under review

அகராதி நூல்கள்

From Tamil Wiki
வீரமாமுனிவரின் சதுரகராதி - தமிழின் முதல் அகராதி நூல் - 1732
பெப்ரியஸ் அகராதி - 1779 (தமிழின் இரண்டாவது அகராதி நூல்)
தமிழ் இலக்கியக் கலைச்சொல் அகராதி
தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதி
கணினி களஞ்சிய அகராதி
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்கள் ‘அகர முதலி’ என்றும் ‘அகராதி’ என்றும் அழைக்கப்படுகின்றன. அகரத்தை முதன்மையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதால், ‘அகர முதலி’; அகரம் + ஆதி = அகராதி. தமிழில் பல்வேறு வகை அகராதி நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’, தமிழின் முதல் அகராதி நூலாகக் கருதப்படுகிறது.

தமிழில் அகராதி நூல்கள் தோற்றம்

அகராதியின் பயன், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், அப்பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் தருவதாகும். பண்டைக் காலத்தில் இவை ‘நிகண்டுகள்’ என அழைக்கப்பட்டன. நிகண்டுகள், அகராதிகள் தோன்ற அடிப்படைக் காரணமான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியர், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியலில், 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அளித்துள்ளார் . இதனை அடிப்படையாகக் கொண்டே தொல்காப்பியர் காலத்திற்குப் பின் ‘உரிச்சொல் பனுவல்களும், நிகண்டுகளும் தோன்றின. இவையே காலமாற்றத்திற்கேற்ப விரிவு கொண்டு அகராதிகளாயின.

தமிழ் அகராதி நூல்களின் பட்டியல்

தமிழின் முதல் அகராதி நூல், வீரமாமுனிவர் இயற்றிய ‘சதுரகராதி’ இது பொதுயுகம் 1732-ல் உருவானது. இதனை அடுத்து, 1779-ல், பெப்ரிசியஸ் பாதிரியார், ‘பெப்ரிசியஸ் அகராதி'யைத் தொகுத்து வெளியிட்டார். தொடர்ந்து பல அகராதி நூல்கள் வெளியாகின.

எண் ஆண்டு அகராதியின் பெயர் ஆசிரியர்/பதிப்பாளர்
1 1732 சதுரகராதி வீரமாமுனிவர்
2 1779 பெப்ரிசியஸ் அகராதி பெப்ரியஸ் பாதிரியார்
3 1834 ராட்லர் தமிழ் அகராதி (நான்கு பாகங்கள்) ராட்லர்
4 1842 மானிப்பாய் அகராதி யாழ்ப்பாணம், சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்து பிள்ளை
5 1850 சொற்பொருள் விளக்கம் அண்ணாசாமிப் பிள்ளை
6 1862 வின்ஸ்லோ-தமிழ் அகராதி வின்ஸ்லோ
7 1869 போப்புத் தமிழ் அகராதி ஜி.யு. போப்
8 1883 அகராதிச் சுருக்கம் விஜயரங்க முதலியார்
9 1893 பேரகராதி காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
10 1897 தரங்கம்பாடி அகராதி (பெப்ரிசியசு அகராதியின் விரிவு) பெப்ரியஸ் பாதிரியார்
11 1899 தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
12 1901 தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
13 1904 தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
14 1908 சிறப்புப் பெயர் அகராதி ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
15 1909 இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி பி. ஆர். இராமநாதன்
16 1910 அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார்
17 1910 தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) கு. கதிரைவேற்பிள்ளை
18 1911 தமிழ்மொழி அகராதி காஞ்சி நாகலிங்க முனிவர்
19 1914 இலக்கியச் சொல்லகராதி அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம்
20 1921 மாணவர் தமிழ் அகராதி எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை
21 1924 சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி ச. சுப்பிரமணிய சாஸ்திரி
22 1925 தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி ச. பவானந்தம் பிள்ளை
23 1926 தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக்கழகம்
24 1928 இளைஞர் தமிழ்க் கையகராதி மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
25 1935 ஜூபிலி தமிழ்ப் பேரகராதி சங்கரலிங்க முதலியார்
26 1935 ஆனந்தவிகடன் அகராதி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு
27 1935 நவீன தமிழ் அகராதி சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
28 1937 மதுரைத் தமிழ்ப் பேரகராதி பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு
29 1938 சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம்
30 1939 தமிழறிஞர் அகராதி சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
31 1939 தமிழமிழ்த அகராதி சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை
32 1939 விக்டோரியா தமிழ் அகராதி எஸ். குப்புஸ்வாமி
33 1940 கழகத் தமிழ்க் கையகராதி சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை
34 1950 செந்தமிழ் அகராதி ந.சி. கந்தையாப் பிள்ளை
35 1951 கம்பர் தமிழ் அகராதி வே. இராமச்சந்திர சர்மா
36 1955 சுருக்கத் தமிழ் அகராதி கலைமகள் ஆபீஸ்
37 1955 கோனார் தமிழ் அகராதி (கையடக்கப் பதிப்பு) ஐயன்பெருமாள் கோனார்
38 1957 தமிழ் இலக்கிய அகராதி பாலூர். து. கண்ணப்ப முதலியார்
39 1964 கழகத் தமிழ் அகராதி கழகப் புலவர் குழு-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
40 1969 லிஃப்கோ தமிழ்-தமிழ் அகராதி லிஃப்கோ நிறுவணம்
41 1979 மணிமேகலைத் தமிழகராதி மணிமேகலைப் பிரசுரம்
42 1980 தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி அனந்தநாராயணன்
43 1984 தமிழ்-தமிழ் அகரமுதலி மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)
44 1984 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி ஞா. தேவநேயப் பாவாணர்
45 1989 தமிழ் இலக்கியக் கலைச்சொல் அகராதி டாக்டர் ப. கோபாலன்
46 2009 தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி அன்னிதாமசு, ஜெ. சரஸ்வதி
47 2010 பெருஞ்சொல்லகராதி தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

இவற்றில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) நூல் பதிப்பும், தமிழ் - தமிழ் அகரமுதலி நூலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று.

பெருஞ்சொல்லகராதி

தமிழ் மற்றும் பிற துறை அகராதி நூல்கள்

அகராதி நூல்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்து மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், வேதம், வேதாந்தம், சைவம், வைணவம், சைவ சித்தாந்தம், கணினி இயல், கணித இயல், வட்டார வழக்கு, மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் வெளிவந்தன.

தமிழில் பல தலைப்புகளில், பல்வேறு பிரிவுகளில் அகராதி நூல்கள் வெளிவந்தன. அவற்றில் சில நூல்களின் பட்டியல்:

எண் பிற அகராதி நூல்கள்
1 அகராதியியல்
2 வேத அகராதி
3 வேதாந்த அகாரதி
4 வேதாகம அகராதி
5 சைவசித்தாந்த அகராதி
6 சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி
7 சைவ சித்தாந்த குறியீட்டுச் சொல்லகராதி
8 சமய சாத்திர அகராதி
9 வைத்திய அகராதி
10 வைத்திய மலை அகராதி
11 வைத்திய மூலிகை அகராதி
12 மூலிகை அகராதி
13 விலங்கியல் அகராதி
14 பழமொழி அகராதி
15 பெரிய புராண சிறப்புப் பெயர் அகராதி
16 வாகட அகராதி
17 எதிர்ப்பத அகராதி
18 கலைச்சொல் அகராதி உயிர் நூல்
19 வேத உரிச்சொல் அகராதி
20 பல்பொருள் அகராதி
21 மணி அகராதி
22 கல்வெட்டுச் சொல்லகராதி
23 கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலி
24 அகராதி நிகண்டு
25 கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
26 கணினி களஞ்சிய அகராதி
27 ரேடியோ அகராதி
28 அறிவியல் அகராதி
29 கணிதவியல் கலைச்சொல் அகராதி
30 தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
31 அறிவியல் தொழில்நுட்ப கலைசொல் களஞ்சிய அகராதி
32 இளைஞர் தமிழ்க் கையகராதி
33 சித்த மருத்துவ அகராதி
34 அனுபவ வைத்திய அகராதி
35 மருத்துவக் களஞ்சியப் பேரகராதி
36 மருத்துவச் சொற்பொருள் அகராதி
37 மருத்துவப் பெயரகராதி
38 திருக்குறள் அகராதி
39 திருமகள் தமிழ் கையடக்க அகராதி
40 திருமகள் தமிழ் கையகராதி
41 சிற்றிலக்கிய அகராதி
42 சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி
43 சிற்றிலக்கியப் புலவர் அகராதி
44 ஐந்து மொழி அகராதி (தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன்)
45 செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 9 பாகங்கள்
46 தமிழ்ப் புலவர் அகராதி
47 தன்வந்திரி நிகண்டு என்னும் மூலிகைக் குண அகராதி
48 கௌரா தமிழ் அகராதி
49 கலைச்சொல் அகராதி
50 சோதிட அகராதி
51 சாரீரச் சொற்கள் அகராதி
52 நர்மதாவின் தமிழ் அகராதி
53 யாழ்ப்பாண அகராதி
54 நுட்பச் சொல் அகராதி
55 சிறப்புச் சொல் துணையகராதி
56 சிறப்புச் சொற்கள் துணை அகராதி
57 மூலிகைகள் மருத்துவ குண அகராதி
58 பச்சிலை மூலிகை அகராதி
59 திருக்குறட் பொருளகராதி
60 சமய சாத்திர அகராதி
61 சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி
62 முல்லை தமிழ் இலக்கிய அகராதி
63 திவ்யப் பிரபந்த அகராதி
64 நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதி
65 திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி
66 தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதி
67 கார்த்திகேயனி புதுமுறை அகராதி
68 இலக்கியவகை அகராதி
69 அறிஞர்கள் தமிழ் அகராதி
70 ஆட்சிச் சொற்கள் அகராதி
71 ஆட்சிச்சொல் இணைப்பகராதி
72 ஆட்சிச் சொல் அங்காடிச் சொல் அகராதி
73 சைகை மொழி அகராதி
74 மலை அகராதி
75 வணிகவியல் அகராதி
76 விலங்கியல் அகராதி
77 தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணையகராதி
78 அணிகலன்கள் அகராதி
79 கணிப்பொறி அகராதி
80 கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி
81 கணினி களஞ்சியப் பேரகராதி
82 மின்னியல், மின்னணுவியல் கலைச்சொல் அகராதி
83 மணிமேகலை கணினி மகா அகாரதி
84 இண்டர்நெட் அகராதி
85 முஸ்லிம் பெயர் அகராதி
86 தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி
87 நவீனத் தமிழ் அகராதி
88 தமிழ் அகராதிக் கலை
89 கழக ஆங்கிலத் தமிழ் அகராதி
90 வழக்குச் சொல் அகராதி
91 வழக்குச் சொல் விளக்க அகராதி
92 விளையாட்டுத்துறை கலைச்சொல் அகராதி
93 சுருக்கத் தமிழ் அகராதி
94 முல்லைப் பாட்டு ஆராய்ச்சி அகராதி
95 தொல்காப்பிய அகராதி
96 எதிர்ப்பத அகராதி
97 எதுகை அகராதி
98 அடுக்குமொழி அகராதி
99 அயற் சொல் அகராதி
100 ஆங்கில மருத்த்துவச் சொல் அகராதி
101 ஆங்கிலச் சொற்களுக்கான பல்பொருள் அகராதி
102 ஆங்கில மற்றும் தென்னக மொழிகளுக்கான அகராதி
103 சித்தர்களின் தமிழ் அகரமுதலி
104 தமிழ் வேதாகம வாக்கிய அகராதி
105 புதிய ஏற்பாடு சொல் பொருள் வேத அகராதி
106 ஆன்மிக அகராதி
107 இலக்கண அகராதி
108 இயற்பியல் அகராதி
109 பொது கைத்தொழில் சிறப்பகராதி
110 இணைச்சொல் அகராதி
111 கலைச்சொல் அகராதி - புள்ளியியல்
112 கலைச்சொல் அகராதி - பொருளாதாரம்
113 கலைச்சொல் அகராதி - புவியியல்
114 கலைச்சொல் அகராதி -பௌதிகம்
115 கலைச்சொல் அகராதி - வேதிப் பொது அறிவு
116 கலைச்சொல் அகராதி - வானநூல்
117 இணைச்சொல் எதிர்ச்சொல் அகராதி
118 கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி
119 கலைவாணன் மாணவர் மொழியாக்க அகராதி
120 அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல் அகராதி
121 கடற்கரைப் பரதவர் கலைச்சொல் அகராதி
122 தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி
123 நடுநாட்டுச் சொல்லகராதி
124 சட்டச் சொல் அகராதி
125 இந்து மத அகராதி
126 தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு அகராதி
127 வைணவக் கலைச்சொல் அகராதி
128 ஆங்கிலம் தமிழ் அகராதி
129 தமிழ் ஸ்ம்ஸ்க்ருத கையகராதி
130 தமிழ் ஹிந்தி வழக்குச் சொல் அகராதி
131 ஸ்ம்ஸ்க்ருத தமிழ் அகராதி
132 மணிமேகலை ஆங்கில ஆங்கிலத் தமிழ் அகராதி
133 தமிழில் புதியமுறை அகராதி
134 பிறமொழி தமிழ் மொழி அகரமுதலி
135 டச்சு - தமிழ் அகராதி
136 செருமன் - தமிழ் அகராதி
137 தமிழ் தமிழ் அகராதி
138 தமிழ்ச் சொற்றொடர் அகராதி
139 உருது - தமிழ் அகராதி
140 அல்ஜமீல் தமிழ் - அரபு அகராதி
141 ஃகாமூஸ் அல்-அலிஃப் - அரபிமொழி தமிழ் சொல்லகராதி
142 வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
143 தமிழ் - வங்காளி - ஆங்கில அகராதி
144 தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி
145 தமிழ் அகராதிக் கலை
146 பாரி தமிழ் அகராதி
147 பால்ஸ் அகராதி
148 பொருளியல் அகராதி
149 மாணவர் தமிழ் அகராதி
150 மாணவர் கையடக்க ஆங்கிலத் தமிழ் அகராதி
151 மூலிகையின் மறைபொருள் குண அகராதி
152 மெய்யப்பன் தமிழ் அகராதி (மெகா பதிப்பு)

உசாத்துணை


✅Finalised Page