under review

பிள்ளைத் தமிழ் நூல்கள்

From Tamil Wiki

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழும் ஒன்று. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையிலான குழந்தைகளின் பருவத்தை பத்துப் பருவங்களாகப் பிரித்து இப்பாடல்கள் பாடப்படும். இதில், ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண் பால் பிள்ளைத் தமிழ் என இரு பிரிவுகள் உண்டு. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் போன்றவை தமிழின் புகழ்பெற்ற பிள்ளைத் தமிழ் நூல்களாகும்.

பிள்ளைத் தமிழ் நூல்கள் பட்டியல்

தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களும் புனிதர்கள் மீது பிள்ளைத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளனர். அரசியல் தலைவர்கள் மீதும் பிள்ளைத் தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

பிள்ளைத் தமிழ் நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது:

எண் பிள்ளைத் தமிழ் நூல்கள்
1 அகிலாண்டவம்மை பிள்ளைத் தமிழ்
2 அண்ணா பிள்ளைத் தமிழ்
3 அபிராமி பிள்ளைத் தமிழ்
4 அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ்
5 அருட்பணி அருளப்பன் பிள்ளைத் தமிழ்
6 அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
7 அருணகிரிநாதர் பிள்ளைத் தமிழ்
8 அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத் தமிழ்
9 அருள்மிகு கொளஞ்சியப்பர் பிள்ளைத் தமிழ்
10 அழகர் பிள்ளைத் தமிழ்
11 அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத் தமிழ்
12 ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
13 ஆதிசங்கரர் பிள்ளைத் தமிழ்
14 ஆதிபுரி வடிவுடையம்மன் பிள்ளைத் தமிழ்
15 ஆய்க்குடி முருகன் பிள்ளைத் தமிழ்
16 இயேசுபெருமான் பிள்ளைத் தமிழ் (கவிஞர் ராமநாதன்)
17 இயேசுநாதர் பிள்ளைத் தமிழ் (புலவர் பெ. வைத்தியலிங்கம்)
18 இராகவர் பிள்ளைத் தமிழ்
19 இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
20 இராமாநுஜர் பிள்ளைத் தமிழ்
21 இறை மைந்தர் பிள்ளைத்தமிழ்
22 உமையாம்பிகை பிள்ளைத் தமிழ்
23 உலகம்மை பிள்ளைத் தமிழ்
24 எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்
25 ஏசுநாதர் பிள்ளைத் தமிழ்
26 ஏசுநாதர் பிள்ளைத்தமிழ் (இ.குற்றாலம்)
27 ஏசு பிள்ளைத் தமிழ் (க.லியோனிதின்)
28 ஏசுபிரான் பிள்ளைத் தமிழ் (புலவர் க. ஆனந்தன்)
29 கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத் தமிழ்
30 கண்ணன் பிள்ளைத் தமிழ்
31 கன்னிமரி பிள்ளைத்தமிழ்
32 கதிர்காமம் பிள்ளைத் தமிழ்
33 கம்பன் பிள்ளைத் தமிழ்
34 கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
35 கலைஞர் பிள்ளைத் தமிழ்
36 காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் (இரா . குப்புஸ்வாமி)
37 காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்
38 காந்தியண்ணல் பிள்ளைத் தமிழ் (தி . இளமுருகு)
39 காந்தியண்ணல் பிள்ளைத் தமிழ் (ராய . சொக்கலிங்கம்)
40 காமராசர் பிள்ளைத்தமிழ்
41 காமாட்சியம்மை பிள்ளைத் தமிழ் (ஸ்ரீதேவி கருமாரிதாசர்)
42 காவை முருகன் பிள்ளைத் தமிழ்
43 குமரமலை குமரேசர் பிள்ளைத் தமிழ்
44 குமரமலை பிள்ளைத் தமிழ்
45 குருவாயூரப்பன் பிள்ளைத்தமிழ்
46 குலேத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
47 குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
48 கொங்குக் குமரி பிள்ளைத் தமிழ்
49 கொடியிடையம்மை பிள்ளைத் தமிழ்
50 கோமதியம்மை பிள்ளைத் தமிழ்
51 கௌது முஹிய்யித்தீன் பிள்ளைத் தமிழ்
52 சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ்
53 சிதம்பர சிவகாமியம்மன் பிள்ளைத் தமிழ்
54 சிலுவைத் தியான மாலை
55 சிவஞானபாலைய தேசிகர் பிள்ளைத் தமிழ்
56 சிவப்பிரகாசர் பிள்ளைத் தமிழ்
57 சிவமலை பிள்ளைத் தமிழ்
58 சிவானந்தன் பிள்ளைத் தமிழ்
59 சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
60 சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்
61 சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ்
62 சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ்
63 சுந்தரர் பிள்ளைத் தமிழ்
64 சுவாமி இராமதாஸர் பிள்ளைத் தமிழ்
65 செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
66 செங்குந்தர் பிள்ளைத் தமிழ்
67 செங்கோட்டுவேலர் பிள்ளைத் தமிழ்
68 செவாலியர் தாமசு பிள்ளைத் தமிழ்
69 சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
70 சேசுநாதர் பிள்ளைத் தமிழ்
71 சேது பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத் தமிழ்
72 சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
73 முருகன் பிள்ளைத் தமிழ்
74 சௌந்தரிய நாயகி பிள்ளைத் தமிழ்
75 ஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
76 ஞான சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ்
77 தட்சணாமூர்த்தி பிள்ளைத் தமிழ்
78 தரங்கை வேலாயுதசாமி பிள்ளைத் தமிழ்
79 திருக்கச்சக் குமரக் கோட்டத்து முருகப்பெருமான் பிள்ளைத் தமிழ்
80 திருக்கலசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
81 திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத் தமிழ்
82 திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்
83 திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
84 திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் (மாசிலாமணி தேசிக சுவாமிகள்)
85 திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் ( சொ . சொக்கலிங்கம் செட்டியார்)
86 திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் (கனகராஜக் கவிராயர்)
87 திருத்தணிகை முருகன் பிள்ளைத் தமிழ் (வே . வேங்கடசுப்ரமண்யம் )
88 திருத்தணிகை முருகன் பிள்ளைத் தமிழ் (ஸ்ரீகந்தப்ப முனிவர்)
89 திருநந்தித்தேவர் பிள்ளைத் தமிழ்
90 திருப்பெருந்துறை சிவயோகி நாயகி பிள்ளைத் தமிழ் .
91 திருமயிலை பிள்ளைத் தமிழ்
92 திருமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ்
93 திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்
94 திருமாலிருஞ்சோலை மலை அழகர் பிள்ளைத் தமிழ்
95 திருமுதுகுன்றம் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ்
96 திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத் தமிழ்
97 திருவல்லிக்கேணிப் பெருமான் பிள்ளைத் தமிழ்
98 பிள்ளைமையின்பம் பிள்ளைத் தமிழ்
99 திருவடி மாலை
100 திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ்
101 திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்
102 திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
103 திருவிலஞ்சி குமாரசாமி பிள்ளைத் தமிழ்
104 திருவீழி மிழலை அழகிய மாமுலையம்மை பிள்ளைத் தமிழ்
105 திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்
106 திருவெண்ணெய் நல்லூர் வைகுந்த நாதர் பிள்ளைத் தமிழ்
107 திரு வைகுந்த நாதன் பிள்ளைத் தமிழ்
108 தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
109 தேவக்கோட்டை முருகன் பிள்ளைத் தமிழ்
110 தொன்போசுகோ பிள்ளைத் தமிழ்
111 நாகை நீலாயதாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
112 நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத் தமிழ்
113 நால்வர் பிள்ளைத் தமிழ்
114 பச்சை நாயகி பிள்ளைத் தமிழ்
115 பத்திராசலம் இராமச்சந்திரன் பிள்ளைத் தமிழ்
116 பழமுதிர்சோலை மலை முருகன் பிள்ளைத் தமிழ்
117 பழனி பிள்ளைத் தமிழ்
118 பாகப்பிரியம்மை பிள்ளைத் தமிழ்
119 பாம்பன் சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
120 பாவாணர் பிள்ளைத் தமிழ்
121 பாவேந்தர் பிள்ளைத் தமிழ்
122 புதுவை அருணாசலம் பிள்ளைத் தமிழ்
123 புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ்
124 பெரிய நாயகியம்மன் பிள்ளைத்ததழ்
125 பெரியார் பிள்ளைத் தமிழ்
126 பெரியாழ்வார் பாடிய பிள்ளைத் தமிழ்
127 பெருங்கருணையம்மை பிள்ளைத் தமிழ்
128 மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
129 மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
130 மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்
131 மணவைத் திருவேங்கடமுடையான் பிள்ளைத் தமிழ்
132 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
133 மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ்
134 மயின்மலை பிள்ளைத் தமிழ்
135 மயூர கிரிநாதன் பேரில் பிள்ளைத்தமிழ்
136 மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்
137 மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்
138 முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
139 முத்து வீரப்ப சுவாமி பிள்ளைத் தமிழ்
140 முருகப்ப தேவர் பிள்ளைத் தமிழ்
141 முருகன் பிள்ளைத் தமிழ்
142 யேசுபிரான் பிள்ளைத் தமிழ்
143 யோசிகாத்தையர் பிள்ளைத் தமிழ்
144 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
145 வயிரசுவாமி பிள்ளைத் தமிழ்
146 வயிரவன் கோயில் வடிவுடையம்மன் பிள்ளைத் தமிழ்
147 வள்ளற்பெருமான் பிள்ளைத் தமிழ்
148 வீரமாமுனிவர் பிள்ளைத் தமிழ்
149 வேங்கடேசுவரன் பிள்ளைத் தமிழ்
150 வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ்
151 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பிள்ளைத் தமிழ்
152 வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ்
153 க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்
பிள்ளைத் தமிழ் சுவடி நூல்கள் (அச்சாகாதவை)
1 அனுமார் பிள்ளைத் தமிழ்
2 ஆயலூர் சுப்பிரமணிய சுவாமிகள் பிள்ளைத் தமிழ்
3 ஆழ்வார் பிள்ளைத் தமிழ்
4 கமலாலையம்மன் பிள்ளைத் தமிழ்
5 குழைக்காதன் பிள்ளைத் தமிழ்
6 குறுங்கடி அழகிய நம்பிக் கவிராயர் பிள்ளைத் தமிழ்
7 சத்தியஞான பண்டாரம் பிள்ளைத் தமிழ்
8 சிவகாம சுந்தரி பிள்ளைத் தமிழ்
9 சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
10 சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழ்
11 சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ்
12 சேர்வைக்காரர் பிள்ளைத் தமிழ்
13 சொர்ணபுரி அம்பிகை பிள்ளைத் தமிழ்
14 சொரூபானந்தர் பிள்ளைத் தமிழ்
15 திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழ்
16 திருவாஞ்சியம்மன் மங்கள நாயகி பிள்ளைத் தமிழ்
17 திருவேங்கட பூபன் பிள்ளைத் தமிழ்
18 பதரிவன முருகன் பிள்ளைத் தமிழ்
19 பழனிப் பிள்ளைத் தமிழ்
20 முத்துக்கருப்பண்ணன் பிள்ளைத் தமிழ்
21 வில்லைப் பிள்ளைத் தமிழ்
22 வீரவேலாயுதசுவாமி பிள்ளைத் தமிழ்
அறியவரும் பிற பிள்ளைத் தமிழ் நூல்கள்
1 அம்புலிப் பருவ தியான மாலை
2 அரியக்குடி அலர்மேல் மங்கை பிள்ளைத் தமிழ்
3 ஆண்டியப்ப பிள்ளை பிள்ளைத் தமிழ்
4 அதிபுரி வடிவுடையம்மன் பிள்ளைத் தமிழ்
5 ஆயிஷா நாயகி பிள்ளைத் தமிழ்
6 இராமநந்தர் பிள்ளைத் தமிழ்
7 உண்ணாமுலையம்மை பிள்ளைத் தமிழ்
8 கடம்பர் கோயில் பிள்ளைத் தமிழ்
9 கம்பை பிள்ளைத்தமிழ்
10 கமலாம்பிகை பிள்ளைத் தமிழ்
11 கன்னிமார் பிள்ளைத் தமிழ்
12 தம்பிரான் தோழன் பிள்ளைத் தமிழ்
13 காங்கேயன் பிள்ளைத் தமிழ்
14 குருந்தமலை முருகன் பிள்ளைத் தமிழ்
15 குற்றாலப் பிள்ளைத் தமிழ்
16 கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ்
17 கோட்டி மாதவன் பிள்ளைத் தமிழ்
18 சாந்தலிங்கர் பிள்ளைத் தமிழ்
19 சாலிஹ் வலியுல்லாஹ்பேரில் திருச்சந்தப் பிள்ளைத் தமிழ்
20 சாஹுல் ஹமீது ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
21 சிரவை முருகன் பிள்ளைத்தமிழ்
22 சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத் தமிழ்
23 சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
24 சென்னை ஞானப்பிரகாசர் பிள்ளைத் தமிழ்
25 செந்நெற்கொடி சண்முகநாதன் பிள்ளைத் தமிழ்
26 செப்பறை பிள்ளைத் தமிழ்
27 செய்கு தாவுது வலியுல்லா பிள்ளைத் தமிழ்
28 செய்யது முக்மது புகாரி பிள்ளைத் தமிழ்
29 செயங் கொண்ட சோழீசர் பிள்ளைத் தமிழ்
30 சென்னை முருகன் பிள்ளைத் தமிழ்
31 சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ்
32 சேதுபர்வத வர்த்தனி கவிராயர் பிள்ளைத் தமிழ்
33 சொரூபானந்தர் பிள்ளைத் தமிழ்
34 சோமசுந்தரமூர்த்தி விநாயர் பிள்ளைத் தமிழ்
35 ஞானப்பிள்ளைத் தமிழ்
36 திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்
37 திருச்சந்தப் பிள்ளைத் தமிழ்
38 திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ்
39 தேவநாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
40 தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் பிள்ளைத் தமிழ்
41 நக் ஹசொலி ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
42 நபி நாயகம் பிள்ளைத் தமிழ் (நாஞ்சில் ஷா)
43 நபி நாயகம் பிள்ளைத் தமிழ் (தொண்டி பீர்முகம்மது புலவர்)
44 நபி நாயகம் பிள்ளைத் தமிழ் (செய்யது அபிய்யா சாகிப் புலவர்)
45 நபிகள் நாதர் பிள்ளைத் தமிழ் (இளையான்குடி காதர்கனி)
46 நபிகள் நாதர் பிள்ளைத் தமிழ் (இளையான்குடி சண்முகம் )
47 நபிகள் நாதர் பிள்ளைத் தமிழ் (செய்கு மீரான்புலவர் )
48 நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ்
49 நவநீதக் கிருட்டிணன் பிள்ளைத் தமிழ்
50 நாகூர்ப் பிள்ளைத் தமிழ் (ஷாஹுல் ஹமீதுப்புலவர்)
51 நாகூர்ப் பிள்ளைத் தமிழ் (பிச்சை இபுராகீம் புலவர்)
52 நாகூர்ப் பிள்ளைத் தமிழ் (ஆரிபு நாவலர்)
53 மீரான் சாகிபு ஆண்டவர் பிள்ளைத் தமிழ் (பாட்சா புலவர்)
54 ஷாஹுல் ஹமீது நாயகம் பிள்ளைத் தமிழ்
55 பத்திராசலம் இராமர் பிள்ளைத் தமிழ்
56 பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ்
57 பாளையம் கே.சி. எம் . பிள்ளைத் தமிழ்
58 பிரம்ம வித்தியா நாயகி பிள்ளைத் தமிழ்
59 பிள்ளைக்கவி - பிரான்சிசுப் பிள்ளை
60 புதுவை பிள்ளைத்தமிழ்
61 பெருமணலூர் திருநீற்றம்மை பிள்ளைத்தமிழ்
62 பெருமானார் பிள்ளைத் தமிழ்
63 மணத்தட்டை பிள்ளையார் பிள்ளைத்தமிழ்
64 மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்
65 மீரான் சாஹிபு பிள்ளைத் தமிழ்
66 முகையதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் (செய்யது முகிப்பித்தீன் கவிராஜர்)
67 முகையதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் (சவ்வாதுப் புலவர்)
68 முகையதீன் ஆண்டவர் காரண பிள்ளைத் தமிழ் (அப்துல் காதிறுப்புலவர்)
69 யவனாம்பிகை பிள்ளைத் தமிழ்
70 வடிவுடையம்மன் பிள்ளைத் தமிழ்
71 வள்ளிநாயகி பிள்ளைத் தமிழ்
72 வேதநாயகர் பிள்ளைத் தமிழ்
73 ஹல் நாயகர் பிள்ளைத் தமிழ்
74 ஜயலானியா பிள்ளைத் தமிழ்

உசாத்துணை


✅Finalised Page