232 நாமக்கோவை
233 நாம மாலை
234 நாமாவளி
235 நாழிகைக் கவி
236 நாற்பது
237 நாற்பா மூவின மாலை
238 நான்மணிமாலை
239 நானாற்பது
240 நானிலைச் சதகம்
241 நிராகரணம்
242 நிரொட்டகம்
243 நூல்
244 நூற்றந்தாதி
245 நெஞ்சறிவுறூஉ
246 நெடுந்தொகை
247 நெடுமொழி
248 வஞ்சி
249 நொச்சி மாலை
250 நொண்டிச் சிந்து
251 நொண்டி நாடகம்
252 பஃறொடை
253 பகுபடு பாட்டு
254 பஞ்சகம்
255 பஞ்சரத்தினக் கோவை
256 பட்டாபிசேகம்
257 படைப்போர்
258 படைவீட்டுப் பதிகம்
259 பண்ணை விசித்திரம்
260 பத்துப்பாட்டு
261 பதம்
262 பதிகம்
263 பதிற்றந்தாதி
264 பதிகச் சதகம்
265 பதிக பஞ்சகம்
266 பதிற்றுப் பத்தந்தாதி
267 பந்தடி
268 பயோதரப் பத்து
269 பரணி
270 பராக்கு
271 பருவமாலை
272 பல்சந்த மாலை
273 பல்பெயர்
274 பல்லாண்டு
275 பழமொழி
276 பழிமொழிமேல் வைப்பு
277 பள்ளியெழுச்சி
278 பள்ளு
279 பறந்தலைச் சிறப்பு
280 பறை நிலை
281 பன்மணி மாலை
282 பன்னிரு பாமாலை
283 பாதாதிகேசம்
284 பாட்டியல்
285 பாடாண் பாட்டு
286 பாவை
287 பிள்ளைத் தமிழ்
288 பிரிவு சுரம்
289 பிறிதுபடு பாட்டு
290 புகழ்ச்சி மாலை
291 புராணம்
292 புலம்பல்
293 புறநாட்டுச் செய்கை
294 புறநிலை
295 புறம் புல்கல்
296 பூச்சி காட்டல்
297 பூவை நிலை
298 பெயர் நேரிசை
299 பெயரின்னிசை
300 பெருமகிழ்ச்சி
301 மாலை
302 பெருமங்கலம்
303 பொய்ம்மொழி யலங்காரம்
304 பொருள் வஞ்சி
305 போதம்
306 போர்க்கெழு வஞ்சி
307 மங்கல வள்ளை
308 மஞ்சரி மடல்
309 மதன சிங்காரம்
310 மணிமாலை
311 மதன விசயம்
312 மருட்பாப் பிரபந்தம்
313 மறக்கள வஞ்சி
314 மறம்
315 மாதிரக் கட்டு
316 மாலை
317 மாலைமாற்று மாலை
318 மானதவம்
319 முதுகாஞ்சி
320 மும்மண்டிலப்பா
321 மும்மணிக் கோவை
322 மும்மணி மாலை
323 மும்மணியந்தாதி
324 முரண் வஞ்சி
325 மெய்க்கீர்த்தி
326 மெய்ம்மொழியலங்காரம்
327 மேல் வைப்பு
328 மேற்கணக்கு
329 மொழிமாற்று
330 யமக அந்தாதி
331 யாண்டு நிலை
332 யானைவஞ்சி
333 வகுப்பு
334 வச்சிராங்கி
335 வசன சம்பிரதம்
336 வசந்தமாலை
337 வசைப் பாட்டு
338 வஞ்சி மாலை
339 வண்ணம்
340 வண்ண விருத்தம்
341 வணக்கம்
342 வதன சந்திரோதயம்
343 வர்ணிப்பு
344 வரலாற்று வஞ்சி
345 வருக்கக் குறள்
346 வருக்கக் கோவை
347 வருக்க மாலை
348 வருக்கச் சந்த வெண்பா
349 வருக்க எழுத்துகள்
350 வழிநடைச் சிந்து
351 வழிமொழித் திருவிராகம்
352 வளமடல்
353 வள்ளைப்பாட்டு
354 வாகனக் கவி
355 வாகை மாலை
356 வாடாத மாலை
357 வாதோரண மஞ்சரி
358 வாயுறை வாழ்த்து
359 வாழ்த்து
360 வாள் விருத்தம்
361 விசயம்
362 விசய வித்தாரம்
363 விடய சந்திரோதயம்
364 விடுகவி
365 விண்ணப்பம்
366 விருத்தம்
367 வில்லுப்பாட்டு
368 வில் விருத்தம்
369 விலாசம்
370 விளக்கம்
371 விளக்குநிலை
372 வினா விடை
373 வினாவுரை
374 வெண்புணர்ச்சி மாலை
375 வெற்றிக் கரந்தை
376 வேட்டல்
377 வேடர் வினோதம்
378 வேந்தன் குடை மங்கலம்
379 வேடுபறி
380 வேல் விருத்தம்
381 வேனில்மாலை

உசாத்துணை


✅Finalised Page